நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கும் ’டெஸ்ட்’ படத்தில் நடிகர் சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திர அறிமுக வீடியோவை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வெளியிட்டுள்ளார். சிலருக்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு, பலருக்கு அது ஒரு ஆர்வம். ஆனால், அர்ஜுனுக்கு அது வாழ்க்கை! திறமையான நடிகரான சித்தார்த் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கிரிக்கெட் வீரர் கதாபாத்திரம் லட்சியம், தியாகம் மற்றும் இடைவிடாத முயற்சி ஆகியவற்றைக் கொண்டது. அர்ஜூன் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும்போது கிரிக்கெட் பேட்டை மட்டும் எடுத்து செல்லவில்லை. ஒரு நாட்டின் எதிர்பார்ப்புகளையும் தனது சொந்த குடும்பத்தின் நம்பிக்கைகளையும் சுமந்து செல்கிறார். சர்வதேச சுழற்பந்து வீச்சாளரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான ஆர். அஸ்வின், அர்ஜுனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார். அர்ஜுனுக்கு கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதையும் தாண்டி அது அவனது…
Read MoreCategory: சினிமா செய்திகள்
ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ்!
ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் . இவர் 9 வயது முதலே கீபோர்டு இசைக்கப் பழகினார். பின் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி அன்று ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில் சவுண்ட் இன்ஜினீயரிங் படித்தார். மறுபுறம் முன்னனி இசைக்குழுக்களில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பாடகர் எஸ். பி. பாலசுப்பிர மணியம் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சியில் கீபோர்டு வாசித்தார் . 2012 ஆம் ஆண்டு முதல்முறையாக கொள்ளைக்காரன் படத்துக்காக இசையமைத்திருந்தார் .இதை தொடர்ந்து இவர் இசையமைத்த மெட்ரோ படம் ஜோகனுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பையும் ரசிகர்களிடம் தனி இடத்தையும் தந்தது .…
Read MoreZEE5 தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட்டுள்ளது. SS Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் வயிறு குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான, அசத்தலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை அவனது செருப்பு ஒன்றில் மறைத்து வைக்கிறார். ரெய்டு அதிகாரிகளுக்கு…
Read Moreநெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக அறிமுகம்: தான் விரும்பும் வாழ்க்கையை அடைய குமுதா சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்!
சில கனவுகள் எளிமையானது. ஆனால், அந்த எளிய கனவுகள் மிகப்பெரும் அர்த்தம் கொண்டது. YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குமுதா ஏங்குவது எல்லாம் அன்பு, அமைதியான வீடு, அன்பான கணவர், அம்மா என்றழைக்க ஒரு குழந்தை இதெல்லாம்தான். ஆனால், இந்த கனவுகளுக்கும் சோதனை வருகிறது. இதனை அன்பு மற்றும் வலிமை மூலம் குமுதா எதிர்கொள்கிறாள். நம்பிக்கைக்கும் மனவேதனைக்கும் இடையில் சிக்கி தான் விரும்பிய வாழ்க்கைக்காக போராடுகிறாள். கனவு காணத் துணிந்து அதை விட்டுக்கொடுக்க மறுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கதை ஒரு சான்றாகும். தனது கதாபாத்திரம் பற்றி நயன்தாரா பகிர்ந்து கொண்டதாவது, “குமுதாவின் கனவு ஒரு வீடு, ஒரு குடும்பம் மற்றும் நீடித்த காதல் என்ற எளியதுதான். ஆனால், வாழ்க்கை அவள் எதிர்பார்க்காத விதத்தில் அவளை சோதிக்கிறது.…
Read More“எனை சுடும் பனி” படத்தின் “தீராத ஆசையே…” பாடல் வெளியீடு
21ம் தேதி வெளியாகும் உண்மை சம்பவம்! https://youtube.com/watch?v=WHwD0EUAmCs%3Fsi%3D6SApsSNZNbt1Yy1a “எனை சுடும் பனி” திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் நட்ராஜ் சுந்தர்ராஜ் கதாநாயகனாகவும், உபாசனா ஆர்.சி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்றும் கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம்புலி, கூல் சுரேஷ், தானீஷ், சுந்தர்ராஜ் , பில்லி முரளி, பழனி சிவபெருமாள் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. எஸ்.என்.எஸ். பிக்சர்ஸ் சார்பில் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரித்துள்ளார். சாண்டி மாஸ்டர் ஒரு பாடலுக்கு நடனமாடியதோடு, நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதி, ராம் சேவா இயக்கியுள்ளார். அருள் தேவ் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு வெங்கடேஷ், சண்டைப் பயிற்சி டேஞ்சர் மணி, எடிட்டிங் சி.எம்.இளங்கோவன், கலை சோலை அன்பு, நடனம் சாண்டி மாஸ்டர், ராதிகா, பாடல்கள் ராம் சேவா, சரவெடி சரண், வசந்த்.…
Read Moreபாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ தற்போது ஸ்ட்ரீம் ஆகும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது
அமெரிக்காவில் இந்திய திரைப்படங்களை கண்டு மகிழ்வதற்கான முன்னணி ஓடிடி தளமான டென்ட் கொட்டா சமீபத்தில் இந்தியாவில் கால் பதித்து தமிழ் படங்களை ரசிகர்களின் சொந்த திரைகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று பாராட்டுகளை குவித்த ‘வணங்கான்’ திரைப்படத்தை டென்ட் கொட்டா தளத்தில் தற்போது ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இதைத் தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது. தரமான பொழுதுபோக்கை தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு வரும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக ‘ராஜாகிளி’ மற்றும் ‘காதல் என்பது பொதுவுடைமை’ படங்களை இந்த வாரம் ஓடிடியில் டென்ட் கொட்டா வெளியிடுகிறது. மேலும், ‘ஃபயர்’, ‘ஜென்டில்வுமன்’, ‘தினசரி’, ‘ஒத்த ஓட்டு முத்தையா’ உள்ளிட்ட திரைப்படங்களை…
Read Moreஊடகத்துறையினர் அறிமுக இயக்குநர்களை ஊக்குவிக்க வேண்டும் – மர்மர் இயக்குநர் வேண்டுகோள்
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” உருவாகி இருக்கிறது. மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. எனினும், ரசிகர்களின் பெரும் ஆதரவோடு இந்தத் திரைப்படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது. தொடர்ந்து இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மர்மர் படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய படத்தின் புரொடக்ஷன் டிசைனர் ஹாசினி, “அனைவருக்கும் வணக்கம். எங்கள் படத்தை பார்த்து, ரசித்து பிளாக்பஸ்டர் ஆக மாற்றியுள்ளீர்கள். நீங்கள்…
Read Moreவஞ்சி: தமிழின் புதிய வாழ்வியல் திரைப்படம் விரைவில் திரைக்கு
சென்னை: பிரபல தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் மூன்றாவது படம் **”வஞ்சி”**, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை **ராஜேஷ் C.R** இயக்க, **பின்சீர்** ஒளிப்பதிவு செய்துள்ளார். **சஜித் சங்கர்** இசையமைத்துள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணியை **ஜெயகிருஷ்ணன்** மேற்கொள்கிறார். **ராஜேஷ்** ஹீரோவாக நடிக்க, **நயீரா நிகார்** ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், **மாஸ்டர் ராஜநாயகம்**, **நட்டி நடராஜன்**, மற்றும் பல முன்னணி கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். **கதையின் மையக்கரு** வஞ்சி திரைப்படம், தமிழ்நாடு-கேரளா மலைப்பகுதிகளில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் நேரும் உயிர்பலிகள், அரசு வழங்கும் பாதுகாப்பு, மற்றும் ஒரு பெண்ணின் போராட்டம் ஆகியவை கதையின் மூலக் கருவாக அமைந்துள்ளன. **நயீரா நிகார் – பெண்ணின் வீரத்தைக் காட்டும் நடிப்பு** படத்தில் நயீரா நிகார் தன்னம்பிக்கையுடன் வாழும்…
Read Moreராபர் படம் எதைப்பற்றி பேசுகிறது தெரியுமா?
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா. எஸ் தயாரித்துள்ளார். அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்து தயாரித்துள்ளார். இந்த’ ராபர்’ திரைப் படத்தின்’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ‘எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வாங்கி வெளியிடுகிறார். இந்த படத்தில் நாயகனாக சத்யா நடித்துள்ளார்.இவர் ஏற்கனவே ‘மெட்ரோ’ படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க…
Read More*ஜனநாயக துரோகம்! – இயக்குனர்_பேரரசு*
சட்டசபைக்குள் அனுப்புவதற்காகத்தான் MLAக்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்! அதேபோல் பாராளுமன்றத்திற்குள் அனுப்புவதற்காகத்தான் எம்பிக்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்! ஆஊன்னா வெளிநடப்பு செய்வதற்கல்ல! சபைக்குள் முடிந்தவரை தன் கருத்துக்களை சொல்லி போராட வேண்டும். இல்லையென்றால் அங்கு என்னதான் நடக்கிறது என்று இறுதிவரை இருந்து பார்க்க வேண்டும். அடிக்கடி இப்படி வெளிநடப்பு செய்வது வாக்களித்த மக்களை அவமதிப்பதற்கு சமம்! மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெற்று, விமான டிக்கெட் போட்டு,இருக்க வசதியான அறை குடுத்து, உண்ண உணவு கொடுத்து இதெல்லாம் எதுக்கு வெளிநடப்பு செய்யவா? இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். வெளிநடப்பு செய்து சாதித்ததாய் ஒரு நிகழ்வும் இல்லை. வெளி நடப்பு உரிமை அல்ல! அது பொறுப்பின்மை! இதுவும் ஒரு ஜனநாயக துரோகம்! அடிக்கடி வெளிநடப்பு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வேண்டும். #இயக்குனர்_பேரரசு
Read More