வடசென்னை உலகம் பெரிதாகிறது: வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர் – கலைப்புலி s தாணு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது வடசென்னை என்னும் வெற்றி படத்தின் பிரபலமான உலகத்திலிருந்து உருவாகும், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அனைவராலும் பாராட்டப்படும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தில், சிலம்பரசன் டிஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். டிசம்பர் முதல் வாரத்தில் கோவில்பட்டியில் தொடங்கிய அரசன் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடரும். வெற்றிமாறனின் பாணியில் அரசன் படத்தில் உள்ள முக்கியமான காட்சிகளை குழுவினர் தற்போது படமாக்கி வருகின்றனர். விடுதலை படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
நவீனகால குழந்தைகளுக்கான புதிய பாதையை வடிவமைக்கும் வகையில் சென்னையின் முதல் 100% ரெசிடென்ஷியல் கேம்பிரிட்ஜ் பள்ளி ‘சேஜ்ஹில்’!
நவீனகால கல்வி முறையில் துணிச்சலான புதிய பார்வையை வழங்கும் வகையில் சென்னை புறநகரில் முதன்முறையாக ரெசிடென்ஷியல் பள்ளியாக உருவாகியுள்ளது ’சேஜ்ஹில்’. சமகால குடும்ப வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் பெற்றோர் ஒத்துழைப்புடன் கூடிய பள்ளியாகவும் இது இருக்கும். நகர வாழ்க்கையில் தொழில்- குடும்பம் என்ற இரட்டை குதிரையில் பெற்றோர்கள் சவாரி செய்து வர குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான நடைமுறை சிக்கல்களை சமநிலைப்படுத்த இருவருக்குமான இடமாகவும் ‘சேஜ்ஹில்’ இருக்கும். சர்வதேச கல்விமுறை, புதுமையாக்கம், கலாச்சார ஆய்வு மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றை இணைக்கும் அணுகுமுறையை ‘சேஜ்ஹில்’ கொண்டுள்ளது. மாணவர்களை தேர்வுகளுக்கு மட்டுமே தயார்படுத்தாமல் வாழ்க்கை, அறிவுதிறன், படைப்புத் திறமை, எதிர்கால உலகத்திற்கு ஏற்றாற்போல நேரடி கள அனுபவங்களையும் கொடுத்து அவர்களை ‘சேஜ்ஹில்’ தயார்படுத்துகிறது. சென்னையின் கல்வி வடிவமைப்பில் இருந்து ‘சேஜ்ஹில்’லை தனித்துவமாக்குவது அதன் ‘Co-Parenting Value Delivery Engagement Model’. அதாவது,…
Read Moreதமிழின் சிறந்த உளவியல் த்ரில்லர் கதைகளில் ஒன்றாக வெளியாகியுள்ள ‘ஸ்டீபன்’ தற்போது நெட்ஃபிலிக்ஸின் உலகளாவிய டிரெண்ட்ஸ் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் உள்ளது!
மும்பை: உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஒரு வாரத்திற்குள்ளேயே உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பஹ்ரைன், இலங்கை, மாலத்தீவுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய முதல் 10 படங்கள் பட்டியலில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ’ஸ்டீபன்’ இப்போது ஏழாவது இடத்தில் உள்ளது. ‘ஸ்டீபன்’ படத்தை சிலாகித்து சமூகவலைதளங்களில் பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, மற்ற க்ரைம்-த்ரில்லர் ரசிகர்களை ஈர்ப்பதோடு கோமதி சங்கரின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இது படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. படத்தின் கதையை சுற்றியுள்ள பரபரப்பு, பல அடுக்குகள் கொண்ட கதை என இந்த வாரம் வெளியான வெற்றி கதைகளில் ஒன்றாக ‘ஸ்டீபன்’ உள்ளது. படத்தின் வரவேற்பு குறித்து இயக்குநரும் எழுத்தாளருமான…
Read Moreகருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!
சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பு “45: த மூவி” — கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர்-இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குனர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்த படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையிட தயாராகியுள்ளது. ஏற்கனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றாக “45: த மூவி” — கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் டிரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக அறிமுகப்படுத்த உள்ளது. டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் டிரைலர் குறித்து ரசிகர்களிடையே தேசிய…
Read Moreஎம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ‘ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம் சேர்ந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ‘ கிராண்ட் ஃபாதர்’ ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், தெலுங்கு நடிகர் சுனில், ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி ,…
Read Moreமீண்டும் இணையும் 96′ பட புகழ் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கரின் வாரிசும், ’96’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான இளம் நட்சத்திரங்கள் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் ( Origin Studios) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்…
Read Moreஎமோசனல் ஃபேமிலி டிராமா மொய் விருந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
SK Films International சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் C R மணிகண்டன் இயக்கத்தில், ஒரு அழகான ஃபேமிலி எமோசனல் டிராமாவாக உருவாகியுள்ள ‘மொய் விருந்து’ படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப்படத்தின் மையம். மஞ்சப்பை, கடம்பன், மைடியர் பூதம் படங்களில் பணியாற்றிய C R மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் C R மணிகண்டன் கூறுகையில்.., நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, ‘மொய்விருந்து’ நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3…
Read MoreZEE5 அடுத்த அதிரடி சீரிஸ் – ‘ஹார்டிலே பேட்டரி’ டிசம்பர் 16 முதல் தமிழில் ஸ்ட்ரீமிங் ஆகிறது!
தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்குகிறது. நவீன காதலை புதிய கோணத்தில் ஆராய்கிறது—தர்க்கத்துக்கும் உணர்வுக்கும் இடையிலான எல்லைகளைத் தொட்டுப் பார்க்கும் இந்த சீரிஸை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.குரு லக்ஷ்மன் ‘சித்’ ஆகவும், பாதினி குமார் ‘சோஃபியா’வாகவும் நடித்துள்ளனர். Link – https://www.youtube.com/watch?v=vTEzXB8cyGs ‘ஹார்டிலே பேட்டரி’ சோஃபியா என்ற புத்திசாலி விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை. காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையே தவிர வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறவள். தனது பெற்றோர் உட்படப் பலர் அனுபவித்த தோல்வியுற்ற உறவுகளைப் பார்த்த பிறகு, காதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.தனது 16 வயதில், காதலின் உண்மைத்தன்மையை அறிவியல் ரீதியாக அளவிடும் ஒரு…
Read Moreமதுபாலா – இந்திரன்ஸ் நடிக்கும் ‘சின்ன சின்ன ஆசை ‘படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியர் அவருடைய சமூக ஊடக பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஜித் பாபுஜி தயாரித்திருக்கிறார். பெரும் பாராட்டைப் பெற்ற ‘எண்டே நாராயணனுக்கு’ எனும் குறும் படத்திற்கு பிறகு இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கியிருக்கும் திரைப்படம் இது. மேலும் இந்தப் படத்தின் மூலம் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை மதுபாலா கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்து மலையாள திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார். மதுபாலா உடன் தனித்துவமான நடிப்புத் தருணங்களுக்காக பெயர் பெற்ற நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின்…
Read Moreதலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படம் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் !!
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது. தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார். அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது. 1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான “படையப்பா” படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்…
Read More