இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ . மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது ‘காதல் என்பது பொதுவுடமை’ நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு இந்தபடத்தில் நடித்திருக்கிறார். ரோகிணி, லிஜோமோல் , வினித் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பையும் , அனைவரும் பார்க்க வேண்டிப ஒரு முக்ககிய படம் என்ற பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இன்று வெளியான படத்தின் ரெய்லர் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிப்ரவரி 14 ல் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் & டிஸ்ட்டிபியூட்டர் (CEAD) சார்பில் G.தனஞ்ஜெயன்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், ரவி மோகன் ஜோடியாக அறிமுகமாகிறார்
பல வெற்றிப் படங்களையும் ‘மத்தகம்’ இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாக இவர்களுடன் முக்கிய வேடங்களில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில்…
Read Moreவரவேற்பை பெற்று வரும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘தி ஐ’ ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக்
இசைக்கலைஞர்- பாடகி – பாடலாசிரியர்- தனித்துவமான திறமை மிக்க நடிகை- என பன்முக ஆளுமையான ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் தி ஐ ( The Eye) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி ஐ ‘ ( The Eye) எனும் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், மார்க் ரௌலி, லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இயக்குநரான டாட்னே ஷ்மோன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஸ்ருதிஹாசனின்…
Read More“காதலர் தின சிறப்பாக ஆஹா தமிழ் வெளியிடும் புதிய வெப் சீரிஸ்!”
இந்த காதலர் தினத்தன்று, *ஆஹா தமிழ்* அதன் புதிய வெப் சீரிஸ் *”மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்”* மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிறது. மதுரை பையனுக்கும் சென்னைப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை ஆராயும் ஒரு மனதைக் கவரும் வெப் சீரிஸ் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல இணைய மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஏஞ்செலின் இந்த தொடரின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு இணையாக தொடரின் நாயகனாக கண்ணா ரவி நடிக்கின்றார் .இவர்களுடன் ரேணுகா , குரேஷி, ஷ்யாமா ஷர்மி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். விக்னேஷ் பழனிவேல் இயக்கும் இந்த வெப் சீரிஸ் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது .காதலை கொண்டாடும் இந்த தொடரை காதலர் தினத்தன்று ஆஹா ஓடிடி தளத்தில் காணத்தவறாதீர்கள்.
Read Moreவிமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ரொமாண்டிக் திரில்லர் “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !! N
ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள “தருணம்” திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது. தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார். வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர். ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, உலகமெங்கும்…
Read Moreஜனவரி 24 அன்று ப்ரீமியரான “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தினை, தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய பார்வையாளர்களுக்கு வழங்கும் விதமாகப் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது ~
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, “சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தினை, பார்வையாளர்கள் எளிதாக ரசிக்கும் வகையில், அவர்களின் உள்ளூர் மொழியில் கொண்டு வருகிறது. இயக்குநர் தீரஜ் சர்னா இயக்கத்தில், விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா மற்றும் ரித்தி டோக்ரா ஆகியோரின் நடிப்பில், 24 ஜனவரி 2025 அன்று திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், இந்தியாவின் மிகவும் வேதனையான மற்றும் சர்ச்சைக்குரிய சோகங்களில் ஒன்றான 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை, பின் களமாகக் கொண்ட அரசியல் டிராமா திரைப்படமாகும். நீதியின் உண்மை முகத்தை, ஊடகங்களின் பார்வையை, உண்மையின் விலையை அழுத்தமாகப் பேசும், இந்தத் திரைப்படம் நாடு முழுதும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. குடியரசு தினத்தன்று “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தை ZEE5 பார்வையாளர்களுக்குத் தெலுங்கு மற்றும் தமிழில் வழங்குகிறது. 59…
Read MoreZEE5 வழங்கும், டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடிப்பில், இதயத்தை அதிர வைக்கும் திரில்லர் “ஐடென்டிட்டி” !!
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, ஜனவரி 31, 2025 அன்று ZEE5 ஒரிஜினல் சைக்கலாஜிக்கல் த்ரில்லரான ‘ஐடென்டிட்டி’ திரைப்படத்தினை, ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக ஸ்ட் ரீம் செய்யவுள்ளது. உளவியல் திரில்லராக ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் இப்படத்தினை, தொலைநோக்கு படைப்பாளிகளான அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கியுள்ளனர். பழிவாங்கலைச் சுற்றி, குற்றத்திற்கான நீதியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, ஜனவரி 31 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. இந்த பிளாக்பஸ்டர் படத்தினை தவற…
Read More“அகத்தியா” படத்தின் 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” கல்ச்சுரல் பாடல் வெளியானது. !!
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் ஃபேன்டஸி-ஹாரர்- திரில்லர் படமான “அகத்தியா” படத்தின் மூன்றாவது சிங்கிள், “செம்மண்ணு தானே”, பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புகழ்மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடல், நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மருத்துவ செழுமையைக் கொண்டாடும் தலைசிறந்த படைப்பாக, ரசிகர்களையும், விமர்சகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாடலின் ஆழமான வேரூன்றிய கருப்பொருள்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், இந்தப் பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான “அகத்தியா” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான “அகத்தியா” படம், பிப்ரவரி 28, 2025 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப்படுகிறது. “செம்மண்ணு தானே” என்பது வெறும் மெல்லிசை பாடல் மட்டும் அல்ல; இது நமது நிலத்தின் பாரம்பரியத்திற்கான ஒரு ஆத்மார்த்தமான பயணம். எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்த…
Read Moreபட அதிபரின் தந்தை காலமானார்!!
இரவும் பகலும், போக்கிரி மன்னன், ஒற்றைப் பனைமரம், சிப்பாய், உள்ளிட்ட பல படங்களை தயாரித்த, திருவண்ணாமலை மாட்டத்தைச் சார்ந்த ”RSSS பிக்சர்ஸ்” படத் தயாரிப்பு நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான எஸ். தணிகைவேல் அவர்களின் தந்தை எம்.சீனிவாசன் அவர்கள் 24.01.2025 அன்று இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
Read Moreஆர்யா – அனுராக் காஷ்யப் – கிரீஷ் ஜகர்லமுடி – ராஜ் பி. ஷெட்டி – லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- இணைந்து வெளியிட்ட சசிகுமாரின் ‘மை லார்ட் ‘ பட ஃபர்ஸ்ட் லுக்
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர்யா – பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் – கன்னட திரைப்பட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி – தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிரீஷ் ஜகர்லமுடி – மலையாள திரைப்பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- ஆகிய ஐந்து மொழி திரை ஆளுமைகள் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர்…
Read More