டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கும் கள்வன்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மே 14 முதல், இயக்குநர் P.V. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கள்வன்’ திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது . இப்படத்தில் பாரதிராஜா, இவானா, KPY பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது.   காடுகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன், அற்புதமான விஷுவல், மயக்கும் இசை மற்றும் நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பு என “கள்வன்” படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்தது. அரசின் வனக்காப்பாளராக மாற விரும்பும் திருடன் கெம்பன், அந்த வேலையில் சேர அவனுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் தேவைப்படுகிறது. அந்த பணத்தைத் திரட்ட…

Read More

சாய்பல்லவியின் மறுபக்கத்தைக் காட்டும் வீடியோ

நாக சைதன்யா -சந்து மொண்டேட்டி- அல்லு அரவிந்த் – பன்னி வாஸ்- கீதா ஆர்ட்ஸ் ..கூட்டணியில் தயாராகும் ‘தண்டேல்’ படக்குழுவினர்- நாயகியான சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர். நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி ‘லவ் ஸ்டோரி’ எனும் படத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை மயக்கியது. மேலும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் ‘தண்டேல்’ திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்திருப்பதால்.. அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் திரை தோன்றல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் இணைந்து திரையில் தோன்றி ரசிகர்களை வசீகரிக்கவிருக்கிறார்கள். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் அல்லு அரவிந்த் வழங்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் பன்னி வாஸ் தயாரிக்கிறார். இன்று சாய் பல்லவியின் பிறந்தநாள். இதற்காக படக்குழுவினர் நேற்று ஒரு அற்புதமான…

Read More

புராணக் கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கிரித்யன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய பான் இந்தியா படம் அறிவிக்கப்பட்டுள்ளது தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு போர்வீரரின் சிலையின் பின்னணியில் “சபிக்கப்பட்ட நிலத்தின் புராணக்கதை” என்ற தலைப்புடன் கூடிய போஸ்டர் பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. 1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விவரிக்கிறது. பான் இந்தியன் திட்டம் 19 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு சினிமாவாக, பிரம்மாண்டமான பான் இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது.…

Read More

விஜய் தேவரகொண்டா – ரவி கிரண் கோலா இணையும் புதிய பான் இந்திய திரைப்படம்

‘ராஜா வாரு ராணி காரு’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவுடன் மீண்டும் விஜய் தேவரகொண்டா இணைகிறார். எஸ் வி சி புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் 59ஆவது திரைப்படம் இது. விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான நேற்று இந்தப் படம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கத்தியை கையில் வைத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. அதிரடியாக படம் உருவாகிறது எனலாம். மேலும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் டயலாக் படம் மாஸாக இருக்கும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தத் திரைப்படம் கிராமிய பின்னணியில் மிக பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்படுவதாகவும், இது பான் இந்திய அளவிலான கவன ஈர்ப்பை கொண்டிருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். விஜய் தேவரகொண்டா முழுக்க…

Read More

விஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம்…

Read More

அதர்வா-வின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘டி.என்.ஏ’ பட பர்ஸ்ட் லுக்

‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘ஃபர்ஹானா’ படப்புகழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘சித்தா’ படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்ற நிமிஷா சஜயன், கதாநாயகியாக நடிக்கிறார். அதர்வா முரளியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அதர்வா முரளியின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் தனது வெவ்வேறு ஜானர்களைத் தனது முந்தையப் படங்களில் முயற்சி செய்து வெற்றியும் கண்டவர். இவருடன் ‘டிஎன்ஏ’ படத்தில் திறமையான நடிகர்கள்…

Read More

அப்புக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேதுபதி

நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளான இன்று, அவர் கதையின் நாயகனாக ராஜூ சந்ரா இயக்கத்தில் நடித்துள்ள “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் First Look போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி கையால் வெளியிட்டுள்ளனர்! ராஜு சந்ரா எழுதி இயக்கி, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்ரா இருவரும் தயாரித்துள்ளனர். மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜி மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்ரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார். விரைவில் திரைக்கு வருகிறது “பிறந்தநாள் வாழ்த்துகள்”!

Read More

மிகுந்த எதிர்பார்ப்பைப் ஏற்படுத்தி இருக்கும் “போகுமிடம் வெகுதூரமில்லை” பர்ஸ்ட் லுக்

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.  விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். நடிகர் விமல் மற்றும் கருணாஸ் கதாபாத்திரங்களின் பின்னணியில்  ஒரு காரும் இடம்பெற்றிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே உணர்வுப் பூர்வமான கதைக்களத்தில் அற்புதமான அனுபவம் தரும் திரைப்படமாக இருக்குமென்பதை உறுதி செய்வதாக இருந்தது. மிக வித்தியாசமானதாக அமைந்துள்ள ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும், மார்ச்சுவரி  வேன் ஓட்டும் நாயகன் விமல், தனது அவசரப் பணத்தேவைக்காக,…

Read More

வெற்றிமாறன் மற்றும் ஐசரி கணேஷ் இணைந்து கொடுக்கவிருக்கும் இலவச திரைக்கல்வி

வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டுத் திரைப்படக் கல்வியைவழங்குகிறது சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி B.Sc Film Studies (3 Years) , M.Sc. Film and culture studies (2 years), PG Diploma in Media skills (1 year) ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஏட்டுக்கல்வியுடன் செயல்முறைக்கல்வியும் சிறந்த முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ், பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நிறுவனத்தலைவர் இயக்குநர் திரு.வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று (03.05.2024) கையெழுத்தானது. பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையம் : தமிழகம்…

Read More

”டார்லிங்” படத்திற்குப் பின் நான் நடிக்கும் த்ரில்லர் “13” – ஜி.வி.பிரகாஷ்குமார்

இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார் ஜிவி பிரகாஷ். மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் ’13’. இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியது. இன்று (4.5.2024) 13:13 மணியளவில் ஜிவி பிரகாஷ் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார். படம் குறித்து இயக்குநர் விவேக் கூறியிருப்பதாவது, “‘ராட்சசன்’, ‘போர் தொழில்’ படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய…

Read More