‘கார்த்திகேயா 2’ படத்திற்கு பிறகு யுனிக் ஸ்டார் நிகில் தேசிய அளவிலும் பான் இந்தியா அளவிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்பொழுது மற்றொரு பான் இந்திய படமான ‘சுயம்பு’ இவரது இருபதாவது படமாக உருவாகிறது. ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் எபெக்ட் படமாக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகிறது. நடிகர் நிகில் இதற்கு முன்பு பார்த்திராத கதாபாத்திரத்தில் வலுவான போர் வீரராக நடிக்கிறார். இந்த படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் இருவரும் இணைந்து பிக்சல் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் தயாரிக்கின்றனர். தாகூர் மது இந்த படத்தை வழங்குகிறார். போர் பின்னணியில் செங்கோல் ஏந்தியபடி நிகில் மற்றும் சம்யுக்தா இருவரும் இருக்கும்படி ‘சுயம்பு’ படக்குழு மாஸ் போஸ்டர் ஒன்றை நிகில் பிறந்தநாளன்று வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நிகில் தீவிரமாகவும் வலுவானவராகவும் போர்க்களத்தின் நடுவில் வாளேந்தி நிற்கிறார்.…
Read MoreCategory: சினிமா செய்திகள்
விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பரத் !
‘காதல்’, ‘பட்டியல்’, ‘காளிதாஸ்’ போன்ற திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் கவனம் பெற்ற பரத், இந்தப் படத்தில் ஒரு உணர்ச்சிமிக்க மற்றும் ஆழமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இவர் நடிக்கும் கதாபாத்திரம், கதையின் நாகர்வுக்கு மிக முக்கியப் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. கதாபாத்திரத்தின் தீவிரம், ஆழ்மன குழப்பங்கள் மற்றும் உளவியல் சார்ந்த நுணுக்கமான மாற்றங்களை மையமாகக் கொண்ட இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பரத்தின் இன்னொரு பக்கத்தை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தனது அழுத்தமான கதாபாத்திர தேர்வும், திரையில் தோன்றும் விதத்தின் மூலமும் தெலுங்கு ரசிகர்களிடமும் பரிச்சயமானவராக இருக்கும் பரத்துடன் கைகோர்ப்பதன் மூலம், இந்த படம் ஒரு பான் தென்இந்தியா பட உணர்வை வழங்கி, அதன் இருமொழித் தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது. நடிகர் பரத் தேர்வைப் பற்றி இயக்குநர் விஜய் மில்டன் கூறும்பொழுது:…
Read More‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார்!
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரொமான்ஸ், ஹியூமர், எமோஷனல் என அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது. படத்தில் உதவி இயக்குநராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்கு அம்சத்துடன் எடுத்திருக்கிறார்கள். நிஜத்திலும் ருத்ரா ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இதற்கு…
Read Moreகத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !!
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார். இப்போது, அல்லு அர்ஜூன், கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில், இன்னொரு மைல்கல்லாக அமைந்தது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாது…
Read Moreஇந்தியாவின் இரு மெகா சக்திகள், ஹிர்திக் ரோஷன் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், ஒரு புதிய பான்-இந்தியா திரைப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர்!
ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படம் !! இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஹொம்பாலே பிலிம்ஸ், பாலிவுட் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே இந்தியா முழுவதும் ஹிர்திக் ரோஷனின் ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரிய செய்தியாக மாறியுள்ளது. இதைப் பற்றிக் கூறும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது…. “எங்களின் இந்த கூட்டணி மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸில்,…
Read More48 மணி நேரத்தில் முழு படமும் முடித்து திரையிடப்பட இருக்கும் உலக சாதனை திரைப்படம் ‘டெவிலன்’!
ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஈடுபட்டுள்ளனர். ’டெவிலன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (மே 29) மாலை 3 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் (மே 30) மாலை 3 மணி வரை நடைபெறும். 3 மணி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கி, மே 31 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, சரியாக மே 31 ஆம் தேதி, மாலை…
Read Moreஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படம் !!
இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஹொம்பாலே பிலிம்ஸ், பாலிவுட் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே இந்தியா முழுவதும் ஹிர்திக் ரோஷனின் ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரிய செய்தியாக மாறியுள்ளது. இதைப் பற்றிக் கூறும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது…. “எங்களின் இந்த கூட்டணி மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸில், நாங்கள் மொழி எல்லைகளைக் கடந்து மக்கள் விரும்பும் கதைகளைச் சொல்லும் நோக்குடன் பயணிக்கிறோம். ஹிர்திக் ரோஷனுடன்…
Read Moreசண்டைக் காட்சிகளே இல்லாத கேங்ஸ்டர் படம் ” தாவுத் “
கேங்ஸ்டர் படம் என்றாலே அடிதடி வெட்டு குத்து என சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.ஆனால் தற்போது ” தாவுத் ” என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டை காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்த படத்தை TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தங்களது இரண்டாவது படைப்பாக மிக பிரமாண்டாமாக தயாரித்துள்ளனர். பரோல், உடன்பால், பெண்குயின், சேதுபதி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார். சாரா ஆச்சர் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வத்திகுச்சி, காலா போன்ற படங்களில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்த திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோர் முக்கிய…
Read Moreதேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது !!
இந்தியாவில் முதன்முறையாக ஒரு அற்புத உலகத்தை பார்க்க தயாராகுங்கள்! சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும், கார்த்திக் கட்டமனேனி இயக்கும், பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது! ஹனுமான் படம் மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த தேஜா சஜ்ஜா, இப்போது அதைவிட மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்ட திரைப்படமான “மிராய்” படத்தோடு வந்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில், TG விஷ்வபிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கும், இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். காட்சியமைப்பிலும், ஃபேண்டஸி கதைக்களத்திலும் பிரம்மாண்டத்திலும் அசத்தும், டீசர் இந்தியா முழுவதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டீசரில் ஒரு முனிவரின் குரல், கலியுகக் களத்தில் பிறந்த கட்டுப்பாடற்ற சக்தியின்…
Read Moreசர்வதேச தரத்தில் திரைப்பட நகரம்! போனி கபூர் எடுத்த சூப்பர் முடிவு..!!
தயாரிப்பாளர் போனி கபூர் தலைமையிலான பேவியூ புராஜெக்ட்ஸ் எல்எல்பி, 18% வருவாய் பங்குடன் அதிக ஏலதாரராக உத்தரப்பிரதேசத்தில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் உருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டம் விரைவில் தொடங்க உள்ளது. முதல் கட்டத்தில் 13 முதல் 14 மேம்பட்ட திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் 230 ஏக்கரில் ஒரு திரைப்பட நிறுவனம் ஆகியவை உருவாக உள்ளது. இந்த திட்டம் எட்டு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். நொய்டா செக்டார் 21 இல் உள்ள திரைப்பட நகரத்திற்கான லே அவுட் திட்டத்தை போனி கபூர் சமர்ப்பித்துள்ளார் என்பதை யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) தெரிவித்துள்ளது. இந்த கட்டுமானம் சலுகை ஒப்பந்த விதிகளுக்கு இணங்கும் என்று இதன் இயக்குனர் கூறியதாக HT தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஒரு நிறுவனம், நீருக்கடியில் படப்பிடிப்பு ஸ்டுடியோ, விருந்தினர் தங்குமிடங்களுடன்…
Read More
