தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன்- பார்ட் 2’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா கவனிக்க, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
தனுஷ் வெளியிட்ட அதர்வா முரளியின் ‘டி என் ஏ’ பட டீசர்
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ ஃபர்ஹானா ‘ போன்ற வெற்றி படைப்புகளை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர் , சேத்தன், ரித்விகா , கே பி , சுப்பிரமணியம் சிவா, கருணாகரன், ‘பசங்க ‘ சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் –…
Read Moreஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு
இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் உரையாடல்களை தீவிக் எழுத, ஷான் லொகேஷன் படத் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கவனிக்க, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார்.…
Read Moreஇசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’.
இதில் ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், சாந்தினி தமிழரசன், குமார் நடராஜன், சரத், நவ்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். அறிமுக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் எடிட்டர் ஸ்ரீகாந்த் நடன இயக்குனர் தினேஷ் குமார் மற்றும் சிந்தியா லூர்டே தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிக விரைவில் குடும்பங்கள் கொண்டாட திரைக்கு வர உள்ளது Creative head சிந்தியா லூர்டே மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் இயக்குனர் தினேஷ் தீனா கதைக் களம் பற்றி கூறியதாவது. அன்பான தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் கூடிய அழகான குடும்பம். இந்தக் குடும்பத்தில், நம் நாயகன் சக்தி ஒரு புயல் போன்றவர். அமெரிக்காவிலிருந்து தமிழ் கலாச்சாரத்தை நேசிக்க வந்த அமைதியான மற்றும் மென்மையான தென்றல் நம் நாயகி ஷிவானி. நாயகனின்…
Read MoreTTF வாசனின் IPL-ல் திரைப்படத்தின் பாடலை பாராட்டிய சங்கர் மகாதேவன்
மும்பையில் நடந்த பாடல் பதிவின் பொழுது சங்கர் மகாதேவன் பாடலை கேட்டு, தனித்துவமான இசையாக இருப்பதாகவும், இந்த பாடல் எனக்கு கிடைத்திருந்தால் நானும் நன்றாக பாடியிருப்பேன் என்று கூறி இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தியை பாராட்டியுள்ளார். புகழ்பெற்ற பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் மகனும், பிரபல இந்தி திரைப்பட பாடகருமான சிவம் மகாதேவன், அறிமுக இயக்குனர் கருணாகரன் IPL திரைப்படத்தில் டூயட் பாடலை பாடியுள்ளார். TTF வாசன், குஷிதா இருவரும் நடிக்கும் இந்த பாடலை அந்தமான், கேரளா, பாண்டிச்சேரி போன்ற எழில்மிகு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் கிஷோர், அபிராமி, சிங்கம்புலி, ஹரீஷ் பேரடி, ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், போஸ் வெங்கட், திலீபன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். G.R. மதன் கிருஷ்ணன் தயாரிப்பில், விரைவில் வெளியாகவிருக்கும் IPL திரைப்படத்தின் பிண்ணனி இசை சேர்ப்பு…
Read More”‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் எமோஷன், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கதாபாத்திரமாக இசையும் இருக்கிறது” – யுவன் ஷங்கர் ராஜா!
இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா காம்பினேஷனில் நிறைய மறக்க முடியாத பாடல்கள் வந்திருக்கிறது. இந்த ஹிட் காம்பினேஷன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘நேசிப்பயா’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இசைக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தில் பணிபுரிந்தது பற்றிய மகிழ்வான அனுபவத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்து கொள்கிறார். யுவன் ஷங்கர் ராஜா கூறும்போது, “எனது நண்பர் விஷ்ணுவர்தனுடன் பணிபுரிவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் இணைந்து பணிபுரிந்த படங்களை கொண்டாட ரசிகர்கள் ஒருபோதும் தவறியதில்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு நாங்கள் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கியபோது, இசை ஆர்வலர்கள் கொண்டாடும்படியான இசையைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடி பாடல்கள் ரசிகர்கள்…
Read Moreஅகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !!
தமிழ்த் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின், முதல் சிங்கிள் பாடல், “காற்றின் விரல்” இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை, அதிர வைக்கும் விஷுவல்களுடன், திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது இப்பாடல். இப்பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றாக “அகத்தியா” இருக்கும் என்று உறுதியளிக்கிறது. ஃபேண்டஸி வகையில், திகில் மர்மம் நிறைந்த ஒரு புத்தம் புது உலகிற்கு அழைத்துச் செல்லும் இப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. படத்திற்கு மேடை அமைத்துத் தரும் பாடல் காற்றின் விரல் ஒரு மெல்லிசை டூயட் பாடலாகும், இது அகத்தியா படத்தின் களத்தையும் அதன் மாயாஜால உணர்வுகளையும்,…
Read More100 கோடி பட்ஜெட்டில் உருவாகும், “நாகபந்தம்” 5 மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது!!
பிரபல திரைப்படைப்பாளி அபிஷேக் நாமா, தொடர்ந்து, தனது தனித்துவமான திரைப்படங்கள் மூலம், ரசிகர்களை அசத்தி வருகிறார். தற்போது “நாகபந்தம்” எனும் பிரம்மாண்டமான சாகசத் திரைப்படத்தை, உருவாக்கி வருகிறார். தி சீக்ரெட் ட்ரெஷர் எனும் டேக் லைன், ரகசிய புதையலைக் குறிக்கிறது. புதையலைத் தேடும் வித்தியாசமான களத்தில், புத்தம் புதிய தனித்துவமான சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக, இப்படம் இருக்கும். அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் மூலம் கிஷோர் அன்னபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், ஆக்ஷன் பெத்த கபுவின் மூலம் அறிமுகமான விராட் கர்ணா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படத்தை, லட்சுமி ஐரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோருடன் தாரக் சினிமாஸ் இணைந்து வழங்குகிறது. இன்று, தயாரிப்பாளர்கள் இப்படத்தின் ஒரு ப்ரீ-லுக் போஸ்டரை வெளியிட்டனர், அதில் கதாநாயகன் ஒரு பழமையான கோவிலின்…
Read Moreகலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ” !!
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகி வருகிறது “யோலோ”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக, இப்படத்தை இயக்குகிறார். இரண்டு பேர் வாழ முடியாத வாழ்க்கையை, இன்னொரு இரண்டு பேர் வாழ்வார்கள், அது எப்படி என்பதுதான் படம். வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், காதல், காமெடியுடன் ஃபேன்டஸி கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இப்படம் உருவாகி வருகிறது.…
Read Moreநடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சீப் பிசினஸ் ஆபிசர் உமேஷ் குமார் பன்சால் பேசுகையில், ” தனித்துவம் மிக்க மற்றும் அழுத்தமான கதைகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் எங்களின் அர்ப்பணிப்பிற்கு ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் ஒரு சான்றாகும். ஜீ.வி. பிரகாஷ் குமாரின் அபாரமான திறமை மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறோம். கடல் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கற்பனையுடன் கூடிய சாகசம் நிறைந்த படைப்பு ..பார்வையாளர்களை கவரும். மேலும்…
Read More