ஆனந்த் ராஜ் மற்றும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கும் இந்தப் படத்தை அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர். வடசென்னை கதைக்களத்தில் ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் அதிரடி மாற்றங்களை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சுவாரஸ்யமாக சொல்லும் படமாக ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ உருவாகிறது. இந்தப் படத்தில் முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ் மற்றும் ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அஷோக் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கலை இயக்குநராக ராகவா…
Read MoreCategory: சினிமா செய்திகள்
நெல்சன் வெங்கடேசனின் ‘டிஎன்ஏ’ படத்திற்கு ஜிப்ரானின் பின்னணி இசை
‘டிஎன்ஏ’ படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள். பலவிதமான எமோஷன்ஸ், எனர்ஜி மற்றும் ரசிக்கக் கூடிய பல தருணங்களை படம் கொண்டுள்ளது. இதை காட்சி அனுபவமாக ரசிகர்களுக்கு மேம்படுத்தி கொடுக்க இசையமைப்பாளர் ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையும் படத்தில் அமைந்துள்ளது என்பதை படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் வெளியிடும். க்ரைம் ஆக்ஷன் கதையாக உருவாகி இருக்கும் ‘டிஎன்ஏ’ திரைப்படத்தில் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர்.
Read Moreபிரம்மாண்ட தயாரிப்பில் வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன்
சிபி ராஜ் நடித்த வால்டர் படத்தை வெற்றிகரமாக இயக்கிய இயக்குனர் அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் படைதலைவன் படம் வெகு விரைவில் வெளிவர உள்ளது. வி ஜே கம்பைன்ஸ் சார்பில் பரமசிவம் அவர்கள் தயாரிப்பில், ராஜு காளிதாஸ் அவர்களின் இணை தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம், படை தலைவன். இப்படத்தில் ஆக்சன் அதிரடியில் சண்முகபாண்டியன் விஜயகாந்த் வெறித்தனமாக பெரும் மெனக் கெடல் எடுத்து நடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி படத்தின் வெளியீட்டு வேலைகள் துவங்கி உள்ளன. இசைஞானி இளையராஜா அவர்களின் அற்புதமான இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. கஸ்தூரி ராஜா அவர்கள் முக்கிய கதா பாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்துள்ளார். படை தலைவன் படத்தை ஓப்பன் தியேட்டர் நிறுவனம் சார்பில் ஏ. செந்தில் குமார்…
Read Moreகபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியம் என்ற நாவலை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இது 2022 ஆம் வெளியான ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம். பிரிட்டிஷ் இந்தியாவின் குற்றப் பரம்பரை சட்டத்தையும் அதன் நவீன பரிணாமங்களையும் விவாதிக்கும் முறையில் கபிலன் வைரமுத்து இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த மாக்கியவெல்லி இரண்டாம் பாகத்தின் மைய கதாபாத்திரமாக வருகிறான். மதுரை மாவட்டத்துக்குட்பட்ட எட்டு நாடுகள் என்ற பகுதியில் கதை நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 1801 தொடங்கி 2057 வரையிலான காலக்கட்டத்தின் கதையாக இது எழுதப்பட்டிருக்கிறது. பல வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த இரண்டு ஆண்டுகள் கள ஆய்வுக்கு பின் கபிலன்வைரமுத்து இந்த நாவலை எழுதியிருப்பதாக பதிப்பாளர் வேடியப்பன் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்ரேல் அரசு இணையவெளியில் மேற்கொண்ட முக்கியமான…
Read Moreஇந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் டிரெய்லர்!!
தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லரும் ஒளிபரப்படுகிறது! ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லர் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், அதற்கு முன்பே இப்போது தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லரும் அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்படுகிறது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை பார்வையாளர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான டாம் ஹார்டியின் கடைசி ஆண்டி-ஹீரோ படம் இது. மேலும் மிகவும் பிரபலமான ஆண்டி-ஹீரோ பிரான்சைஸ் இதோடு முடிவுக்கு வருகிறது. த்ரிலிங் தருணங்கள், ஆக்ஷன் என டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் பல தருணங்கள் ரசிகர்களின் கவனம்…
Read Moreமாஸ் நாயகன் நடிகர் ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படம் உலகளவில் ரூ. 304 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது!
இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில், மாஸ் நாயகன் என்டிஆர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ’தேவரா’. என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா. கே, தயாரித்த இந்தப் படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்கினார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் சைஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 172 கோடி வசூலை ஈட்டி பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்றது. வார இறுதியிலும் இதை தக்க வைத்தது. படம் வெளியான மூன்று நாட்களில் அனைத்து மொழிகளிலும் சுமார் ரூ. 304 கோடிகளை வசூலித்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. குறிப்பாக, ‘தேவரா’ படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மொத்த வசூலில் ரூ. 87.69…
Read Moreதிருநங்கை இயக்குனர் சம்யுக்தா விஜயனின் ‘நீல நிறச் சூரியன்’ அக்டோபர் 4ல் திரையரங்குகளில்
தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ ; அக்-4ல் தமிழகமெங்கும் வெளியீடு திருநங்கை சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்து வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ‘நீல நிறச் சூரியன்’ (Blue Sunshine). வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தமிழகமெங்கும் xforia Igene நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.. இப்படத்தின் சிறப்பம்சமே தமிழ் சினிமாவில் முதன்முறையாக சம்யுக்தா விஜயன் என்கிற ஒரு திருநங்கை இயக்கி நடித்துள்ள முதல் திரைப்படம் என்பது தான். அது மட்டுமில்லாமல், IFFI -23, மற்றும் பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, உலக சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் நல்ல சினிமாக்களை விரும்பும் அனைவரும் பாராட்டிய படமாக இது உருவாகி இருக்கிறது.. இப்படத்தின் சிறப்பு காட்சிகளில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்களின் ஏகோபித்த பாராட்டுகளையும்…
Read Moreதென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு உதயநிதி துணை முதல்வருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் – நாசர்,தலைவர்
பேரன்பிற்கும் மரியாதைக்குரிய தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான தாங்கள் தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உள்ளார்ந்த மகிழ்ச்சியையும், மனமார்ந்த பாராட்டுகளையும் மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும் நம் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி, தங்கள் உண்மையுடனும், பேரன்புடனும் (M.நாசர்) தலைவர்
Read Moreதுணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு நடிகர் உதயாவின் வாழ்த்து
தமிழ்நாட்டின் துணை முதல்வராக மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நியமித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளராகவும், நடிகராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலகில் பிரகாசித்து நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கும் உதயநிதி அவர்கள் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவது ஒட்டுமொத்த திரையுலகிற்கே பெருமை. தமிழ் திரையுலகத்திலிருந்து முதல் துணை முதல்வர் ஆகி வரலாறு படைத்திருப்பது உதயநிதி அவர்கள் என்பது பெருமகிழ்ச்சி. இந்த உற்சாக தருணத்தில், கலைஞரின் மதி நுட்பத்தோடும், தளபதியாரின் உழைப்போடும் செயலாற்றி வரும் உதயநிதி அவர்கள் இன்னும் பல சாதனைகளை புரிந்து பல்வேறு உயரங்களை எட்ட வேண்டும் என்று ஒரு சகோதரனாகவும் சக கலைஞனாகவும் வாழ்த்தி, வணங்கி, மகிழ்கிறேன். நன்றி, அன்புடன் நடிகர் உதயா.
Read Moreஹாரர் திரில்லர் “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!
ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 2’ ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 10 வருடங்களுக்கு முன் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் திரில், திகில் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த திரைப்படம், ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்கிறது. இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன் ZEE5 இல் டிமான்ட்டி காலனி திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள். மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குகிறது. முதல் பாகத்தின் கதைக்களம், ஸ்ரீனிவாசன், விமல், ராகவன் மற்றும் சஜித்…
Read More
