பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து…
Read MoreCategory: சினிமா செய்திகள்
இலங்கையில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படம் – இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு நிறைவு; படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு!
போதைக்கு எதிரான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தென்னிந்தியத் தமிழ் திரைப்படம் ‘நல்லபடம்’. Harish cinemas சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தை, ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சி. பிரபுராம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். *இலங்கையில் நடைபெற்ற பிரமாண்ட இசை வெளியீடு* ‘நல்லபடம்’ திரைப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் பாடல் வரிகளை இலங்கையைச் சேர்ந்த பிரபல கவிஞரும் தமிழ்சினிமா பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார். வேல்முருகன், அருள் பிரகாஷம், புண்ணியா செல்வா, காயத்ரி ராஜீவ் மற்றும் சஷாங் உள்ளிட்டோர் பாடல்களுக்கு குரல் வழங்கியுள்ளனர். திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்…
Read Moreவலுவான அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு, டிஜிட்டல் கருவிகள் மற்றும் நிலையான உரிமைகள் மேலாண்மை மூலம் திரை எழுத்தாளர்களை வலுப்படுத்தும் கூட்டு முயற்சி
ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (Fipchain Technology Private Limited) நிறுவனத்தின் அறிவுசார் சொத்து மேலாண்மை மற்றும் சட்ட சேவைகள் பிரிவான ஐபி கிளைம்ப் (IP Climb), தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (South Indian Film Writers Association – SWAN) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மை, எழுத்தாளர்களிடையே அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, அவர்களின் சட்டப் பாதுகாப்பு மற்றும் நீண்டகால உரிமை மேலாண்மையை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், அறிமுக நிகழ்ச்சி மற்றும் சேவைகள், தொழில்நுட்ப வசதிகள் குறித்த விரிவான செயல்முறை விளக்கத்தில் பங்கேற்றனர். நிறுவனத்தின் பயணத்தை அறிமுகப்படுத்திய ஃபிப்செயின் நிறுவனர் ஜி. கே. திருநாவுக்கரசு, புரொடியூசர் பஜார் மற்றும்…
Read Moreமனைவி கொலை கணவன் அதிர்ச்சி! கொலையாளி யார்?
அந்த கிராமத்தில் கதையின் நாயகனான கருப்பட்டி தன் தாயுடன் வசித்து வருகிறான். அதே கிராமத்தில் தந்தையுடன் வசித்து வரும் பவானியை காதலிக்கும் கருப்பட்டி அவளையே திருமணம் செய்து கொள்கிறான். மணமுடித்த சில நாட்களில் பவானி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். அவளை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் கருப்பட்டி ஈடுபடுகிறான். அப்பொழுதுதான் அவனுக்கு பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்கிறான். அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களில் அவனுக்கு மனைவியின் கொலையாளியை தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறான் இப்படி ஒரு கதைக்களத்தில் உருவாகி வரும் படம்தான் மோனிதா மூவிஸ் தயாரிப்பில் விஜயராஜ் கதையின் நாயகனாக நடிக்கும் ” கருப்பட்டி”. விஜயராஜ், சமந்து, ஹரிணி, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கலைவாணி ,ரஷீத், மைக்கேல் ராஜ், செண்பகவள்ளி ஆகியோர் நடிக்கின்றனர். சேலம் மேட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்த்துள்ள…
Read Moreடார்க் காமெடி படத்தை லியோ விஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் நடிகை நித்யா மேனன்
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை தயாரித்த லியோ விஷன் (Leo Vision) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தை, நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Keyuri Productions Pvt Ltd) நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் டி கே இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார். ஃபேண்டஸி வித் டார்க் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் வி எஸ் ராஜ்குமாரின் லியோ விஷன் நிறுவனமும், நடிகை நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Keyuri…
Read Moreஉடல்டையைக் குறைத்து புதிய போட்டோஷூட் வெளியீடு!
‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ மற்றும் ‘சுழல் 2’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான என்ட்ரி கொடுப்பதற்காக, அவர் தன்னை முற்றிலும் புதிய லூக்கிற்கு மாற்றியுள்ளார். தன்னுடைய உடல் எடையை கணிசமாகக் குறைத்து, மிகவும் பொலிவாகவும் ஃபிட்டாகவும் மாறியுள்ள மஞ்சிமாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன. அவரது இந்த மாஸான மேக்ஓவர் மற்றும் புதிய கெட்டப், அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே கணிசமாக உயர்த்தியுள்ளது.
Read Moreஎம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர்! எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை…
Read Moreசெப்டம்பர் 4-ல் தமிழுக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியீடு!
சமீபத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம் தமிழில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு மிடில் ஏஜ் ஆணுக்கும், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலின் பல்வேறு முகங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதாக டிரெய்லர் உணர்த்துகிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் ஏற்படும் குழப்பங்கள், உணர்வுகள் மற்றும் சமூகத்தைச் சுற்றிய பார்வைகள் என பல அம்சங்களை டிரெய்லர் சுவாரஸ்யமாக முன்வைக்கிறது. குறிப்பாக, வழக்கமான காதல் கதையிலிருந்து சற்று மாறுபட்ட ஒரு உறவை மையப்படுத்தி, அதில் இருக்கும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் இணைத்து இப்படம் உருவாகியிருப்பது டிரெய்லரில்…
Read Moreமலையாள திரையுலகம் என்னைத் தேர்ந்தெடுத்து, அளவற்ற அன்பையும் அளித்தது- கைரா வாசுதேவன்
நடிகை கைரா வாசுதேவன்- பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான ‘கலீஃபா’ திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏராளமான ரசிகர்களால் இணையத்தில் தேடப்படும் பிரபலமாக மாறி இருக்கிறார் நடிகை கைரா வாசுதேவன். இந்த தருணத்தில் நடிகை கைரா வாசுதேவன் மலையாளத்தில் அறிமுகமான ‘கலீஃபா’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இது தொடர்பாக நடிகை கைரா வாசுதேவன் பேசுகையில், ” பிருத்விராஜ் சுகுமாரன் – இயக்குநர் வைசாக் மற்றும் எழுத்தாளர் ஜினு வி. ஆபிரகாம் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. பிருத்விராஜ் சுகுமாரன் – இயக்குநர் வைசாக் மற்றும் எழுத்தாளர் ஜினு வி.ஆபிரகாம் ஆகியோருடன் இணைந்து எனது முதல் மலையாள படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இத்தகைய ஜாம்பவான்களுடன் இணைந்து அறிமுகமாவதால் மிகுந்த அழுத்தம் இருந்தது. அவர்கள் என் மீது…
Read Moreஅருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!
7 Miles Per Second Productions தயாரிப்பில், M. செல்வகுமார் இயக்கத்தில், அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. திரை பிரபலங்களான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டனர். முதன்மை கதாபாத்திரங்களில் அருள்நிதி மற்றும் அமீர் நடித்துள்ளனர். வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் இல்லாமல் கதையையும் கதாபாத்திரங்களையும் மையப்படுத்தி நகரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. நெல்லை மாவட்ட பகுதியின் பெரும் காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட குலதெய்வ வழிபாடுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி, தலைமுறைகளாக தொடரும் சமூகப் பிரச்சினைகளை, மக்களின் இரத்தமும் சதையுமான…
Read More
