ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் கம்பெனி இணைந்து தயாரிக்கும் கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது இப்படத்தின் முக்கிய முக்கிய கதாபாத்திரத்தில் தீபா, அப்பு குட்டி , சம்பத் ராம், சேரன் ராஜ்,குருமூர்த்தி, மணிமாறன்,ராஜேஷ்,யாசர், பீட்டர் சரவணன்,வேலு, முகேஷ்,மோகன்,பாலா,மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை கிடுகு படத்தின் இயக்குனர். திரு. வீரமுருகன்.இயக்கி உள்ளார். இசை.ஜெர்சன் படத்தொகுப்பு.விக்னேஷ் வர்ணம்.விநாயகம், ஒளிப்பதிவு.ஜெயக்குமார் மற்றும் ஜேகே பாடலாசிரியர்.குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன். கலை. திலகராஜன்,அம்பேத், நடனம். வெரைட்டி பாலா சவுண்ட் எஞ்சினியர். சந்தோஷ், துணை இணை இயக்குனர் ஜெகன் ஆல்பர்ட். துணை இயக்குனர் பாலாஜி சாமிநாதன்,மகேஷ்,மற்றும் பலர் பணியாற்றி உள்ளனர்
Read MoreCategory: சினிமா செய்திகள்
*மெகா பிரின்ஸ் வருண் தேஜ் “மட்கா” திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது !!
மெகா பிரின்ஸ் வருண் தேஜ் தனது அடுத்த படமான மட்காவுக்காக இதுவரை செய்யாத புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். கருணா குமார் இயக்கத்தில், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மட்கா மன்னனாக உயரும் ஒரு சாதாரண மனிதனின் பயணத்தை விவரிக்கிறது. இந்த டீஸர் கதாநாயகனின் வளர்ச்சியை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டுகிறது, சிறையில் இருக்கும் போது, ஜெயிலர் ஒருவரின் வார்த்தைகளால் ஈர்க்கப்படும் நாயகன், நாட்டில் 90% செல்வத்தைக் கட்டுப்படுத்தும், ஒரு சதவீத பணக்கார குழுவில் தானும் இணைய வேண்டுமெனத் தீர்மானிக்கிறார், லட்சியத்தின் பாதையில், மனித பேராசை பற்றிய புரிதலால் உந்தப்படும் நாயகன், இரக்கமற்ற உலகில் வெற்றியை அடையப் புறப்படுகிறார், செல்வத்தை தேடி அடையும் ஆசை, அவரது வளர்ச்சியை அடுத்தடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்கிறது.…
Read Moreசிலம்பரசன் வெளியிட்ட ‘ராக்கெட் டிரைவர்’ ஃபேன்டஸி பட டிரைலர்
ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் ஃபேன்டஸி என்டர்டெயினர் திரைப்படமாக ‘ராக்கெட் டிரைவர்’ உருவாகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்டார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தனித்துவ கதையம்சம் சார்ந்த பொழுதுபோக்கு படங்கள் மொழி எல்லைகளை கடந்த நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில், ‘ராக்கெட் டிரைவர்’ புதிய படமாக இணையும் என்று தெரிகிறது. இந்தப் படத்தின் டிரெயிலரை வெளியிட்ட நடிகர் சிலம்பரசனுக்கு ஒட்டுமொத்த படக்குழுவினரும் நன்றி தெரிவித்தனர். ‘ராக்கெட் டிரைவர்’ திரைப்படம் சாதாரண ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதை கொண்டுள்ளது. முன்னாள் இந்திய குடியரசு…
Read Moreஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ அக்-11ல் வெளியாகிறது.
பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ அக்-11ல் வெளியாகிறது. கடந்த பல வருடங்களாக தரமான படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் திறமை வாய்ந்த நடிகரான ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ;பிளாக்’ படத்தை தயாரித்துள்ளது. பிரமிப்பூட்டும் டிரைலர் ஏற்கனவே வர்த்தக ரீதியாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் யூட்யூப் மற்றும் சோஷியல் மீடியாக்களில் நிறைய பாசிடிவான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இரண்டு முதன்மை கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவில் படங்கள் அவ்வளவாக வெளிவருவதில்லை. இந்த நிலையில் அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணியின் தனித்துவமான கதைக்கரு பார்வையாளர்களையும் விநியோகஸ்தர்களையும் ஏற்கனவே உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. பிரபல விநியோகஸ்தரான சுப்பையா சண்முகத்தின் SSI புரொடக்சன் இந்தப்படத்தின் தமிழ் நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகையை கொடுத்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம்…
Read Moreபிளாக்பஸ்டர் “டிமான்டி காலனி 2” திரைப்படம், ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல், சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான, “டிமான்டி காலனி 2” திரைப்படம், வெளியான வேகத்தில், 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில், டிஜிட்டல் பிரீமியரில் இப்படம் பல புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, இதன் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகம், ஹாரர் அனுபவத்தின் புதிய கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குகிறது. ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்லும் இப்படத்தை, இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன் ZEE5…
Read Moreபூஜையுடன் தொடங்கிய மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படிப்பிடிப்பு
ஆனந்த் ராஜ் மற்றும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கும் இந்தப் படத்தை அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர். வடசென்னை கதைக்களத்தில் ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் அதிரடி மாற்றங்களை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சுவாரஸ்யமாக சொல்லும் படமாக ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ உருவாகிறது. இந்தப் படத்தில் முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ் மற்றும் ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அஷோக் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கலை இயக்குநராக ராகவா…
Read Moreநெல்சன் வெங்கடேசனின் ‘டிஎன்ஏ’ படத்திற்கு ஜிப்ரானின் பின்னணி இசை
‘டிஎன்ஏ’ படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள். பலவிதமான எமோஷன்ஸ், எனர்ஜி மற்றும் ரசிக்கக் கூடிய பல தருணங்களை படம் கொண்டுள்ளது. இதை காட்சி அனுபவமாக ரசிகர்களுக்கு மேம்படுத்தி கொடுக்க இசையமைப்பாளர் ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையும் படத்தில் அமைந்துள்ளது என்பதை படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் வெளியிடும். க்ரைம் ஆக்ஷன் கதையாக உருவாகி இருக்கும் ‘டிஎன்ஏ’ திரைப்படத்தில் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர்.
Read Moreபிரம்மாண்ட தயாரிப்பில் வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன்
சிபி ராஜ் நடித்த வால்டர் படத்தை வெற்றிகரமாக இயக்கிய இயக்குனர் அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் படைதலைவன் படம் வெகு விரைவில் வெளிவர உள்ளது. வி ஜே கம்பைன்ஸ் சார்பில் பரமசிவம் அவர்கள் தயாரிப்பில், ராஜு காளிதாஸ் அவர்களின் இணை தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம், படை தலைவன். இப்படத்தில் ஆக்சன் அதிரடியில் சண்முகபாண்டியன் விஜயகாந்த் வெறித்தனமாக பெரும் மெனக் கெடல் எடுத்து நடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி படத்தின் வெளியீட்டு வேலைகள் துவங்கி உள்ளன. இசைஞானி இளையராஜா அவர்களின் அற்புதமான இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. கஸ்தூரி ராஜா அவர்கள் முக்கிய கதா பாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்துள்ளார். படை தலைவன் படத்தை ஓப்பன் தியேட்டர் நிறுவனம் சார்பில் ஏ. செந்தில் குமார்…
Read Moreகபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியம் என்ற நாவலை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இது 2022 ஆம் வெளியான ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம். பிரிட்டிஷ் இந்தியாவின் குற்றப் பரம்பரை சட்டத்தையும் அதன் நவீன பரிணாமங்களையும் விவாதிக்கும் முறையில் கபிலன் வைரமுத்து இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த மாக்கியவெல்லி இரண்டாம் பாகத்தின் மைய கதாபாத்திரமாக வருகிறான். மதுரை மாவட்டத்துக்குட்பட்ட எட்டு நாடுகள் என்ற பகுதியில் கதை நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 1801 தொடங்கி 2057 வரையிலான காலக்கட்டத்தின் கதையாக இது எழுதப்பட்டிருக்கிறது. பல வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த இரண்டு ஆண்டுகள் கள ஆய்வுக்கு பின் கபிலன்வைரமுத்து இந்த நாவலை எழுதியிருப்பதாக பதிப்பாளர் வேடியப்பன் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்ரேல் அரசு இணையவெளியில் மேற்கொண்ட முக்கியமான…
Read Moreஇந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் டிரெய்லர்!!
தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லரும் ஒளிபரப்படுகிறது! ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லர் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், அதற்கு முன்பே இப்போது தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லரும் அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்படுகிறது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை பார்வையாளர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான டாம் ஹார்டியின் கடைசி ஆண்டி-ஹீரோ படம் இது. மேலும் மிகவும் பிரபலமான ஆண்டி-ஹீரோ பிரான்சைஸ் இதோடு முடிவுக்கு வருகிறது. த்ரிலிங் தருணங்கள், ஆக்ஷன் என டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் பல தருணங்கள் ரசிகர்களின் கவனம்…
Read More
