லாரா படம் வாங்கித் தந்த வாய்ப்பு : தயாரிப்பாளர் கார்த்திகேசன் மகிழ்ச்சி!

ஒரு படத்தில் தயாரிப்பாளர் நடிக்கிறார் என்றால் பெரும்பாலும் அந்தக் கதாபாத்திரம் அந்தப் படத்தின் கதையில் வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கும் – ஆனால் எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘லாரா ‘ படத்தில் அதன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் ஒரு காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் அந்தப் படம் வெற்றி பெற்றது. டெண்ட் கொட்டா’ ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் ஊடக விமர்சனங்களில் தயாரிப்பாளர் கார்த்திகேசன் நடித்த கதாபாத்திரம் பற்றியும் அவரது இயல்பான நடிப்பைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த அளவுக்குப் பாத்திரத்துக்கு ஏற்ப இயல்பாக நடித்து இருந்தார் .அதைப் பார்த்து திருமலை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுகவனம் இயக்கும் ‘ஒண்டி முனியும் நல்ல பாடனும்’ என்கிற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்…

Read More

விஜய் மில்டன் இயக்கும் இருமொழித் திரைப்படமான ப்ரொடக்‌ஷன் நம்பர் 5 படத்தில் இசை நாயகன் ‘பால் டப்பா’ நடிகராக அறிமுகமாகிறார்.

புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ( தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள) ப்ரொடக்‌ஷன் நம்பர் 5 படத்தின் முக்கியமான அப்டேட்டை பெருமையுடன் அறிவிக்கிறது, ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனம். எதார்த்தமான வாழ்க்கை சார்ந்த இந்த படைப்பில், ஏற்கனவே இருக்கும் முன்னணி நடிப்பு குழுவினருடன் இணைவது யாரென்று கேட்டால், அதுதான் தற்போதைய இசை உலகில் கவனம் பெற்று வரும் நட்சத்திரம் ‘பால் டப்பா’ – இவர் இந்த திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமாகிறார். சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிஷ், அவரின் மேடைப்பெயரான ‘பால் டப்பா’ வின் மூலம் அனைவரிடத்திலும் மிகவும் பரிச்சயமாக உள்ளார். இவர் ஒரு பன்முக கலைஞர் – ரேப்பர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடன இயக்குநர். 170CM, காத்து மேல, மற்றும் வைரலான கலாட்டா (ஆவேஷம் திரைப்படத்தில் இருந்து)…

Read More

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் #Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!

மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி, சாஹு கராபதி, சுஷ்மிதா கொனிடேலா, ஷைன் ஸ்க்ரீன்ஸ், கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான #Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !! மெகாஸ்டார் சிரஞ்சீவியின் #Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !! மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில், பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள #Mega157, பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த அற்புதமான கூட்டணியில் உருவாகும், இந்தப் படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி முழு நீள நகைச்சுவை வேடத்தில் மீண்டும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் பேனரில் சாஹு கரபதி, சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார், ஸ்ரீமதி அர்ச்சனா வழங்குகிறார். மிகப்பெரிய…

Read More

டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா !!

பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. குழந்தை நட்சத்திரம் கமலேஷ் பேசியதாவது… எல்லாருக்கும் வணக்கம். எப்படி சொல்றதுன்னு தெரியவில்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்துக்கு வாய்ப்பு கொடுத்த அபி அண்ணாக்கு ரொம்ப நன்றி. அதுக்கப்புறம் ப்ரொடியூசர்ஸ் யுவராஜ் அண்ணாவிற்கு நன்றி. சசிகுமார் அங்கிள், என்னிடம் ரொம்ப பாசமா இருந்தார்,…

Read More

டாம் குரூஸ் இந்தியாவை நேசிக்கிறார், மீண்டும் வர விரும்புகிறார்; அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு இதயப்பூர்வமான செய்தியை விட்டுச் செல்கிறார்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்

மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் மே 17 அன்று இந்தியாவில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது, டாம் குரூஸ் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வழிநடத்தி வரும் ஒரு உரிமையாளரின் காவிய முடிவை அமெரிக்கா குறிக்கும் 6 நாட்களுக்கு முன்பு, உலகளாவிய பொழுதுபோக்கை உண்மையிலேயே மறுவரையறை செய்த ஐகான், இந்தியாவுடனான தனது காலத்தால் அழியாத பிணைப்பை பிரதிபலிக்கிறது. குரூஸ் படங்களைப் பற்றி மட்டுமல்ல, வழியில் தனது பயணத்தை வடிவமைத்த மக்கள் மற்றும் இடங்களைப் பற்றியும் பேசினார். இதுவரை தனது மிகவும் தனிப்பட்ட மற்றும் உயர்ந்த பங்குகளை கொண்ட அத்தியாயமாக அமைக்கப்பட்டுள்ளதை விளம்பரப்படுத்தும் அதே வேளையில், குரூஸ் இந்தியாவுடனான தனது நீடித்த தொடர்பைப் பற்றித் தெரிவித்தார் – ஒரு நாடு தனக்கு வெறும் போற்றுதலை மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் நினைவுகளை அளித்ததாகவும், மீண்டும் வர விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்!…

Read More

மைத்ரி மூவி மேக்கர்ஸ் & என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்‌ஷன் எபிக் ‘என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை!

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக, வரும் மே 20 அன்று என்.டி.ஆர். பிறந்தநாளன்று படக்குழு எந்த அப்டேட்டும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், என்.டி.ஆரின் ‘வார்2’ திரைப்படத்தின் அப்டேட் அதே நாளன்று வெளியாகிறது. இதுகுறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் எதிர்பார்த்துள்ளனர். ‘வார்2’ படத்தின் பெஸ்ட்…

Read More

பிக்பாஸ் அர்ச்சனா : “வலுவான புதுமையான கதாபாத்திரங்களே சினிமாவில் என் நோக்கம்!”

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை அர்ச்சனா தற்போது சினிமா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் துறையிலும் தனது பயணத்தைத் தொடங்க ஆர்வமாக உள்ளார். சினிமாவில் என்ன சாதிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்கு மற்றும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறார். பிக்பாஸ் அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. என்னுடைய முகமூடி இல்லாத அசல் முகத்தையும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது. இந்த விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் எனக்கு நெருக்கமானதாக மாற்றியுள்ளது”. மேலும், ” இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அமைதி. நான் அதிகம் பேசக்கூடிய நபர். ஆனால், இப்போது எங்கே பேச வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இது என்னுடைய…

Read More

பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

இந்தக் கோடையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு அபூர்வமான சினிமா நிகழ்வாக, பவர்ஸ்டார் ‘பவன் கல்யாண்’, வீர மல்லுவாக—ஒரு வீரர், குற்றவாளி, கவியரசர் என்ற அவதாரத்தில் திரையில் தோன்றுகிறார். இது வரை வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன; இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க, பட குழு மிகக் கடுமையாக உழைத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது சிங்கிளையும், படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரையும் வெளியிட தயாராகி வருகிறது. ட்ரெய்லர் வெளிவரும் தருணத்தில், எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்கு உயரும் எனத் தெரிகிறது. மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஹரி ஹர வீர மல்லு தற்போது இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, போஸ்ட்-புரொடக்‌ஷன் வேலைகள் முழு வேகத்தில் நடைபெறுகின்றன. VFX, Sound Design மற்றும் டப்பிங் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. தாமதங்கள், தடைகள் பல இருந்தாலும்,…

Read More

HIT 3′ புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்!

பல வகையான கதாபாத்திரங்களில் தனது முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கோமலி பிரசாத். அவரது சமீபத்திய ஹிட் படம் ‘HIT 3’. இதில் அவரது ASP வர்ஷா கதாபாத்திரம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சவாலானது. இந்தப் பயணம் இனிமையானதாகவும் அதே சமயம் அட்வென்சராகவும் இருந்ததாக சொல்கிறார் கோமலி. “இந்த பவர்ஃபுல்லான ஆக்‌ஷன் பேக்ட் கதாபாத்திரம் பார்த்து ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்னை கண்கலங்க வைத்து விட்டது. இதேபோன்று இன்னும் பல கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகி இருக்கிறது” என்றார். நானியுடன் இணைந்து நடித்திருப்பது மற்றுமொரு மறக்க முடியாத அனுபவம். அவர் ஒரு திறந்த புத்தகம் என்கிறார். “அவர் நடிகர் மட்டுமல்ல. எல்லாத் துறைகள் பற்றியும் அவருக்குத் தெரியும். சில ஆக்‌ஷன் மூவ்ஸூம் எனக்கு சொல்லித் தந்தார். பெரிய இன்ஸ்பிரேஷன்”. நேஷனல் லெவல் பாக்ஸர்…

Read More

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகிறது – மாறாத மர்மங்கள் காத்திருக்கின்றன!

விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி பெருமையுடன் தயாரிக்கும் 12வது படமான ‘மார்கன்’ உலகம் முழுவதும் ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னணி எடிட்டராக வலம் வந்த லியோ ஜான் பால் இயக்கியுள்ள இப்படம், பரபரப்பும் மர்மமும் கலந்த குற்றவியல் த்ரில்லராக இருக்கப் போகிறது. முன்னதாக வெளியான முதல் லுக் போஸ்டர் மற்றும் “சொல்லிடுமா” என்ற சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது, திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து வருகிறது. மர்மம் மிக்க கதையம்சம் மற்றும் ஆழமான கதாபாத்திரங்களால், படம் பரபரப்பான திரை அனுபவத்தை தர உள்ளது. மேலும், விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் இந்த படத்தின் முக்கிய வில்லனாக அறிமுகமாகிறார். தன் நடிப்பால் தமிழ் திரை உலகில் புதிய வில்லனாக முன்னிறைவார்…

Read More