பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் நிகில் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சுயம்பு’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கடந்து சாதனை படைத்துள்ளது!

நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் நிகில் சித்தார்தா முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற எளிய தோற்றமும், அவரது திறமையான நடிப்பும் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஒவ்வொரு படத்திலும் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார். தற்போது இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ’சுயம்பு’ திரைப்படத்தின் மூலம் நடிகர் நிகில் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறார். பிக்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கும் இப்படத்தை தாகூர் மது வழங்குகிறார். பிரம்மாண்டமான பீரியட் ஆக்‌ஷன் கதையாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீசர் பன்மொழிகளில் வெளியான குறுகிய காலத்திலேயே 10 மில்லியனுக்கும் அதிக பார்வைகளை கடந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசரின் பிரம்மாண்ட…

Read More

தமிழ் சினிமாவின் மைல்கல்… ‘விசாரணை’க்கு 10 ஆண்டுகள்; ஒன்று கூடிய படக்குழு !!

தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், ஒரு காலகட்டத்தின் குரலாகவும், சமூக சாட்சியாகவும் மாறிவிடும். அந்த வகையில், 2015ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் இன்று வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த சிறப்பான தருணத்தை நினைவுகூறும் விதமாக, அப்படத்தின் படக்குழு இயக்குனர் பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் ஒன்று கூடி கலந்துரையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிகழ்வினில் இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர் சந்திரகுமார், நடிகர் வே.இர.தினேசு, இயக்குனர் & நடிகர் சமுத்திரக்கனி, கருணாஸ், இயக்குனர் சரவண சுப்பையா, மூணார் ரமேஷ், திலீப் சுப்பராயன், இயக்குநர் தமிழ், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர் Wunderbar Films மற்றும் Grass Root Film Company நிறுவனங்களின் தயாரிப்பில் எழுத்தாளர் M சந்திரகுமார் அவர்களின் ”லாக்கப்” புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ”விசாரணை”…

Read More

Phars Film நிறுவனம் ‘டாக்ஸிக்’ படத்தின் இந்திய மொழி பதிப்புகளுக்காக வரலாற்றுச் சாதனை மிக்க வெளிநாட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது – !

பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடங்கும் முன்னரே, “டாக்ஸிக்” படம் இது வரையிலான சாதனைகளை உடைத்து விதிகளை மாற்றி எழுத ஆரம்பித்துவிட்டது. தெலுங்கு அல்லாத ஒரு திரைப்படமாக, AP–TG சந்தையில் தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) உடன் ₹120 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சாதனை விநியோக ஒப்பந்தத்தை கைப்பற்றியதன் மூலம் இந்தப் படம் செய்திகளில் இடம்பிடித்தது. இது இந்திய திரைப்படத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அடுத்ததாக வெளிநாட்டு ஒப்பந்தம் அதை விட பெரிய சாதனையைப் படைத்துள்ளது. சர்வதேச அளவில், “டாக்ஸிக்” திரைப்படத்தை Phars Film என்ற முன்னணி வெளிநாட்டு விநியோக நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது படத்தின் அபூர்வமான முன்-வெளியீட்டு பயணத்தில் இன்னொரு மிகப்பெரிய மைல்கல்லாகும். இந்த ஒப்பந்தம் இந்திய திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த வெளிநாட்டு ஒப்பந்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.…

Read More

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் “மை லார்ட்”

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “மை லார்ட்.” நடிகர் சசிகுமார் மற்றும் சைத்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் அதன் டிரெய்லர் வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், “மை லார்ட்” திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இந்தப் படத்தை வழங்குவதை பெருமையாக கருத்துவதாக 2டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம், “அன்பையும், நம்பிக்கையையும் முன்வைத்து நல்ல படைப்புகளுக்கு எப்போதும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் பிரத்யேக இடம் உண்டு. சினிமா என்பது பொழுதுபோக்கு, வியாபாரம் என்பதையும் தாண்டி பார்வையாளர்கள் மனதில் நல்ல எண்ணங்களை…

Read More

இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’ பட்டத்தின் படப்பிடிப்பு நிறைவு

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மஹேந்தர் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர். பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளை சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை மையப்படுத்தி இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக இப்படம் உருவாகிறது. படத்திற்கு…

Read More

Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது. ‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த…

Read More

பிப்ரவரி 2026 – ரோட்டர்டாம், IFFR 2026 இல் NETPAC விருதுக்கு மயிலா பரிந்துரை!

செம்மலர் அன்னம் இயக்கத்தில், நியூட்டன் சினிமா தயாரிப்பில் உருவான மயிலா, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR) யில் NETPAC விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் தொடக்கத்தில் ரோட்டர்டாமில் உலக சினிமா திரையிடலைப் பெற்ற இந்தத் திரைப்படம், ஆசிய சினிமாவை மேம்படுத்தும் நெட்பேக் (Network for the Promotion of Asian Cinema – NETPAC) வழங்கும் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளது. படைப்பாற்றல், பண்பாட்டு ஆழம் மற்றும் திரைப்படக் கலைச் சிறப்பை பிரதிபலிக்கும் சிறந்த ஆசிய திரைப்படங்களை NETPAC விருது கௌரவிக்கிறது. ஒரு இளம் பணிபுரியும் பெண்ணின் மரியாதை மற்றும் சுயாதீனத்தை நோக்கிய பயணத்தை நெருக்கமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கும் இந்தத் திரைப்படம், ரோட்டர்டாமில் நடைபெற்ற அதன் திரையிடலில், படம் பார்த்த பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டுகளை பெற்றது. இந்தப் பரிந்துரை, மயிலா திரைப்படத்தின் சர்வதேச திரைப்பட…

Read More

ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய “மை லார்ட்” படக்குழு!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது.., மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும். ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு  என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல…

Read More

பிப்ரவரி 13 ஆம் தேதி மாதவனின் ‘மின்னலே’ படத்தை ரீ ரிலீஸ் செய்யும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்*

சி டிவி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில் டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் – ரீமா சென் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மின்னலே’. கடந்த தசாப்தங்களில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தற்போது ரீ ரிலீஸ் ஆவது லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த வகையில் மாதவன் – கௌதம் வாசுதேவ் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான ‘மின்னலே ‘ திரைப்படம்- காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார். மின்னலே – இந்த திரைப்படத்தின் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகமானார் என்பதும், ‘அலைபாயுதே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மாதவன் நடித்த…

Read More

பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘HALF: The Chronicles of Two Half-Blooded Vampires’ திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டரை வெளியிட்டது!

பிரம்மாண்டமான த்ரில்லர் வேம்பயர் கதைக்காக ’கோலம்’ படஅணியினர் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கதையில் நடிகர்கள் அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் மற்றும் அப்பாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கொரியோகிராபியை ஹாலிவுட் ஸ்டண்ட் எக்ஸ்பர்ட் வெரி ட்ரை யூலிஸ்மேன் கவனிக்கிறார். பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வேம்பயர் த்ரில்லர் திரைப்படமான ‘HALF’-ன் இரண்டாவது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தை இந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது. ‘பிரணயம்’, ‘பரிவார்’, ‘கோலம்’ போன்ற படங்களைத் தயாரித்த பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் அன்னே சஞ்சீவ் மற்றும் சஞ்சீவ் பிகே இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ’கோலம்’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சம்ஜத் இந்த படத்தை இயக்கியுள்ளார். வேம்பயர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அடையாளம்,…

Read More