சிறந்த ஊடகவியலாளர்களுக்கு தென்னிந்திய மீடியா விருதுகள் –அடுத்த மாதம் பெங்களூரில் விழா

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது. இந்த விருது விழாவில் தென்னிந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையான ஊடக நண்பர்களுக்கான நியூ இந்தியன் டைம்ஸ் மீடியா விருதுகள், சிறந்த தொகுப்பாளர் | சிறந்த நிருபர் | சிறந்த வீடியோ எடிட்டர் | சிறந்த வீடியோ கேமராமேன் | சிறந்த நகல் எடிட்டர் | சிறந்த குரல் ஓவர் கலைஞர் | சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது. TNIT குழுமத்தின் CEO ரகுபட் இந்த விருது விழாவை நடத்துகிறார். இந்த விழாவினை பற்றிய அறிமுகத்தை மீடியா நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக TNIT…

Read More

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் தயாரா கும் உணர்வுப் பூர்வமான படம்!!

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது. ‘ உணர்வுப் பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இயக்குநர் கே.எஸ்.அதியமான் இந்தப் படத்தை இயக்குகிறார். மிகச்சிறந்த நடிப்பால் படத்திற்கு உயிரூட்டும் நடிகை ரேவதி இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் விதார்த், லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு என பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில், சஞ்சித், அபிராமி என்கிற இளம் ஜோடியும் அறிமுகமாகின்றனர். இயக்குநர்கள் ராஜ்கபூர் மற்றும், மகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலயா இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படம் பற்றி இயக்குநர் கே.எஸ்.அதியமான் கூறும்போது, “ஒரு அம்மா – பையன், ஒரு கணவன் –…

Read More

நடிகர்கள் ரவி மோகன் & ஜீ. வி.பிரகாஷ் குமார் இணைந்து வெளியிட்ட பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் டீசர்

தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன் – ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற ‘காளிதாஸ்’ படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் , ‘சிங்கம்’ ஜெயவேல் உள்ளிட்ட…

Read More

ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் முதல் பாடல் “நதிவே” வெளியாகியுள்ளது!

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம், கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது. புகழ்பெற்ற தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வழங்குகிறார். இயக்கும் பணியை நடிகராகவும், இப்போது இயக்குநராகவும் செயல்படும் ராகுல் ரவீந்திரன் மேற்கொள்கிறார். முழுமையான காதல் படைப்பாக உருவாகி வரும் இப்படத்திலிருந்து முதல் இசை வெளியீடாக “நதிவே” எனும் பாடல் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள இந்த பாடல், மனதைக் கொள்ளை கொள்ளும் இசையும், ஈர்க்கும் குரலும் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாக உள்ளது. தமிழ் பாடல்வரிகளைக் கவிஞர் ராகேந்து மௌலி எழுதியுள்ளார். அவருடைய வரிகள், இசையுடன் நெருக்கமாக இணைந்து, காதல்…

Read More

ஆகஸ்ட் 8 ஆம் தேதி “பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்”.வெளியீடு படத்தின் தயாரிப்பாளர் கதாநாயகன் ஆதவா ஈஸ்வரா

சென்சார் விதிகளைத் தெரிந்து கொண்டு விட்டுத் தான் படம் எடுக்க வேண்டுமா? கமல்ஹாசன் தனது படங்களில் சென்சார் வெட்டுக்களை எவ்வாறு சந்தித்தார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது, குறிப்பாக விஸ்வரூபம் படம் மத ரீதியாக மிகவும் உணர்திறன் வாய்ந்த பிரச்சினைகள். மேலும் அவர் அதை எப்படி உணர்ந்திருப்பார், எப்படிச் செய்திருப்பார் என்பதும் எனக்குப் புரிகிறது. சென்சார் வாரியம் சுதந்திரத்தில் இன்னும் தாராளமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். “பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்”. படத்தின் தயாரிப்பாளர் கதாநாயகன் ஆதவா ஈஸ்வரா கேள்வி ! திரைப்படத்துறைக்கு வரும் தயாரிப்பாளர்கள் குறைந்து வரும் இந்தக் காலத்தில் வருகிற புதிய தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவதற்குத் தயாரிப்பாளர் சங்கம் சிலவற்றை முறைப்படுத்த வேண்டும் என்று பாய் படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். இது பற்றிய விவரம் வருமாறு: ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத்…

Read More

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘தி குட் வைஃப்’ வெப்சீரிஸில் தனது திறமையான நடிப்பிற்காக நடிகை ப்ரியாமணி விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்று வருகிறார்!

நடிகை ப்ரியாமணி தனது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்து பாராட்டுகள் பெற்று வருகிறார். பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணி ரத்னம், ராம் கோபால் வர்மா மற்றும் அமீர் என தமிழ் சினிமாவின் திறமைமிக்க இயக்குநர்களுடன் பணிபுரிந்தது மட்டுமல்லாது வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற ‘பருத்திவீரன்’ படத்தில் இருந்து, ‘தி ஃபேமிலி மேன்’ வெப்சீரிஸில் அவரது துணிச்சலான மற்றும் உணர்ச்சிகரமான கதாபாத்திரம் என பல கதைகளில் தன்னை நிரூபித்துள்ளார். தற்போது, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ’தி குட் வைஃப்’ இணையத்தொடரில் தனது கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார். இந்தத் தொடரில் அவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதுபற்றி நடிகை ப்ரியாமணி பகிர்ந்து கொண்டதாவது, “பார்வையாளர்களிடம் இருந்து அளவில்லாத அன்பு கிடைத்து…

Read More

இரத்த தானம் செய்த ரசிகர்களை ஊக்கப்படுத்திய நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க ரசிகர்கள் பல்வேறு அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். சென்னையில் உள்ள ரசிகர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் 250 ரசிகர்களை நடிகர் கார்த்தி ஞாற்றுக்கிழமை அன்று நேரில் சந்தித்தார். சென்னை தியாகராய நகரில் இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், இரத்த தானம்…

Read More

‘வேட்டுவம்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழப்பு: இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல்

ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ்…

Read More

இரத்த தானம் செய்த ரசிகர்களை ஊக்கப்படுத்திய நடிகர் கார்த்தி!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க ரசிகர்கள் பல்வேறு அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். சென்னையில் உள்ள ரசிகர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் 250 ரசிகர்களை நடிகர் கார்த்தி ஞாற்றுக்கிழமை அன்று நேரில் சந்தித்தார். சென்னை தியாகராய நகரில் இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், இரத்த தானம்…

Read More

தமிழ் சினிமா ஒரு வசீகரமான புதிய ஹீரோவை வரவேற்கிறது!

‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் ருத்ரா! திரையுலகில் ஒரு புதிய நட்சத்திரம் மலர்வதை பார்க்கும் அந்த இனிமை மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று. அது காதலும், நகைச்சுவையும், நேசமும் நிரம்பிய திரைப்படத்தில் நிகழும்போது, அதற்கு ஒரு மாயாஜாலம் போன்ற உணர்வு ஏற்படுகிறது. தமிழ் சினிமா எப்போதும் புதிய திறமைகளை விரிவான அன்போடு ஏற்கும் சிறப்பைக் கொண்டது. அந்த அன்பைப் பெரும் வரவேற்புடன் பெற்று கொண்டிருக்கிறார் நடிகர் ருத்ரா, இவர் கடந்த வாரம் வெளியான ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற நகைச்சுவையான காதல் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார். ருத்ராவின் இயல்பு வாய்ந்த வசீகரம், வெள்ளந்தியான முகபாவனைகள், நேர்த்தியான நடிப்பு ஆகியவை, குறிப்பாக பெண்கள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது திரையிடையிலான இயல்பு மற்றும் நடிப்பிற்கான…

Read More