கோடை விடுமுறைக்கு ‘கள்வன்’ படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான ட்ரீட்

இசையமைப்பாளர்- நடிகர் எனப் பன்முகம் கொண்ட ஜிவி பிரகாஷ் குமார், தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட அதேசமயம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரக்கூடிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரின் ‘கள்வன்’ திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.   இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது அனுபவத்தை பகிரும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் பி.வி. ஷங்கரை இதற்கு முன்பு ஒளிப்பதிவாளராகவும் பார்த்திருக்கிறார். ‘கள்வன்’ படத்தின் ஸ்கிரிப்டை ஷங்கர் சொன்னபோது, ​​ஜிவி பிரகாஷால் காடுகளின் சூழலை தெளிவாகக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. ஷங்கர், ஒளிப்பதிவாளராக இருப்பதால், திரைக்கதையுடன் காட்சி நேர்த்தியை திறமையாகக் கலந்து, பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான சினிமா அனுபவத்தை கொடுத்துள்ளார். படத்தைப் பார்த்த ஜிவி பிரகாஷ், இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்த ஒன்றாக இருக்கும் என்று மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும்…

Read More

முதன்முறையாக விக்ரமுடன் ஜோடி சேரும் துஷாரா விஜயன்

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சீயான் 62’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62’ எனும் திரைப்படத்தில் ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர்.…

Read More

மீண்டும் சுடச்சுடச்சுட மழையாய் வரும் “பையா” ஏப்-11ல் டிஜிட்டலில் ரீ ரிலீஸ்

  14 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த பல வெற்றி படங்கள் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சமீப நாட்களாக ரீ ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கையும் அதற்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பையா’ திரைப்படம் புதிய டெக்னாலஜி அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, வரும் ஏப்ரல்-11ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. Nலிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான முன்னோட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன் கமலா திரையரங்கில் ஒரு காட்சி திரையிடப்பட்டது. படம் வெளியானபோது ஏற்பட்ட அதே ஆரவாரத்தை இப்போதும் படம் பார்த்தவர்களிடம் பார்க்க…

Read More

மலையாள திரைப்படமான “பேரடைஸ்” டிரைலரை வெளியிட்டார் மணிரத்னம்.

சமீபத்தில் வெளியாகிய பல நேரடி மலையாள படங்கள் தமிழ் திரையரங்குகளில் சக்கை போடு போடுகின்றன. அதற்கு காரணம் அவற்றின் புது விதமான கதைக்களமும், தமிழ் மக்களை கவரும் வகையில் அவர்கள் சொன்ன விதமுமேயாகும். இவ்வரிசையில் வித்தியாசமான படங்களை எப்பொழுதுமே ஊக்குவிக்கும் இயக்குனரான மணிரத்னம் நேற்று புதிய மலையாள படமான பேரடைசின் டிரைலரை வெளியிட்டார். அவரின் நண்பரும், உலக புகழ் பெற்ற இயக்குனருமான பிரசன்னா வித்தனகே இப்படத்தை இயக்கியுள்ளார். இலங்கைக்கு சுற்றுல்லா சென்ற இளம்தம்பதி அங்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் எப்படி பாதிப்புக்குள்ளாகிறது என்பதே இப்படத்தின் கதைகளமாகும். சென்ற வருடத்தில் பெரிய வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படமான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் கதாநாயகி தர்ஷனா ராஜேந்திரனுடன் இணைந்து ரோஷன் மேத்யூ இப்படத்தில் நடித்துள்ளார். தர்ஷனா ராஜேந்திரன் தமிழில் ஏற்கனவே கவண் மற்றும் விஷாலின் இரும்புத்திரையில்…

Read More

மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படம்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளி பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன்…

Read More

“அமீகோ கேரேஜ்”  படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு !  

People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Action Reaction நிறுவனம் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறார். இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் மகேந்திரன் பேசியதாவது… நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன…

Read More

கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘கார்த்தி 26’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம்…

Read More

கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ மற்றும் 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) மலேசியாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கின. தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் பரிசுத் தொகை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது. பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் ‘மகாகவிதை’ நூலை படித்து மகிழ்ந்த மலேசிய பல்கலைக்கழக தமிழ் அறிஞர்கள் ஐந்து பேர் நூல் குறித்து…

Read More

கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் “ஆண்டவன்”!

வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ‘ஆண்டவன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. நாட்டில் ஒருபுறம் நகரங்கள் வாழ்கிறது. மறுபுறம் கிராமங்கள் அழிந்து கொண்டு வருகிறது. கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை மக்கள் புரிந்து கொண்டு கிராமங்களை வாழவையுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக படத்தின் இயக்குனர் வி.வில்லிதிருக்கண்ன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி உள்ளார். ஒருவர் கஷ்டத்தில் சரியான நேரத்தில் யார் உதவுகிறாரோ அவரே ஆண்டவனாகப் பார்க்கப்படுகிறார் என்பதே படத்தின் கதை. இதில் கே.பாக்கியராஜ் கலெக்டராக நடித்துள்ளார். டிஜிட்டல் விஷன் யூடியூப்பர் மகேஷ் கதையின் நாயகனாக நடிக்க, ஜோடியாக வைஷ்ணவி நடித்துள்ளார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஆதிரா, ஹலோ கந்தசாமி, எம்.கே.ஆர், முத்துச்செல்வம், காக்கா முட்டை ஆயா, உடுமலை ரவி, மங்கி ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். மகி பாலன் கேமராவை கையாள, கபிலேஷ்வர், சார்லஸ்தனா இருவரும்…

Read More

பா.ஜ.க.வுக்கு விளம்பரம் பண்ணல – இச்சாஸ் திறப்பு விழாவில் பார்த்திபன்

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலக புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களை பார்த்து வியந்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முழுமை பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வர்ணம் தீட்டி குத்துவிளக்கை ஏற்றினார். அதனை தொடர்ந்து பெரிய கப்- பில் காஃபி கொண்டு வரப்பட்டு, அதில் மிகச்சிறிய அளவில் உள்ள கப்பில் இச்சாஸ் நிறுவனர் கணேஷுக்கு கொடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உணவக துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவரும், இச்சாஸ் நிறுவனருமான கணேஷ்…

Read More