சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் – இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது. நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் – ஆகியவற்றை சூர்யா மிக சிறப்பாக கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாக கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கவனம் ஈர்க்கக்கூடிய திரை ஆளுமையும்… வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான…
Read MoreCategory: சினிமா செய்திகள்
10 ஆண்டுகளின் வெற்றிப் பயணத்தை கொண்டாடும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10; ஆண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு திருவிழாவிற்கு ரசிகர்களை வரவேற்கும் விஜய் சேதுபதி
சென்னை, ஆகஸ்ட் 07,2026: பிக்பாஸ் தமிழ் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மைல்கல் சீசனான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புதிய லாஞ்ச் புரோமோவை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், பிக்பாஸ் தமிழ் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தாண்டி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அனுபவமாக வளர்ந்துள்ளது. ஆண்டுதோறும் 100 நாட்கள் குடும்பங்களை ஒன்றிணைத்து, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பரவலான உரையாடல்களை உருவாக்கி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒரு கலாச்சார நிகழ்வாக இது மாறியுள்ளது. 10வது சீசனை முன்னிட்டு, கடந்த ஒரு தசாப்தமாக பிக்பாஸை வெற்றிப் பாதையில் வழிநடத்திய ரசிகர்களுக்கு “பத்தாண்டு வாழ்த்துகள்” தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்காகவே உருவான ‘கார்னிவிழா’, பிக்பாஸ் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட பொழுதுபோக்கு கொண்டாட்டமாக அமைகிறது. இந்த லாஞ்ச் புரோமோ, பிக்பாஸ் ஒரு…
Read Moreதமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார். முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.…
Read Moreநகைச்சுவை,ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் வரவேற்பு!
உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த படமாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்மப் பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன் நிற்கிறார்கள். சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்தப் பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது. பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக்…
Read Moreநரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா- சுதாகர் செருகூரி – எஸ் எல் வி சினிமாஸ் – கூட்டணியில் தயாரான ‘தி பாரடைஸ்- The Paradise ‘ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது
‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் பிரம்மாண்டமான உலகளாவிய திரைப்படமான ‘தி பாரடைஸ்’- இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக படிப்படியாக வளர்ந்துள்ளது. அதன் ஒவ்வொரு விளம்பர அறிவிப்பும் அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. அதன் பிரமிக்க வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – தாக்கத்தை ஏற்படுத்தும் கிளிம்ப்ஸ்- வெற்றி பெற்ற பாடலான ‘ஆயா ஷேர்’ … என இப்படம் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தனது கற்பனையை ஒரு பிரம்மாண்டமான தளத்தில் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி- எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை அதன் மிகப்பெரிய லட்சியத்திற்கு ஏற்ப அயராது உழைத்திருக்கிறார். ‘நரகம் கட்டவிழ்த்து விடப்பட்டு, நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது’ என்ற வாசகத்துடன் இப்படத்தின் அதிரடியான டீசரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த…
Read Moreடொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் – மீண்டும் ஒன்றிணையும் ‘குப்பி’ டீம்
மலையாள திரையுலகில் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அத்திரைப்படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இவர்களின் அடுத்தகட்ட பிரம்மாண்ட திரைப்படம் குறித்த அறிவிப்பாகவும் இது பார்க்கப்படுகிறது. திரையுலக வட்டாரங்களின்படி, இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படம், இருவரின் திரைப் பயணத்திலேயே மிக அதிக பொருட்செலவில் (High-budget) உருவாகும் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் எனத் தெரியவருகிறது. இவர்களுடன் ‘குப்பி’ படத்தில் நடித்த சேத்தன் ஜெயலாலும் இப்புதிய படத்தில் இணையவுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘குப்பி’, நடிகர் டொவினோ தாமஸின் திரைப் பாதையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் ‘தேஜஸ் வர்க்கி’ எனும் பொறியாளராக அவரது…
Read Moreடார்க் ஹியூமர், அதிரடி, கற்பனை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் சர்வதேச அளவிலான கதைக்களத்தில் விரியும் ‘மூடர் கூடம் 2’
கல்ட் கிளாசிக் அந்தஸ்து கிடைக்கும் சில திரைப்படங்கள் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை. காலப்போக்கில், புதிய ரசிகர்களை ஈர்த்து, வெளியான பல ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் ‘மூடர் கூடம்’. 13 ஆண்டுகளுக்கு முன்பு, வித்தியாசமான நகைச்சுவை, வினோதமான கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த ‘மூடர் கூடம்’, தற்போது புதிய பரிமாணத்துடன் மீண்டும் திரும்பி வருகிறது. படத்தின் தலைப்பும், முதல் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத் இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இது வெறுமனே சீக்வல் படமாக இல்லாமல், முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் தனித்துவமான டார்க் காமெடி மற்றும் கதை சொல்லலை தக்கவைத்துக்கொண்டு, அதிரடி,…
Read Moreபிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”
பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்” படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆக்ஷன் டிராமா வகையில் உருவாகும் மக்கள் காவலன், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் பிர்லா ஸ்டுடியோஸின் கனவையும், உணர்வுபூர்வமான, சமூக வேர்களைக் கொண்ட, தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும் ஒன்றிணைக்கிறது. குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கே. மணிகண்டனின் அடுத்த படமாகவும் மக்கள் காவலன் அமைகிறது. மேலும், தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்ஷன் டிராமாவில் கதாநாயகனாக அவர் நடிக்கிறார். இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள “மக்கள் காவலன்”,…
Read Moreஉள்ளடக்க உருவாக்கம் முதல் வணிகமயமாக்கல் வரை இந்திய திரைப்படத் துறைக்கான தேசிய B2B சந்தையை உருவாக்கும் புதிய முயற்சி
இந்திய திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளடக்கங்களை வணிகமயமாக்கும் நோக்கில், Producer Bazaar முன்னெடுக்கும் Discovery Film Market (DFM), ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே குறும்பட விழாவான 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா (BISFF)-வின் முக்கிய அங்கமாக இந்த ஆண்டு அறிமுகமாகிறது. படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், OTT தளங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உள்ளடக்க வாங்குபவர்களை ஒரே தொழில்முறை வணிகச் சூழலில் இணைக்கும் தேசிய அளவிலான B2B திரைப்பட சந்தையாக இது உருவாகியுள்ளது. BISFF மேடையில் Producer Bazaar-ன் தேசிய முன்னெடுப்பு: ஆகஸ்ட் 15 மற்றும் 16 (சனி & ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும் 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெறும் Producer Bazaar Discovery Film Market, இந்திய திரைப்படத் துறையின் படைப்பாற்றலுக்கும் வணிகத்திற்கும் இடையிலான…
Read More‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
‘ஷம்பாலா’ திரைப்படத்தின் மூலம் தனித்துவமான கற்பனை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது இன்னும் பிரம்மாண்டமான படைப்பான ‘கரிகாலா’ மூலம் ரசிகர்களை புதிய மாய உலகிற்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இந்த பான் இந்தியா சோஷியோ ஃபேண்டஸி திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் தலைப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ‘கரிகாலா’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களை ஒரு பிரம்மாண்டமான கற்பனை உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. அடர்ந்த மர்மக் காட்டில், கையில் வாளை உயர்த்தியபடி வீரராக குதிரையில் சீறிப்பாயும் சந்தீப் கிஷனுடன், அருகில் கர்ஜித்தபடி பாய்ந்து…
Read More
