“கப்பேலா” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லர் டிராமாவாக உருவாகியிருக்கும் “முரா” படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ரகசியமாக பாதுகாக்கப்படும் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் இளைஞர் குழு, கேங்ஸ்டர், போலீஸ் என பரபரக்கும் சம்பவங்களை சொல்லும் இப்படம், திருவனந்தபுரத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையாக வைத்து, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சரமூடு, கனி குஸ்ருதி மற்றும் மாலா பார்வதி உள்ளிட்ட புதிய இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் மையத்தையும் கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் இந்த டிரெய்லர், கேங்ஸ்டர் ஜானரில் ஒரு புதுமையான திரை அனுபவத்தை தரும் என்பதை உறுதி செய்கிறது. கேன்ஸ் விருது பெற்ற “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”, அமேசான் வெப் சீரிஸ் “க்ராஷ் கோர்ஸ்”, ஹிந்தி திரைப்படம் “மும்பைகார்” மற்றும் தமிழ் திரைப்படமான தக்ஸ் திரைப்படங்களில் நடித்த ஆகியவற்றில் நடித்ததற்காக அறியப்பட்ட ஹிருது ஹாரூன் இப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார். “ஜன கண மன” மற்றும்…

Read More

இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சாரி’ திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பயமுறுத்தும் திகில் கதைகள், யதார்த்தமான கதைகள் மற்றும் பல உண்மை மாஃபியா கதைகளை திரையில் கொண்டு வந்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் ராம்கோபால் வர்மா. அவரது பெருமையை எடுத்துக்காட்டும் விதமாக அவர் இயக்கிய ‘பூத்’ திரைப்படம் பல நகரங்களில் ஹாலோவீன் விழாவிற்காக மீண்டும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பல இளம் திறமையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பில் வெளியாகும் ‘சாரி’ திரைப்படத்தை கிரி கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகும் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. படத்தின் அடிப்படை கரு அதிகப்படியான காதல் பயமுறுத்தும் என்பதுதான். சமூக ஊடகங்களில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்கள் சமூகத்திலும்…

Read More

“‘என்அன்பே’ – மீராகதிரவன் இயக்கத்தில் வரவிருக்கும் ‘ஹபீபி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!”

அவள் பெயர் தமிழரசி ,விழித்திரு ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் ஹபீபி.அரபுச் சொல்லான ஹபீபிக்கு தமிழில் ‘என்அன்பே’ என்று அர்த்தம். இதன் firstlook poster நேற்று வெளியாகி சமூகவளைத்தளங்களில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறும்போது, “இப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன். இருபத்திரண்டுகளுக்கு பிறகு சாத்தியமாகியிருக்கிறது. நமது ஆரவாரமான பேச்சுக்களை ஓதுக்கிவைத்துவிட்டு சகமனிதனின் தோளில் கைகளை போட்டவாறு மனங்களைப்பற்றி பேசவேண்டிய நேரமிது. மனிதத்தையும் அன்பையும் சக மனிதன் மீதான சகிப்புத்தன்மையையும் பேசவேண்டிய தேவையுள்ளது.   இந்த படம் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை பற்றிய படமாக இருந்தாலும் எல்லா மக்களையும் ஈர்க்கக்கூடிய படமாக இருக்கும். இதன் பின்னணியில் ஒரு அழகான காதல்…

Read More

இதை செய்வாரா தளபதி விஜய்… ஹிட் லிஸ்ட் படத்தின் கதாசிரியர் தேவராஜ் கடிதம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழ்நாடு அரசியலில் களமிறங்குவதாக அறிவித்து “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்புகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி பாடல் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன. இந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, “வெற்றிக் கொள்கைத் திருவிழா” என்ற பெயரில் விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் நடைபெற இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பலர் த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் மாநாடு சிறப்பாக நடைபெற…

Read More

மிகத் தரமான, தைரியமான திரைப்படம் நந்தன்” – நடிகர் Rajinikanth பாராட்டு!

நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘நந்தன்’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்… ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்’ என பாராட்டினர். விமர்சகர்களும் ‘நந்தன்’ திரைப்படத்தை கொண்டாடினர். ரசிகர்கள் – விமர்சகர்கள்- திரையுலகினர் – திரையுலக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ‘நந்தன்’ திரைப்படம் , அண்மையில் டிஜிட்டல் தளத்தில் வெளியானது. ‘நந்தன்’ திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி பிரமுகர்களும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்திருக்கிறார்.‌ சூப்பர் ஸ்டார்…

Read More

மாலை 5 மணிக்கு திரைத்துறையின் சிறப்பு ஆளுமைகளுடன் ‘முதல் பார்வை’ அறிமுகம்

வணக்கம். நான் இயக்குநர் மீரா கதிரவன். இன்று மாலை 5 மணியளவில் என்னுடைய மூன்றாவது திரைப்படத்தின் முதல் பார்வையை ( *First Look poster* ) நான் மதிக்கும் திரைத்துறையின் முக்கிய ஆளுமைகள் இணைந்து வெளியிடுகிறார்கள். இந்தப் படத்தை எனது கனவுப்படம் என்றும் சொல்லலாம். இதுபோன்ற ஒரு படம்தான் எனது முதல் படமாக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் திரைத்துறைக்கு வந்தேன். எனக்கு இதை சாத்தியப்படுத்த இருபது வருடங்களாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் வரலாற்றின் பயணத்திலிருந்து பார்த்தால் நூறு ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்றும் சொல்லலாம். எல்லாப் பாகுபாடுகளையும் கடந்து அன்பையும், மனிதத்தையும் விரும்புகிற பலரின் கனவாகவும் இது இருப்பதால் உங்களுடைய பங்களிப்பும் முக்கியமாக இருக்க வேண்டுமெனக் கருதுகிறேன். அன்பிற்குரிய நண்பர்கள் மற்றும் மரியாதைக்குரிய பத்திரிகை, ஊடக நண்பர்கள் தங்கள் வாட்ஸப் குழுக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் இப்படத்தின் முதல்…

Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் தீபாவளியை கொண்டாட தயாராகுங்கள்… கெத்து, அன்பு இருவரும் விருந்து கொடுக்க வருகிறார்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அக்டோபர் 31 முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘லப்பர் பந்து’ படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !! ப்ளாக்பஸ்டர் “லப்பர் பந்து” அக்டோபர் 31 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும்…

Read More

‘கடைசி உலகப் போர் -ஸ்வாக் – லைக் எ டிராகன்: யாகுசா ஆகிய மூன்று படைப்புகளையும் பிரைம் வீடியோவில் ஆஃபருடன் காணத்தவறாதீர்கள்

இந்த வார இறுதியில் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!. பரபரப்பான டிஸ்டோபியன் தமிழ் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘கடைசி உலகப் போர் ‘ – தெலுங்கு மொழியில் வெளியான நகைச்சுவை நாடகமான ‘ஸ்வாக்’ மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானிய மொழியில் வெளியான கிரைம் ஆக்சன் தொடரான ‘லைக் எ டிராகன்: யாகுசா’. இந்த மூன்று புதிய வெளியீடுகளை தவற விடாதீர்கள்! கடைசி உலகப் போர் : 2028 ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்ட ஒரு டிஸ்டோபியன் அறிவியல் புனைவு கதை மற்றும் தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமாகும். கதை- அரசியல் மோதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் டிஸ்டோபியன் எதிர்காலத்தில் சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகியவற்றை கருப்பொருளாக ஆராய்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் அனகா எல். கே., நாசர், நடராஜன் சுப்பிரமணியம், அழகம்பெருமாள்…

Read More

திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, “சார்” பட வெற்றியைக் கொண்டாடிய படக்குழு !!

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக வெளிவந்துள்ள “சார்” திரைப்படத்திற்கு, கிடைத்து வரும் வரவேற்பை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, சார் பட வெற்றியைக் கொண்டாடியுள்ளது படக்குழு. கடந்த வாரம் வெளியான “சார்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்வி எனும் ஆயுதம் நம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தையும், கிராமப்புற ஆசிரியர்களின் வலிமிகுந்த தியாகத்தையும், அழுத்தமாக பேசியுள்ள இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்திற்கு தமிழகமெங்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் மக்களின் பேராதரவில், பெரும் வரவேற்பைப் பெற்ற, “சார்” படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், இயக்குநர் போஸ் வெங்கட்,…

Read More

’செல்லமே’, ‘ஆனந்ததாண்டவம்’ படங்களின் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் அடுத்தப் படைப்பு ‘பிரேக் பாஸ்ட்’!

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரேம் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வெங்கடேஷ்வரா கார்மெண்ட் நிறுவனம் முதன் முறையாக திரைப்படத்துறையில் தடம் பதிக்கிறது. ’நிலாகாலம்’, ‘செல்லமே’, ‘ஆனந்ததாண்டவம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் காந்தி கிருஷ்ணா ’பிரேக் பாஸ்ட்’ என்ற புதிய படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார்.   இந்தப் படத்திற்கு கவி பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்க, படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களுக்கும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தத் தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகியுள்ள இந்தப் பாடல்கள் வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. ராணவ், ரோஸிமின், கிருத்திக் மோகன் மற்றும் அமித்தா போன்ற திறமைமிக்க புதுமுகங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இரண்டு முறை ஊர்வசி பட்டம் வாங்கிய அர்ச்சனா, சம்பத்ராஜ், கஸ்தூரி, மதன் பாப், ரவி மரியா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், மேஹாஶ்ரீ, இயக்குநர்…

Read More