சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில், அறிமுக இயக்குனர் நஸ்ரேன் சாம் இயக்கத்தில், பிரஸாந்த் தாவீத், கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் மும்மொழி திரைப்படம் ‘நிக்கிரகன்’. இரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக,  ஒரு எஃப் எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் திடீரென தடம் மாறுகிறது. இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக்கொண்ட அவர்கள், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம்.  நம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும்…

Read More

கே.சி.பொகாடியாவின் “ராக்கி”

சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய் கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். கமிஷனர்  செல்வம் கண்ணியமானவர். அவர் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர்.  எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் செய்கின்ற சமூக விரோதச் செயல்களுக்காக சந்தோஷ் அவர்களைக் கைது செய்து லாக்கப் பில் அடைக்கிறார். சாயாஜி, சுந்தர் இருவரும் சந்தோஷின் உதவியாளர்கள் ராஜா, சேகர் இருவரையும் கைக்குள் போட்டுக் கொள்கின்றனர். லாக்கப்பில் இருந்து தப்பித்து விடுகின்றனர். சந்தோஷ் கொதிப்படைகிறார். அவர்களைக் கைது செய்ய தேடிப்போகிறார். ராக்கியும் அவருடன் செல்கிறது. எம்.எல்.ஏ.சாயாஜி, சுந்தர்,…

Read More

குப்பத்து ராஜா படத்தின் சிறப்பு என்ன? – இயக்குநர் பாபா பாஸ்கர் பேட்டி

அவரது நடனம் பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, புகழப்படுபவையாக இருந்தாலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் ‘டான்ஸ் மாஸ்டர்  ‘ என்றே அழைக்கப்படுகிறார் பாபா பாஸ்கர். நவநாகரீக நடன அமைப்புகளை கொடுக்க அவர் பெரும் முயற்சிகள் எடுத்தாலும், உள்ளூர் விஷயங்களை கலந்து கொடுக்கவும் தவறியதில்லை. அதனால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார்.சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் ‘லோக்கல்’ பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, “உண்மையில் நான் ‘லோக்கல்’ என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை ‘நேட்டிவிட்டி’ என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள்…

Read More

“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”

ஒரு சில தலைவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு தலைவர் தான் டாக்டர் எம். ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எப்போதும் வாழ்ந்து வருகிறார். அவரின் பாடல்களும் காலத்தால் அழியாதவை. பல ஆண்டுகள் மற்றும் தலைமுறைகள் கடந்தாலும் இன்னும் ஆழமாக மனதில் நிற்கக் கூடியவை. தற்போதைய தலைமுறை நடிகர்களில் வணிக ரீதியில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தனது கனா படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார்.தனது இரண்டாவது தயாரிப்பிற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று பெயரிட்டிருக்கிறார். பிளாக் ஷீப் யூடியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற கார்த்திக் வேணுகோபாலன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். “எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். ஒரு நடிகர்…

Read More

பிரம்மாஸ்த்ரா படத்தின் லோகோவை தமிழ் மொழியில் வெளியிட்ட தனுஷ் மற்றும் சூர்யா !!

இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன் , ரன்பீர் கபூர்,  அலியா பாட் , மௌனி ராய் , நாகர்ஜுனா அக்கிநேநி ஆகியோர் நடிக்கும் பிரமாண்ட படம் தான் பிரம்மாஸ்த்ரா . மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் பிரம்மாண்டமான லோகோ வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் லோகோ தமிழ் மொழியில்  வெளியானது.. தமிழில் நடிகர்  தனுஷ் மற்றும் சூர்யா ஆகியோர் மதியம் 2 மணிக்கு வெளியிட்டனர் .தெலுங்கு மொழியில் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியும் ,பிரபல நடிகர் ராணா டகுபடி -யும் காலை 11 மணிக்கு வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிராமாஸ்டரா  திரைப்படம் மூன்று பாகங்களை கொண்டது. அதன் முதல் பாகம் கிறிஸ்துமஸ் 2019 ல் வெளியாக இருக்கிறது. தயாரிப்பு :ஹிரோ யாஷ் ஜோகர் கரண் ஜோகர், அபூர்வா மேஹ்டா , நமிட் மல்ஹோத்ரா , ரன்பீர் கபூர் ,…

Read More

படம் பார்பவர்களை ஏங்க வைக்கும் “ நெடுநல்வாடை “ மார்ச் 15 ல் வெளியாகிறது

உடன் படித்த 50 நண்பர்களின் பண முதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸின் ‘நெடுநல்வாடை. பூ ராமு,இளங்கோ, அஞ்சலி நாயர்,அஜய்நடராஜ்,மைம்கோபி,ஐந்து கோவிலான், செந்தி ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் தயாரிப்பு   :       பி – ஸ்டார் புரொடக்ஷன்ஸ் இசை         :       ஜோஸ் ஃபிராங்க்ளின் ஒளிப்பதிவு :        வினோத் ரத்தினசாமி பாடல்கள் :       கவிப்பேரரசு வைரமுத்து படத்தொகுப்பு    : மு.காசிவிஸ்வநாதன் கலை                 : விஜய் தென்னரசு சண்டை பயிற்சி         : ராம்போ விமல் நடனம்              : தினா, சதீஷ்போஸ் மக்கள் தொடர்பு         : மணவை புவன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  செல்வகண்ணன் படம் பற்றி இயக்குனர் செல்வகண்ணன் கூறியதாவது… எல்லோரோட வாழ்க்கைக்கு பின்னாடியும் யாரோ ஒருத்தரோட தியாகம் இருக்கும் என்னோட இந்த நெடுநல்வாடை  படத்திற்கு பிறகு என்…

Read More

இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள பிரித்விராஜின் `லூசிஃபெர் ‘ படத்தில் நடிக்கும் மோகன்லால் !!

நடிகர் பிரித்விராஜ் மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர் . தமிழ் தெலுங்கு , பாலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர்.தமிழ் சினிமாவில் கனா கண்டேன் படத்தில் அறிமுகமாகிய இவர் பாரிஜாதம் , மொழி , அபியும் நானும் , ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் , பாடகர் , தயாரிப்பாளர் என அனைத்து பன்முகம் கொண்ட இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். . இயக்குனராக இவர் இயக்கும் முதல் படம் ‘லூசிஃபெர் ‘.  மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்   இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தளபதி விஜய் உடன்   ஜில்லா , சூர்யாவுடன் காப்பான் போன்ற படங்களில் தமிழ் நடித்து இருக்கிறார். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் மோகன்லால்  மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. …

Read More

சாதிய ஒடுக்குமுறைகளை கேள்வி கேட்டு அதற்கானத் தீர்வைச் சொல்லும் படம் உறியடி2

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், “உறியடி உறியடி2 எடுப்பதற்கான காரணம் என்ன?” என்பதற்கு அழகான பதிலைச் சொல்லி இருக்கிறார்.”இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி2 வருவதற்கான காரணம்” என்கிறார்   மற்றும் நடிகரான விஜய்குமார். மேலும் அவர் படம் பற்றி கூறும்போது, “எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான்…

Read More

‘சத்ரு’ – மார்ச் 8-ம் தேதி ரிலீஸாகிறது..!

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்ட்டர்டெயின்மெண்ட்  பட நிறுவனம் சார்பில்  தயாரிப்பாளர்கள் ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சத்ரு.’  இந்தப் படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்திருக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் பொன்வண்ணன்,  நீலிமா,  மாரிமுத்து,  ரிஷி,  சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம்,  ரகுநாத், கீயன், சாது,  குருமூர்த்தி,  பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.     ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, இசை – அம்ரிஷ், பாடல்கள்   – கபிலன்,  மதன் கார்க்கி, சொற்கோ, படத் தொகுப்பு – பிரசன்னா.ஜி.கே., கலை இயக்கம் –  ராஜா மோகன், சண்டை இயக்கம் – விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  நவீன் நஞ்சுண்டான்.    படம் பற்றி இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் பேசும்போது, “இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை. இந்த படத்தில் கதிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். ஆனால்,…

Read More