வெயிட்டான கதை – பிரஷாந்த் பெருமிதம்

நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த், அரும்பு மீசையுடன் தன் பயணத்தை பிறகு பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன் ஒரு ஆண் மகனுக்கே உண்டான அழகுடன் வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக . ’ஆணழகன்’ என்ற தலைப்புக்கு உண்மையிலேயே பொருத்தமானவர் பிரசாந்த் என்றால் மிகையல்ல . இவர் மீசை தாடியுடன் இருந்தாலும் அழகு, முழுக்க முழுக்க க்ளீன் ஷேவ் லுக்குடன் தோன்றினாலும் அழகு என்று சொல்லத்தக்க வகையில் இருப்பவர் இவர் மட்டுமே . பிரசாந்தை நகர்ப்புற சாக்லேட் பாய் இளைஞன் என்ற கதாபாத்திரங்களில் மட்டும் சுருக்கிவிட முடியாது. கிராமத்துப் படம், காதல் படம், ஆக்‌ஷன் படம், கதையம்சமுள்ள படங்கள் என பல வகையான படங்களில்…

Read More

அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட முதல் திரைப்படம் மாயன் – செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியீடு

திரைப்பட துறையில் யாரும் எதிர்பாராமல் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம் உண்டு. அத்தகைய படங்கள் பெரும்பாலும் நம்பிக்கை என்ற ஒற்றை அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான படைப்பு தான் அதை வெற்றி படமாக மாற்றும். இந்த வரிசையில் “மாயன்” திரைப்படம் நிச்சயம் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்டதிலேயே அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக “மாயன்” இருக்கிறது. இந்த…

Read More

கனா காணும் காலங்கள் புது சீசன் – அப்டேட் வெளியீடு

 இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான “கனா காணும் காலங்கள்” சீரிஸின், முதல் இரண்டு சீசன்களின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தற்போது ​​’கனா காணும் காலங்கள்’ சீரிஸின் அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘கனா காணும் காலங்கள்’ முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம், மக்கள் மத்தியில் உடனடி ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த சீரிஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர்களது வாழ்வியலைக் காட்டியதால், மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையிலும், அடுத்தடுத்த எபிசோடுகளுக்காக ரசிகர்களிடமிருந்து பெருமளவிலான கோரிக்கைகள் குவிந்ததையும் அடுத்து, டிஸ்னி+…

Read More

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படப்பிடிப்பு!!

நடிகரும் தயாரிப்பாளருமான யாஷ், தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கர்நாடகாவில் உள்ள பல கோயில்களுக்குச் சென்றதைக் காண முடிந்தது. நாள் முழுவதும், அவர்கள் ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுப்ரமண்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயில் என பல கோயில்களில் வழிபாடு செய்தனர். இந்த எதிர்பாராத நிகழ்வு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. எந்தவொரு புதிய திரைப்படத்தையும் தொடங்குவதற்கு முன்பாக, கோயில்களுக்குச் செல்லும் யாஷின் சடங்குடன் இது ஒத்துப்போகிறது என்று குறிப்பிட்டு, ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். படக்குழு உறுதிப்படுத்திய தகவலின் படி, கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படம் ஆகஸ்ட் 8, 2024 அன்று (8-8-8) பெங்களூரில் துவங்கவுள்ளது. இத்திரைப்படம் துவங்கும் தேதியின் கூட்டுத்தொகை 8-8-8 ஆகும். ராக்கிங் ஸ்டார் யாஷுக்கு…

Read More

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ” Sweety Naughty ” படத்தின் படப்பிடிப்பு  துவங்கியது!

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரிக்கும் படத்திற்கு ” Sweety Naughty ” என்று கலகலப்பான பெயரை வைத்துள்ளனர். சூப்பர் ஹிட் படமான உளவுத்துறை படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் மற்றும் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய G. ராஜசேகர் இந்த படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பான் இந்திய பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயகுமார் கலை இயக்குனராக பணிபுரிகிறார். தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற…

Read More

தீரன் நடிக்கும் ‘சாலா’ டிரைலரை அல்லு அர்ஜுன் வெளியிட்டார்; டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு

பீப்பிள் மீடியா ஃபேக்டரி T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில் விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் ‘சாலா’; S.D. மணிபால் இயக்கத்தில் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் விறுவிறுப்பான திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 சாலா வெளியாகிறது Trailer Link: https://www.youtube.com/watch?v=cg41HyGEMuU&t=62s&pp=ygUNc2FhbGEgdHJhaWxlcg%3D%3D தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, ‘சாலா’ எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க உள்ளது. சமீபத்தில் வெளியாக இப்படத்தின் முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து ‘சாலா’ டிரைலரை…

Read More

ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ பட அப்டேட்

 நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌ அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், பௌசி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, பட தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனிக்கிறார். காதலை கொண்டாடும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் தலைப்பினை…

Read More

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் ‘கோட்’ இறுதி கட்ட பணிகள் மும்முரம்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25-வது திரைப்படமும் தளபதி விஜய்யின் 68-வது படமுமான ‘கோட்’ (‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’) படப்பிடிப்பு மற்றும் டப்பிங் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது ‘கோட்’. இப்படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் தளபதி விஜய் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா, தாய்லாந்து, இலங்கை, துனிசியா, தில்லி, ஹைதராபாத், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பில்…

Read More

மாஸ் நாயகன் என்டிஆர் ன் ’தேவாரா’ படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் ‘பத்தவைக்கும் பார்வைக்காரா!!

  கொரட்டாலா சிவா இயக்கத்தில், மாஸ் நாயகன் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ’தேவாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் உருவாகி உள்ளது. என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா கே ஆகியோர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள். பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடித்திருக்க, மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். சமீபத்தில், இந்தப் படத்தில் இருந்து வெளியான ‘ஃபியர் சாங்’ ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று அனைத்து தளங்களிலும் டிரெண்டிங்கில் இருந்தது. இந்தப் பாடலில் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இன்று, ’தேவாரா’வின் இரண்டாவது சிங்கிள் ’பத்தவைக்கும்…

Read More

நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!!!

நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது! உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் தியேட்டர் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் கிரிப்பான கதைக்களத்தை பார்வையாளர்களுக்குத் தருகிறது. நல்லதுக்கும் தீயதுக்கும் இடையில் நடக்கும் போர் பற்றியும் இருபெரும் சக்திகளுக்கு இடையேயான மோதலையும் இந்த டிரெய்லர் காட்டுகிறது. இளமை ததும்பும் காதல், அம்மா செண்டிமெண்ட், இயக்குநர் பூரியின் டிரேட் மார்க்கான மாஸ், ஆக்‌ஷன் என டிரெய்லர் அனைத்து கமர்ஷியல் விஷயங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக, டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் புல்லட் போல ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. பூரியின் ஸ்டைலிஷான காட்சிகளும் கிளைமாக்ஸில் வரும்…

Read More