ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா-வில் இருந்து வெளியான முதல் சிங்கிள் FEAR SONG

மாஸ் நாயகன் என்டிஆரின் ‘தேவரா’ திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் ‘ஃபியர் சாங்’ (fear song) தற்போது வெளியாகியுள்ளது! மாஸ் நாயகன் என்டிஆர் நடித்த ‘தேவரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் உலக அளவில் பார்வையாளர்களைக் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகமான ‘தேவரா பார்ட் 1’ தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. என்டிஆர் பிறந்தநாள் கொண்டாட்டமாக படத்தில் இருந்து ‘ஃபியர் சாங்’ எனத்…

Read More

அண்ணா சாலையில் பிரம்மாண்டமாக துவங்கிய கீதம் வெஜ்ஜின் 11வது கிளை

இந்திய பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள், ‘கீதம் வெஜ்’ சிறந்த தரத்தில் நமது இந்திய உணவுகளை வழங்குகிறோம். பாரம்பரிய இந்திய உணவு வகைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உள்நாட்டு சமையல் பொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயார் செய்கிறோம். சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் பத்து வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் இந்திய உணவின் சுவையை கீதம் மூலம் கொண்டு சென்று வெற்றி பெற செய்த, எங்கள் பார்ட்னர்ஸூக்கும் நன்றி. சென்னையை தளமாகக் கொண்ட ‘கீதம் வெஜ்’ அதன் உயர்தர, தூய்மையான சைவ தென்னிந்திய உணவு வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. நாங்கள் இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிற பகுதிகளான இந்தோ- சைனீஸ், சாட், வட இந்திய உணவு வகைகள் மற்றும் துருக்கிய இனிப்புகள் என பல்வேறு வகையான உணவுகளை வழங்குகிறோம். உணவகங்களைத்…

Read More

கேன்ஸ் விழாவில் போட்டியிடும் ஹிருது ஹாரூனின் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”

பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” ( all we imagine as light ) திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கேன்ஸ் திரை விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில், cannes palme d or 2024 விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் ஃபோர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில், ஹிருது ஹாருன் நாயகனாக…

Read More

கல்கி 2898 கிபியில் பைரவாவின் நண்பன் புஜ்ஜி யார்..? விடை மே 22ல்

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !! கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரான புஜ்ஜியின் அறிமுகம் மே 22, 2024 அன்று வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது ‘From Skratch EP4: Building A Superstar’ என்ற தலைப்பிலான கண்கவர் திரைக்குப் பின்னால் நம்மை ஒரு அசாத்தியமான காட்சி அனுபவத்திற்குள் கூட்டிச் செல்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின். 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. “சூப்பர் ஹீரோ”, “பைரவாவின் சிறந்த…

Read More

விஜய் சேதுபதியின் அசத்தலான ACE பட டைட்டில் டீஸர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஏஸ்’ ( ACE)’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஏஸ்’ எனும் திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் கவனித்திருக்கிறார். கமர்சியல் அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இப்படத்தின். ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சேதுபதியின் தோற்றம் வித்தியாசமாக…

Read More

பிரபலங்களால் பாராட்டப் பெற்ற “கோதையின் குரல்” குறும்படம்

தமிழில் ‘தங்க முட்டை’ மற்றும் தெலுங்கில் ‘பங்காரு குட்டு’ என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி மை கைண்டா ஃபிலிம்ஸ் என்று புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின் பிறந்தநாளான மே 16 (வியாழக்கிழமை) அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மை கைண்டா ஃபிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை கோபிநாத் நாராயணமூர்த்தியின் குருநாதர்களான இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு மற்றும் பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் பலகையை கோபிநாத் நாராயண மூர்த்தி மற்றும் இணை இயக்குநர் கரிகாலன் பிரபலங்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மை கைண்டா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பான ‘கோதையின் குரல்’ குறும்படம் திரையிடப்பட்டது.…

Read More

இயக்குநர் ஆறுமுகக்குமாருடன் விஜய் சேதுபதி இணைந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் டீசர் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘VJS 51’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி…

Read More

மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் ஒருங்கிணைக்கும் இசைஞானியின் இசை நிகழ்ச்சி

இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்களின் சார்பில் அமைப்பாளர்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விழாவினில் திரு அருண் அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது… தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ள இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்து இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ்…

Read More

வெப்பன் படத்தில் சத்யராஜுக்கு வில்லனாக ராஜீவ் மேனன்

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது! குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் எழுத்தாளர்-இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறும்போது, ”இந்த மாதம் உலகம் முழுவதும் உள்ல திரையரங்குகளில் வெளியாக ’வெப்பன்’ திரைப்படம் தயாராகி வருகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படத்தில் எல்லோருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளோம். நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்றும் நம்புகிறேன். சூப்பர் ஹ்யூமன் எலிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லராக ‘வெப்பன்’ படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து…

Read More

விமர்சன ரீதியாகப் பாராட்டுக்களைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” மே 17 முதல் அமேசானில்

மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் “ஹாட் ஸ்பாட்” ஸ்ட்ரீமாகவுள்ளது !!! சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைக் குவித்த, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் “ஹாட் ஸ்பாட்” திரைப்படம் வரும் மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ஸ்ட்ரீமாகவுள்ளது. கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், தினேஷ் கண்ணன் வெளியிட, ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசிய ஹாட் ஸ்பாட் திரைப்படம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கலையரசன், 96 பட…

Read More