அன்பான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நண்பர்களுக்கும் மீடியாவை சேர்ந்தவர்களுக்கும் இன்று விஜயதசமி நன்னாளில் ஒரு செய்தி… என்னுடைய இயற்பெயர் சுவாமிநாதன். திரைத்துறைக்கு வந்த பிறகு நான் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எனது பெயரை “சாம்ஸ்” (CHAAMS) என்று மாற்றிக் கொண்டேன். “சாம்ஸ்” என்ற பெயரில் தான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்துள்ளேன். ஆனால் இயக்குனர் சிம்பு தேவன் அவர்களின் இயக்கத்தில் வந்த ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தில் நான் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ கதாபாத்திரம் மிகவும் புகழ் பெற்று அந்தப் பெயரை சொல்லியே ரசிகர்கள் என்னை அழைப்பதும் அதை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கி, பகிர்ந்து, பரவியதால் அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது. எங்கே சென்றாலும் என்னை பார்க்கும் ரசிகர்கள் “ஜாவா சுந்தரேசன்” என்று அழைப்பதோடு தங்கள் சுற்று வட்டாரத்தில்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), கூட்டணியில் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta) ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி ( M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 “அகண்டா 2: தாண்டவம்” , (#BB4 Akhanda 2: Thandavam) டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில்!
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயாபட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும், அதிரடித் திரைப்படமான “அகண்டா 2: தாண்டவம்”, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். இந்தப் படத்தின் டீசர், பெரும் வரவேற்பை பெற்று, ரசிகர்களிடையே உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக – அகண்டா 2: தாண்டவம் உலகமெங்கும் வரும் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான போஸ்டரில் பாலகிருஷ்ணா – நீண்ட முடி, கரடுமுரடான தாடி, புனித மாலைகள் மற்றும் நகைகள் அணிந்து, பாரம்பரிய காவி மற்றும் பழுப்பு நிற ஆடையில், அலங்கரிக்கப்பட்ட திரிசூலத்தை தாங்கியவாறு, பனிமூட்டம் சூழ்ந்த பின்னணியில்…
Read Moreபதற்றமான தென்தமிழகத்து இளைஞர்களில் தப்பிப்பிழைத்த இளைஞர்களின் கதைதான் “பைசன்”
நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக் – 17 அன்று வெளியாகவிருக்கும் படம் பைசன். அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப்படம் உருவாக்கம் குறித்து இயக்குனர் மாரிசெல்வராஜ் கூறியது. “பைசன்” என் கரியரில் முக்கியமான படம் . மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை சொல்ல முயற்சிக்கும் பொழுது ஒரு பக்குவத்தை இந்த கதையே எனக்கு கொடுத்தது. இந்த கதையை மக்கள் பார்ப்பதன் மூலமாக ஒன்று நடக்கும் என்று நம்புகிறேன். இதில் கபடி வீரர் மணத்தி கணேசன் கதையும் இருக்கிறது, என் கதையும் இருக்கிறது , பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்கள் பலபேரின் கதையும் இருக்கிறது. இந்தபடத்திற்காக தன்னை என்னிடம் ஒப்படைத்த துருவ்விக்ரம், தயாரித்த பா.இரஞ்சித் அண்ணன் , நடித்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள்.…
Read Moreவாழ்க்கை என்பது முட்டாள் ஒருவனால் எழுதப்பட்ட கதை வெற்று ஆரவாரமும் வீண் ஆவேசமும் பூஜியத்தை குறிக்கும் சூநியங்கள்…. என்கிறார் -வில்லயம் ஷேக்ஸ்பியர்
உலகிலேயே மிகவலிமையானவள் பெண் தான். மாதம் மாதம் தன் உதிரத்தையே பார்க்கும் சக்தி அவளுக்கே உரியது. எல்லோராளும் வேட்டையாடப் படுபவளும் அவள் தான். சமையல் அறையில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட இந்த சமுதாயத்தில் கிடைப்பதில்லை. எவ்வளவு பெரிய புத்திசாலி பெண்ணும் இந்த சமுதாயத்தில், ஏதோ ஒரு இடத்தில் ஒரு ஆணால் வேட்டையாடப்பட்டு கொண்டே இருக்கிறாள். ஒரு ஆண் தன்னுடைய மகளை தெய்வமாக பார்க்கிறான், அதே ஆண் அதே வயதுடைய வேறு ஒரு பெண்ணை SEX-TOY ஆகவே பார்க்கிறான். பல விதமாக வேட்டையாடப்பட்ட பெண்களின், சமுதாயத்திற்கு எதிரான கோபமே இந்த “முட்டாள் எழுதிய கதை” படம் என்கின்றார் பா.ஆனந்தராஜன். இவர், இதற்குமுன் கிச்சி கிச்சி, யுத்தகாண்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவை பாலா ஜி இராமசாமி மேற்கொள்ள, இசை ஜோகன், எடிட்டிங் வில்சி மற்றும்…
Read Moreவிஷ்ணு விஷால் நடிப்பில் டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் – “ஆர்யன்” டீசர் வெளியானது!
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ம் தேதி உலகமெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ஒரு கொலை விசாரணையின் அறிமுகத்தையும் விஷ்ணு விஷால் கதாப்பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும் இந்த டீசர், ஆர்யன் எனும் காவலதிகாரியின் இருன்மையான ஒரு உலகிற்குள் நம்மை அழைத்துச்செல்கிறது. இதுவரை திரையில் நாம் பார்த்திராத காவலதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் விஷ்ணு விஷால் கவனம் ஈர்க்கிறார். 34 மாத இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் தனி ஹீரோவாக கலக்கியிருக்கும் மிரட்டலான இந்த டீசர் திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.…
Read MoreSMCA பெருமையுடன் வழங்கும் 47வது ஆண்டு “ஷாரோதோத்சவ்” இலையுதிர் திருவிழா
SMCA-வில், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2, 2025 வரை நடைபெறும் 47வது ஆண்டு இலையுதிர் விழா “ஷாரோதோத்சவ்”-ஐ வழங்குவதில் நாங்கள் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். SMCA என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். சக்தி தேவி – மா துர்காவை வணங்குவதன் மூலம் வருடாந்திர இலையுதிர் விழாவை நாங்கள் தொடங்கி வைக்கும் அதே வேளையில், 5 நாட்களுக்கு நடைபெறும் இசை இரவுகள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் உறுப்பினர்களின் மேடை நிகழ்ச்சிகள், உணவு விழா, பல்வேறு போட்டிகள், அதிர்ஷ்டக் குலுக்கல் மற்றும் பலவற்றின் மூலம் பிரமாண்டத்தை அதிகரிக்கிறோம். இந்த மெகா நிகழ்வு, சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஒரு பெரிய கூட்டத்திற்குத் தெரியும் வகையில் தயாரிப்புகளை பிராண்டிங் செய்வதற்கும், பல ஆண்டுகளாக அனுபவித்தபடி 3000+ புரவலர்களால் படிக்கப்படும் ஒரு…
Read Moreவிதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”.
சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில்.., தயாரிப்பாளர் வெங்கடேசன் பேசியதாவது.., இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. அக்டோபர் 10 படம் வருகிறது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. நடிகர் அருள்தாஸ் பேசியதாவது.., கஜேந்திரன் சார் முன்பே அறிமுகம். 10 வருடங்கள் முன்பு என்னை அழைத்து ஃபிலிம் இன்ஸ்டியூட் முடித்துள்ளேன். ஒரு குறும்படம் நடித்துத் தாருங்கள் என்றார். பின் இப்போது மீண்டும் அழைத்து படம் செய்வதாக சொன்னார். மகிழ்ச்சியுடன் சென்று நடித்தேன். திரையுலகில் சாதிப்பதற்காகத் துடிக்கும் அனைவருக்கும் நான் தோள் கொடுப்பேன்.…
Read Moreநடிகர் சசிகுமார் புதிய படம்! யாத்திசை இயக்குனருடன் இணைகிறார்!
நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற ‘யாத்திசை’ பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் முக்கியமான சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் பகிந்து கொண்டதாவது, “நடிகர் சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது பெருமகிழ்ச்சி. பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சுவாரஸ்யமான…
Read Moreநடிகர் ரஹ்மான் பதிவு! இதயத்தை நொறுக்கும் காலை… ஒரு பணிவான வேண்டுகோள் 🕊️
இன்றைய செய்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த செய்தி கேட்டு மிகவும் மன வேதனையடைந்தேன். பல சாதாரண மக்களின் உயிர்கள் மிதிவெள்ளத்தில் பலியானது கேட்டு அதிர்ச்சியிலும் மீளா துயரத்திலும் ஆழ்ந்து விட்டேன். இவ்வளவு பேரிழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மறைந்த ஆன்மாக்கள் சாந்தியடைய என் பிரார்த்தனைகள். ஆனால், இந்த துயரத்தோடு கவலையும் தோன்றுகிறது. இத்தகைய துயரங்கள் மீண்டும் மீண்டும் ஏன் நிகழ வேண்டும்? ஏன் நம்முடைய குழந்தைகள், பெண்கள், நாமே கூட இத்தகைய பெரும் கூட்டங்களில் ஆபத்துக்குள்ளாக வேண்டும்? எந்த அரசியல்வாதிக்காகவும் சரி, எந்த நடிகருக்காகவும் சரி, நம் உயிரைப் பறிகொடுக்க வேண்டிய அளவுக்கு இது அவசியம் அல்ல. நாம் அனைவரும் சற்றேனும்…
Read Moreஸ்ரீகாந்த் ஒதேலா – “தி பாரடைஸ்” படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வருகிறார்!
இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் தி பாரடைஸ், ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களின் ஆவலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘ஜடால்’ வேடத்தில் நானியின் லுக் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதேலா படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைத்து வருகிறார், இதுவரை அவர் தந்து வரும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களைப் பெரிய அளவில் உற்சாகப்படுத்தி வருகிறது. இன்று, “தி பாரடைஸ்” படக்குழு, சினிமா வரலாற்றில் தனித்துவமான இடம் பிடித்த மூத்த நட்சத்திரம் மோகன் பாபுவை ‘ஷிகன்ஜா மாலிக்’ என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்குத் திரும்பும் மோகன் பாபுவின் இந்த வேடம், அவர் பழைய “வின்டேஜ்” அழகை மீண்டும் உயிர்ப்பிக்கும்விதமாக அமைந்துள்ளது. கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சொன்னவுடன் மோகன் பாபு பெரும் உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர்…
Read More