‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100 – KING 100’ திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ‘உதயம்’ , ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’ ‘குபேரா’, ‘கூலி’ திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா… அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் இளம் திறமையான இயக்குநர் ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100 – KING 100’ திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ‘உதயம்’ , ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’ ‘குபேரா’, ‘கூலி’ திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா… அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் இளம் திறமையான இயக்குநர் ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம்…
Read More22 மாநிலங்கள் வழியாக 15,000 கி.மீ. பயணம்; ஊர்வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து 120 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank) தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, இன்று (ஆகஸ்ட் 28, 2026) 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மெட்ராஸ் முதலை வங்கி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 49 ஆண்டுகளாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பணியில் மெட்ராஸ் முதலை வங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நிறுவனத்தின் நிறுவனர்களான பத்மஸ்ரீ ரோமுலஸ் விட்டேக்கர் மற்றும் சாய் விட்டேக்கர் ஆகியோருக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், 50-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்று முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. அதன்படி, ஆகஸ்ட் 2026 முதல் ஆகஸ்ட் 2027…
Read Moreபான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
தேசிய விருது பெற்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க ஷோஸ்டாப்பர்ஸ் 2026 சிறப்புப் பதிப்பின் அட்டைப்பட நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்களில் ஒருவரான அவரது திரைப்பயணத்தில் இது மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தனித்துவமான திரை ஆளுமை, பான் இந்தியா அளவிலான ரசிகர்கள் வரவேற்பு மற்றும் உலகளவிலான அங்கீகாரம் ஆகியவற்றின் மூலம், அல்லு அர்ஜுன் பிராந்திய சினிமாவின் எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் தொடங்கிய அவரது பயணம், இன்று தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட உச்ச நட்சத்திரமாக உள்ளார். இது இந்திய சினிமாவின் மாறிவரும் சூழலையும் பிரதிபலிக்கிறது. ’புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியிலிருந்து, சாதனை படைத்த ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படத்தின் தாக்கம் வரை, பல்வேறு…
Read Moreஇந்த ஆண்டின் மிகப்பெரிய சாதனை, விஜய் அவர்கள் முதல்வராக ஆகியிருப்பது!
— ‘இசைக் கவிஞர்’ சௌந்தர்யன். சப்தஸ்வரங்கள் ரிகர்சல் ஸ்டுடியோ நிறுவனர் கெளசி அவர்கள் முயற்சியில், ஆயிரம் பாடல்கள்,தொடர்ச்சியாய் நூற்று இருபது மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி,சாதனை படைத்ததற்கான சாதனை சான்றிதழ் WORLD RECORDS UNION தலைமைப் பொறுப்பாளர் மூலமாக பெற்றார்கள். இந்த நிறைவு விழா சென்னை தி.நகர் பி.டி தியாகராயர் அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக இசைக்கவிஞர் செளந்தர்யன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து, வாழ்த்தி பேசினார். “ஆண்களுக்கு இப்படியொரு சாதனை புரிவதில்,பெரிய போராட்டம் என்ற ஒன்று இருக்காது. ஆனால் பெண்களுக்கு இயல்பாகவே குடும்பம், குழந்தைகள், அதிகமான பொறுப்புகள் நம்மை விட அவர்களுக்கு அதிகம். அதையும் சமாளித்து, கெளசி அவர்கள் இப்படியொரு சாதனை புரிந்திருக்கிறார்கள் என்றால் பாராட்டத்தான் வேண்டும். இந்த வருடம் பாராட்டும் படியாய் நிறைய சாதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் அவர்கள் மிகப்பெரிய…
Read More‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களின் தொடர் வெற்றி – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஹாட்ரிக் சாதனை!
மலையாளத் திரைப்படங்களை கேரளாவுக்கு அப்பால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வரும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், (Future Runup ) ‘லோகா’, ‘களம்காவல்’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றியின் மூலம் விநியோகத் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க விநியோக நிறுவனமாக உருவெடுத்துள்ள ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், கேரளத்திற்கு வெளியே மலையாள சினிமாவுக்கான புதிய சந்தைகளை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன் மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோரால் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் மலையாளத் திரைப்படங்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்திய இந்நிறுவனத்தின் முதல் வெளியீடாக டொவினோ தாமஸ் நடித்த ‘நரிவெட்டா’ திரைப்படம் அமைந்தது. தொடர்ந்து…
Read Moreஹிப்ஹாப் தமிழா ஆதி, கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் குரல்களில் உருவான காதல் திருமணப் பாடல்!
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சார்ட் பஸ்டர்களாக மாறியுள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளை ஹிப்ஹாப் தமிழா எழுதியுள்ளார். காதல், திருமணம் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், படத்தின் கதையோட்டத்தில் முக்கியத்துவம் பெறும் பாடலாக அமைந்துள்ளது. குறிப்பாக, ‘கலைவாணியே’ பாடலில் ஹிப்ஹாப் தமிழா மற்றும் ரம்யா ரங்கநாதன் கதாபாத்திரங்களின் திருமண இணைவு அழகாக…
Read Moreதிரையரங்குகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ்!
நடிகர் கருணாஸ், தமிழ் திரையுலகில் தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில் வெளியாகவிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ள கருணாஸ், ‘என்ன விலை’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். படம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், ‘என்ன விலை’ திரைப்படம் எனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று. உண்மையாக சொல்வதென்றால், கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு படத்திற்காகவும், இப்படிப்பட்ட ஒரு படக்குழுவிற்காகவும் நான் காத்திருந்தேன். இயக்குநர் சஜீவ் பழூர் என்னிடம் கதை சொன்னபோது, உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இது அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை.…
Read More’டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘டைகரியன் ரோர்’ பாடலில் ஹிருது ஹரூனின் எனர்ஜியும் கண்கவர் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது!
‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘டைகரியன் ரோர்’ பாடல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாடலில் ஹிருது ஹரூனின் வசீகரிக்கும் திரையிருப்பு, தொற்றிக்கொள்ளும் உற்சாகம் மற்றும் எனர்ஜிட்டிக்கான நடனம் போன்றவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ‘தக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹிருது ஹரூன், மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ‘மும்பைகர்’, ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’, ‘முரா’, ‘மைனே பியார் கியா’, ‘பேட் கேர்ள்’, ‘டியூட்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தில் கமர்ஷியல் என்டர்டெய்னர் ஹீரோவாக ஹிருது ஹரூன் களமிறங்குகிறார் என்பதையே ‘டைகரியன் ரோர்’ பாடல் எடுத்துக்காட்டுகிறது. முதல் பீட்டிலிருந்தே இந்தப்…
Read Moreசூரி நடிக்கும் “மண்டாடி” திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று இந்தியாவில் IMAX® ஃபார்மேட்டில் வெளியாகிறது– RS Infotainment அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!
RS Infotainment நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான “மண்டாடி”, வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள IMAX® திரைகளிலும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள “மண்டாடி” திரைப்படம், பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் தமிழ்நாட்டின் கடலோர சமூகங்களின் கடல்சார் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. ஆழ்கடல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், IMAX®-ன் பிரமாண்டமான ஒலி மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தின் மூலம் கடலில் நடைபெறும் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளையும், கதாபாத்திரங்களின் தீவிரமான உடல் உழைப்பையும் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பிரமாண்டமான அனுபவமாக வழங்க உள்ளது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறுகையில்.., “மண்டாடி திரைப்படத்தை மிகப்பெரிய…
Read More
