சிவ்ராஜ்குமாரின் மிரட்டலான “உத்தரகாண்டா” பட தோற்றம் வெளியீடு

கர்நாடக சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மிகவும் எதிர்பார்க்கப்படும் “உத்தரகாண்டா” படத்திலிருந்து அவரது தோற்றத்தை வெளிப்படுத்தும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் “மாலிகா” வேடத்தில் தோன்றும் சிவண்ணாவின் தோற்றம், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரக்டர்கள் மற்றும் படத்தின் போஸ்டர்களை அறிமுகப்படுத்த உத்தரகாண்டா படக்குழு ஒரு தனித்துவமான வழியை தேர்ந்தெடுத்துள்ளது, அந்த வகையில் இப்போது சிவண்ணாவின் முதல் தோற்றம் எங்கெங்கும் பேசு பொருளாக மாறியுள்ளது.   டாக்டர்.சிவராஜ்குமார் மாஸ் மாஸ்டராக இருப்பதால், புதுமையான வழிகளில் தனது புதிய அவதாரங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க தவறியதில்லை. அவருடைய ஒவ்வொரு படமும் அவரின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்த தவறியதில்லை. அந்த வகையில், உத்தரகாண்டாவில் இரத்தக் கறை படிந்த முகத்துடன் சிவன்னாவின்…

Read More

அர்ஜூன் தாஸின் புதிய படத்தில் இணைந்தார் அதிதி சங்கர்

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4 ‘ எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.‌ அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX) வி ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார். ஃபீல் குட் திரைப்படங்களை…

Read More

‘பைரவா’ வாக நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” – சிவராஜ்குமார்

டாக்டர் சிவராஜ்குமாரின் சொந்த பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா, ‘பைரவனா கோனே பாதா’ படத்தை தயாரிக்கிறார். இதுவரை டாக்டர் சிவ ராஜ்குமார் நடித்த திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது. டாக்டர் சிவராஜ் குமார் கவசம் அணிந்து நீண்ட நரை முடியுடன் காட்சியளிக்கும் முதல் தோற்றத்தை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருப்பதால்.. நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. சமீபத்தில் படக்குழுவினர் இப்படத்தின் தலைப்பை வெளியிட்ட போது தலைப்பில் உள்ள தனித்துவத்திற்காகவும், தலைப்பு முழுவதும் கன்னடத்தில் வைத்திருக்க குழு ஒன்றினை தேர்வு செய்ததற்காகவும் ஒருமனதாக பாராட்டப்பட்டது. படத்தைப் பற்றி டாக்டர் சிவ ராஜ்குமார் பேசுகையில், ” நீண்ட நாட்களாக பேசப்படும் படம் இது. அப்பா ஜி கடந்த காலங்களில் இது…

Read More

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில் பிரியங்கா மோகனின் அமைதியான தோற்றம்

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.   பான் இந்திய படைப்பாக உருவாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். கேங் லீடருக்குப் பிறகு நானியுடன் அவர் நடித்த இரண்டாவது படம் இது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக்கை இன்று, தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரியங்கா மோகனின் சாருலதா கதாப்பாத்திரம், அப்பாவி போலீஸ் அதிகாரியாக காட்சியளிக்கிறது. அந்த கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார். அவரது முகத்தில் ஒரு…

Read More

‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தில் நானியின் இரண்டாவது தோற்றம் வெளியீடு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் தோன்றும் புதிய பரிமாணம் இடம் பிடித்திருக்கிறது. ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்- இதுவரை வெளியிட்ட விளம்பரங்களில் சூர்யா அல்லது ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியை ஆக்ரோஷமான இளைஞனாகவே காட்சிப்படுத்தினர்.‌ ஆனால் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே வன்முறையாளர். மற்ற நாட்களில் சூர்யாவின் தோற்றத்தை ரசிக்கவும், அவரது புதிய பரிமாணத்தை அனுபவிக்கவும்.. தற்போது அந்த கதாபாத்திரத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.‌ இந்த போஸ்டரில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நம் பக்கத்து வீட்டு பையனின் அவதாரத்தில், வசீகரிக்கும் புன்னகையுடன் தோன்றுகிறார். மேலும் அந்தப் போஸ்டரில் அவர் பைக் ஓட்டுவது போலும் உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்…

Read More

உலகளவில் 700 கோடி தமிழில் 28 கோடி வசூல் சாதனையில் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’

பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி ‘ திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.   இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 கிபி’. இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான சயின்ஸ் ஃபிக்சன் வித் ஃபேண்டஸி ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரிலான இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத்- ஸ்வப்னா தத் -பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம்…

Read More

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படமாக கேப்டன் மில்லர் தேர்வு

சத்ய ஜோதி பிலிம்ஸின் “கேப்டன் மில்லர்” திரைப்படம், 10வது லண்டன் நேஷனல் ஃபிலிம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை வென்றுள்ளது! 10வது லண்டன் நேஷனல் ஃபிலிம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில், “கேப்டன் மில்லர்” படம், உலகின் பல சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது, எனினும் அனைத்துப் படங்களையும் தாண்டி, லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த மதிப்புமிக்க 10 வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது, சத்யஜோதி பிலிம்ஸின் ‘கேப்டன் மில்லர்’ ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது’ பெற்றுள்ளது. இந்த செய்தினை ரசிகர்கள் தற்போது, உற்சாகத்துடன்…

Read More

இளையராஜா அவதாரம் பட பாணியில் பின்னணி இசை அமைத்த “ஜமா” திரைப்படம்

இசைஞானி இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் ‘கூழாங்கல்’ தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி ‘ஜமா’! பூர்வீகம் மற்றும் அழகியலை ஆதரிக்கும் திரைப்படங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. பல ஆண்டுகளாக, இதுபோன்ற திரைப்படங்கள் நாடு மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்ட பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்டு வருகின்றன. ‘கூழாங்கல்’ திரைப்படத்தை உருவாக்கிய Learn & Teach Productions, தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து ‘ஜமா’ என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது. பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக அவர் கூறுகிறார். ‘ஜமா’ என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை அவர்களின் அனுபவங்களை மையமாகக்…

Read More

ஷாங்காய் ஃபிலிம் ஆர்ட் சென்டரில் ரசிகர்களை சந்தித்த ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி

மார்வெல் ஸ்டுடியோஸ் ‘டெட்பூல் & வால்வரின்’ குளோபல் பிரஸ் டூர் ஷாங்காயில் கோலாகலமாகத் தொடங்கியது! ரியான் ரெனால்ட்ஸ், ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி ஆகியோர் ஷாங்காயில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். மார்வெல் ஸ்டுடியோஸ், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற ‘டெட்பூல் & வால்வரின்’ நிகழ்வுகளின் புகைப்படங்களை வெளியிட்டது. நடிகர்கள் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி ஆகியோர் பண்ட் மாவட்டத்தில், ஷாங்காய் ஃபிலிம் ஆர்ட் சென்டரில் ரசிகர்களை உற்சாகமாக சந்தித்துள்ளனர். மார்வெல் ஸ்டுடியோஸின் ‘டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது

Read More

உலகம் புகழும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து கொண்டிருக்கும் நடிகர் பிரபாஸ்

இந்திய சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் ஆட்சி செய்வது ஏன்..? பிரபாஸின் திரை தோன்றல் மற்றும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் துடிப்பான இளமையுடன் ஏற்று நடித்து, ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைப்பதில் உள்ள அவரது தெளிவான பார்வை… அவரை இந்த தேசத்தின் இதயத் துடிப்பாகவும், வெகுஜன மக்களின் அன்புக்குரியராகவும் மாற்றி இருக்கிறது. நேர்மை, உறுதி தன்மை, பேரார்வம்… ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற பிரபாஸ்.. திரையில் தோன்றும் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக, அனைத்து நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அளித்து , உலகளாவிய அளவில் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்திருக்கிறார். பிரபாஸின் தீவிர ரசிகர் குழு அண்மையில் ஜப்பான் நாட்டிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகை தந்து அவரது சமீபத்திய திரைப்படமான ‘கல்கி 2898 கிபி’ படத்தை கண்டு களித்தனர். இது அனைவரின் மனதையும் கவர்ந்தது. எளிதில் யாராலும் நம்ப இயலாத இந்த…

Read More