தமிழ் இசையை உலக அரங்கிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமையான தருணம் இணைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’ ஆகிய பாடல்கள், தற்போது வெளியாகியுள்ள சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் வகையில் வெளியாகியுள்ள இந்த சர்வதேச திரைப்படத்தில் தமிழ் பாடல்கள் இடம்பெற்றிருப்பது, தமிழ் இசையின் தனித்துவத்தையும் அதன் உலகளாவிய பயணத்தையும் மீண்டும் வெளிப்படுத்தும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, ‘Enjoy Enjaami’ பாடல் தமிழ் நாட்டுப்புற இசையின் வேர்களையும் நவீன இசை அணுகுமுறையையும் இணைத்து உலகளவில் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது அது சர்வதேச Netflix திரைப்படத்தின் வாயிலாக மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களை சென்றடைந்துள்ளது. அதேபோல், ‘Maamadura’ பாடலும்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
ஏழு கடல் ஏழுமலை’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய துல்கர் சல்மான் ; அக்-1 உலகெங்கும் ரிலீஸ்
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழுமலை’. உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். நிவின்பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ளனர். மேலும் ஒரு எலி முக்கிய பாத்திரமாக வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் நிவின்பாலி மற்றும் தற்போது தமிழில் முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ள நடிகர் சூரி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. அதிலும் கடந்த வருடம் மலையாளத்தில் நிவின்பாலி நடித்த ‘சர்வம் மாயா’ திரைப்படம் 100 கோடியும் இந்த வருடம் ஓணம் பண்டிகைக்கு வெளியான அவரது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் 300 கோடியும் வசூலித்து நிவின்பாலியை…
Read Moreஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க 5 காரணங்கள்!
MCU ரசிகர்களே, மீண்டும் ஒன்று கூடுங்கள்! 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் ரசிகர்களை கொண்டாட வைத்தது. அரங்குகள் நிரம்பிய காட்சிகள், நள்ளிரவு சிறப்புக் காட்சிகள், தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோக்களைப் போல ரசிகர்கள் வேடமணிந்து வந்தது என, உலகம் முழுவதும் ரசிகர்களை ஒரே பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் ஒன்றிணைத்தது. இப்போது, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் என்ற பெயரில் திரையரங்குகளுக்கு வருகிறது. இதன் மூலம், மார்வெலின் மிகப்பெரிய சினிமா மைல்கற்களில் ஒன்றை மீண்டும் பெரிய திரையில் அனுபவிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே வெளியாகவிருக்கும் நிலையில், அந்தக் கதையின் தொடக்கப் புள்ளியை மீண்டும் பார்ப்பதற்கான முக்கிய காரணங்கள் இதோ: *1. மார்வெலின் மிகப்பெரிய சினிமா நிகழ்வை மீண்டும் ஒருமுறை அனுபவியுங்கள்:* 22 திரைப்படங்களின் மூலம் உருவாக்கப்பட்ட ஹீரோக்களையும்…
Read Moreகின்னஸ் உலக சாதனை படைத்த அட்லியின் “ராக்கா” !!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் வி. அருண்குமார் (எ) அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’, சினிமா தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான நபர்களை நிகழ்நேரத்தில் (Real-Time) Motion Capture செய்ததற்காக இப்படம் கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றுள்ளது. இந்த உலக சாதனை கடந்த பிப்ரவரி 2026-ல் நிகழ்த்தப்பட்டது. ஒரே நேரத்தில் 37 கலைஞர்களை நிகழ்நேரத்தில் Motion Capture செய்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்ப சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் 15 செப்டம்பர் 2026 அன்று வழங்கப்பட்டது. கின்னஸ் உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ…
Read Moreமஹாவீர் கர்ணன் ஆக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது ‘மஹாவீர் கர்ணா’(MahaveerKarna)
பென் மூவீஸ் (PEN MOVIES ) ஜெயந்திலால் கடா வழங்க (JAYANTILAL GADA PRESENTS), ஆர்வி ஸ்டூடியோஸ் – ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் (RV STUDIOS & SRI NEELADRI PRODUCTIONS) இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. கர்ணனின் காவியத்தை இந்தியத் திரைகளில் உயிர்ப்பெறச் செய்ய வருகிறது ‘மஹாவீர் கர்ணா’. மகாபாரத இதிகாச நாயகர்களில் ஒருவரான மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க ரமேஷ் வர்மா (RAMESH VARMA) பிரம்மாண்ட திரை அனுபவத்தை காட்சிப்படுத்த இருக்கிறார். ரூ.150 கோடி பொருட் செலவில் தயாராகவுள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனர். இத்திரைப்படத்துக்காக பிரம்மாண்டமான சிறப்பு அரங்குகள், புராண காலத்தை கண்முன் நிறுத்தும் கலை வடிவமைப்புகள், அசர வைக்கும் போர்க்காட்சிகள் மற்றும் உலகத்தர VFX தொழில்நுட்பம் என அனைத்தும் சேர்ந்து, மொத்தத்தில் ஒரு பிரமிக்க…
Read Moreநடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான, ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது!
சமீபத்தில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், அதன் விறுப்பான கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு பெற்று வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொடுத்து வரும் இந்த வரவேற்பு படக்குழுவினரையும் உற்சாகப்படுத்டியுள்ளது. ஊடகங்கள் மத்தியிலும் இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இயக்குநரின் அணுகுமுறை, நடிகர்களின் நடிப்பு மற்றும் வலுவான உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட கதை சொல்லல் ஆகியவற்றுக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ரசிகர்களிடையே உருவாகியுள்ள நேர்மறையான ‘வேர்ட் ஆஃப் மவுத்’ வரவேற்பும் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜிதேஷ் விஸ்வாம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபால் தயாரித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம், அதன் வலுவான உள்ளடக்கம் மற்றும் கதை சொல்லல் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இயக்குநர் சஜீவ் பழூர்…
Read Moreஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 7 எபிசோடுகள் கொண்ட Tamil Zee 5 Original தொடரில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
தேசியம், செப்டம்பர் 18, 2026: பல்வேறு வகைகளில் சிறப்பான பிராந்தியக் கதைகளை வழங்கி, Original Series பிரிவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி வரும் Tamil Zee 5, தற்போது ‘Octopus’ எனும் பரபரப்பான Suspense Thriller தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரத் தயாராகியுள்ளது. வழக்கமான கதை சொல்லும் முறைகளுக்கு மாறாக, வலுவான பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர், மர்மம், உணர்வு மற்றும் சுவாரஸ்யத்தை ஒன்றிணைக்கிறது. ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள ‘Octopus’ 7 எபிசோடுகளைக் கொண்ட Tamil Zee 5 Original தொடராகும். இதில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு இளம் பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, அந்த உண்மையை கண்டறிய ஒரு நெருக்கமான அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர்.…
Read Moreஅசத்தலான போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோவுடன் ‘ராவடி’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!
பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அசத்தலான புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து (Gujilimasthu) வீடியோவுடன் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. ‘ராவடி’ திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோ ரசிகர்களின் கவனத்தை வருகிறது. ஃபார்ட்டி கொண்டாட்டத்துடன் தொடங்கும் இந்த வீடியோ, ‘அராஜகம் பத்தல பத்தல’ என்ற பாடலுடன் காதல், கல்லூரி, அடிதடி, கொண்டாட்டம் என…
Read MoreUAE: திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு விநியோகத்தில் கவனம் செலுத்தி வரும் Triple M Production LLC, தமிழ் திரையுலகில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
UAE-யை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தை அதன் Executive Director ஜி. பாபு ராமகிருஷ்ணன் வழிநடத்தி வருகிறார். UAE, கத்தார், இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் FMCG வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையில் அனுபவம் பெற்ற அவர், Triple M Production மூலம் சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார். Irani, Niram Marum Ulagil, Ace, Akkenam, Bun Butter Jam உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களுடன் Triple M Production இணைந்து பணியாற்றியுள்ளது. UAE, சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் உள்ளிட்ட GCC நாடுகளிலும் திரைப்பட வெளியீடு மற்றும் விநியோக பணிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ராம் இயக்கியுள்ள Yezhu Kadal Yezhu Malai திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோகத்திலும் Triple M…
Read More’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!
தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நிகராக, சுயாதீன பாடல்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் காதல், காதல் தோல்வி, நகைச்சுவை மற்றும் அதிரடியான குத்து இசை ஆகியவற்றை வித்தியாசமான முறையில் இணைக்கும் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது ஆஷிக் மற்றும் ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு, ரூபேஷ் திவாரி இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். ஆட்டம் போட வைக்கும் துள்ளலான இசையும், நகைச்சுவை கலந்த இசை அணுகுமுறையும் கொண்ட இந்தப் பாடல், வழக்கமான காதல் தோல்விப் பாடல்களில் இருந்து வேறுபட்ட ஒன்றாக உள்ளது. ஒரு இளம் காதல் ஜோடிக்கு இடையேயான தொலைபேசி உரையாடலுடன் பாடல் தொடங்குகிறது. அப்போது அந்தப் பெண் ’பிரேக்’ என்ற ஒரு…
Read More
