4 ஆகஸ்ட் 2024 இன்று நேரு வெளியரங்கத்தில் APL Season 4 காலை 6:30 மணியளவில் ஆரம்பித்தது.இது கடந்த 4 பருவங்களாக வெற்றிகரமாக நடைப்பெற்று வருகிறது. விசேஷமாக இந்த 4.ஆம் பருவத்தில் 3 தலைமுறையினரும் பங்கு பெற்றனர். 4 வயது முதல் 55 வயது வரையிலான தடகள வீரர்கள் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வினை மேலும் சிறப்பிக்க சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் ஆர்யா, ரெட் ஜெயண்ட் மூவீஸ் திரு.M.செண்பகமூர்த்தி, IAS officer சுப்ரியா சாஹீ, IPS Officer A. மயில்வாகனன், DAC Developers MD திரு. சதீஷ்குமார், ஸ்ரீகோகுலம் குழும நிறுவன V.C Praveen மற்றும் விக்கான் ஷெல்டர்ஸ் ஆகிய பலரும் கலந்து சிறப்பித்தன, மாலை 6 மணியளவில் வெற்றிகரமாக இந்நிகழ்வு நிறைவு பெற்றது.
Read MoreCategory: சினிமா செய்திகள்
ஸ்பை திரில்லர் #G2 லிருந்து ஆறு ஆச்சரியம் தரும் தருணங்கள் – நடிகர் அடிவி சேஷ்
“கூடசாரி” திரைப்படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி, அதன் அடுத்த பாகமான, ஸ்பை திரில்லர் #G2 லிருந்து ஆறு ஆச்சரியம் தரும் தருணங்களை, நடிகர் அடிவி சேஷ் பகிர்ந்திருக்கிறார். “கூடசாரி” படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நட்சத்திர நடிகர் அடிவி சேஷ், தனது டிவிட்டர் பக்கம் வழியே, பல புது அறிவிப்புகளை வெளியிட்டு, ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். முதல் பாகத்தின் புகழைக் கட்டிக்காக்கும் வகையில் , G2 பல புதுமையான அம்சங்களுடன் உயர்தரத்தில் உருவாகிறது. 40% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து ஆறு ஸ்டைலான அதிரடி தருணங்களை வெளியிட்டுள்ளனர். இது படத்தின் சர்வதேச தர உருவாக்கத்தையும் மற்றும் நுட்பத்தையும் முன்னிலைப்படுத்துகிறது. G2 இன் இந்த தருணங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய தளத்திலும் தனித்து நிற்கும், ஒரு ஸ்பை த்ரில்லரை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு…
Read Moreநானியின் ‘தசரா” திரைப்படம், 6 மதிப்புமிக்க ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றது !!
நேச்சுரல் ஸ்டார் நானியின் ஆக்சன் அதிரடி திரைப்படமான “தசரா” திரைப்படம், எதிர்பார்த்தபடியே, ஃபிலிம்ஃபேர் விருதுகளில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது, இவ்விழாவில் ஆறு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. வெண்ணிலா கதாபாத்திரத்தில் கலக்கிய கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். ஃபிலிம்ஃபேர் விருதுகள் தசராவுக்குப் பின்னால் உள்ள படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமையைக் கொண்டாடியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, தொலைநோக்கு அணுகுமுறை மற்றும் புதுமையான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகக் கௌரவிக்கப்பட்டார். ஃபிலிம்ஃபேர் விருதை வென்ற முதல் அறிமுக இயக்குநர் என்ற சாதனையைப் படைத்த அவர், தனது முதல் படத்திலேயே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் கடந்துள்ளார். ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், படத்தின் அற்புதமான காட்சிகளைப் படம்பிடித்த அவரது சிறப்பான பணிக்காக, அங்கீகரிக்கப்பட்டார். தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா…
Read Moreநடிகர் சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. மிக வித்தியாசமான முறையில், மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ள இந்த சீரிஸினை, இயக்குநர் தாமிரா இயக்கியுள்ளார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸில் சத்யராஜுடன் நடிகைகள் சீதா,…
Read Moreவிஜய் தேவரகொண்டா- கௌதம் தின்னனுரி- சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ‘VD 12’ திரைப்படம்- 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ‘ரௌடி’ என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது ‘ஜெர்ஸ்ஸி’ & ‘மல்லி ராவா’ ஆகிய படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘VD 12 ‘எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படம் – அனைத்து தரப்பு ரசிகர்களையும் பரவசப்படுத்தும் வகையில் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்கு தற்போது ‘ VD 12’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு…
Read More‘டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 113.23 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டியுள்ளது!
மார்வெல் ஸ்டுடியோஸின் எபிக் ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ. 113 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனைப் படைத்துள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியதால் திரையரங்குகளில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மார்வெல் ஸ்டுடியோஸின் ‘டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Read Moreகவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம்!!
மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைத் தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். கர்நாடக இசைப் பாடகியும் சமயச் சொற்பொழிவாளருமான விசாகா ஹரி பொற்கிழி பெறுகிறார். கவிஞர் வைரமுத்து வாழ்க்கைக் குறிப்பு: பழைய மதுரை மாவட்டமாய் விளங்கிய இன்றைய தேனி மாவட்டத்தில் வைகை அணையை ஒட்டியுள்ள மெட்டூரில் 1953ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்து பிறந்தார். தந்தை ராமசாமித் தேவர்; தாயார் அங்கம்மாள். உயர்நிலைப் பள்ளிப்படிப்பை வடுகபட்டியில் முடித்த வைரமுத்து…
Read More‘மலைவாழ் மக்கள் கீதம்’ : ‘கெவி’ படத்திற்காக எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் தேனிசை தென்றல் தேவாவின் குரலில் ‘கெவி’ படத்திற்காக உருவாகியுள்ள ‘மலைவாழ் மக்கள் கீதம்’ ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம் சங்கரபாண்டியன், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் பரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தை சுற்றி, அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஜி.பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார். படத்தின் முக்கியமான காட்சியில், கதைக்களத்தில் வசிக்கும் மக்களின்…
Read Moreகேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 இலட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Read More‘சாலா’ டிரைலரை வெளியிடும் அல்லு அர்ஜுன்!
பீப்பிள் மீடியா ஃபேக்டரி T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில் விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் ‘சாலா’; S.D. மணிபால் இயக்கத்தில் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் விறுவிறுப்பான திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 சாலா வெளியாகிறது தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, ‘சாலா’ எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க உள்ளது. சமீபத்தில் வெளியாக இப்படத்தின் முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து ‘சாலா’ டிரைலரை ஆகஸ்ட் 3 அன்று…
Read More
