Mumbai, 2nd June 2026: Quick TV, part of ShareChat & Moj – India’s leading homegrown social media company, broadens its storytelling universe with an exciting new slate of high-intensity micro-drama originals set to premiere this June. Expanding its diverse content library and talent stable, the platform is bringing audiences a powerful mix of revenge thrillers, emotional family sagas, action dramas, romantic scandals, and suspense-filled narratives starring actors such as Ujjwal Chopra, known for acclaimed shows such as P.O.W. – Bandi Yuddh Ke and The Family Man, Rajneesh Duggal, formerly seen…
Read MoreCategory: சினிமா செய்திகள்
கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல் ஆக்ஷன் திரைப்படமான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’, இதில் கதாநாயகனாக கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், தற்போது திரைப்படம் பின்னணி (Post-Production) பணிகளுக்குள் நுழைந்துள்ளது. புகழ்பெற்ற இயக்குநர் ராஜு முருகனின் நீண்டகால உதவியாளரான அறிமுக இயக்குநர் தீனா ராகவன் இயக்கும் இந்தப் படம், அதன் தாக்கமிக்க தலைப்பு டீசர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. கௌதம புத்தரின் சிந்திக்கத் தூண்டும் மேற்கோளுடன் தொடங்கிய அந்த டீசர், தீவிரமான அரசியல் பின்னணி, அதிரடியான காட்சிகள், ஆழமான உணர்வுகள் மற்றும் ராஜு முருகன் எழுதிய சக்திவாய்ந்த வசனங்களால் நிரம்பிய ஒரு விறுவிறுப்பான கதையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. படக்குழுவிற்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ள இந்த தருணத்தில், திட்டமிட்ட அனைத்து படப்பிடிப்புகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு திரைப்படம் தற்போது…
Read Moreதிரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!
தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் உலக அதிசய தலைவா..! ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை வாய்ந்த பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் அன்று அவரது சமாதிக்கு வந்து தங்களது பொற்கரங்களால் பொன்னாடை போத்திட வேண்டுகிறோம் தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமைத்து காயிதே மில்லத் தொடங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை ஆட்சியில் பங்குபெற செய்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் ஒரே தலைவர் நீங்கள்தான். நாளுக்கு நாள் தங்களது புகழ் கூடிக்கொண்டே போகின்றது. உங்களது வாக்கு அப்படியே பலிக்கின்றது. நடக்கப் போவதை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே கூறுகின்ற ஆற்றல் படைத்த தீர்க்கதரிசினி நீங்கள். இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று…
Read Moreபாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவான ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தை அமேசான் பிரைமில் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம், ஜூன் 3, 2026 அன்று அமேசான் பிரைம் வீடியோ ஒடிடி தளத்தில் வெளியாகிறது. பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படம், நிதி நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக தனது முதலாளியின் காரை யாருக்கும் தெரியாமல் டாக்ஸியாக இயக்கும் ஓட்டுநர் ஒருவரின் வாழ்க்கையை திரையில் காட்டுகிறது. பண மற்றும் மனப் போராட்டங்களுக்கு நடுவே ஒரு மனிதன் எதிர்கொள்ளும் சவால்களை உணர்வுப்பூர்வமாக படம் பிடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் அபிநயா ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. கார்மேனி செல்வம், படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களின் மனதில் நீடிக்கும் ஒரு…
Read MoreSR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் – 18” (Under – 18) – பட பூஜை விழா !!
மெட்ராஸ்காரன்படத்தின்வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ்தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட்இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சாசுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” (Under – 18) படத்தின் பூஜை விழா, படக்குழுவினருடன்திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதேநடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் ஜெகதீஸ்பேசியதாவது.. SR PRODUCTIONS சார்பில் இரண்டாவது படமானஅண்டர் – 18திரைப்படத்தின்பூஜைக்கு வருகை தந்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள். இந்தப்படத்தின்தொடக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என் நண்பர் சாய் பரத் தான் எனக்கு இயக்குநரை அறிமுகப்படுத்தினார். கார்த்திக் பெருமாள் சாமி அவர்கள், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுடன் பொல்லாதவன் முதல் அரசன் வரை முதல் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும்பணியாற்றியவர்.…
Read Moreஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவான “பொருநை” ஆவணப்படம் துருக்கியில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு! Foca International Archaeology & Cultural Heritage Film Festival-இல் திரையிடப்படும் முதல் தமிழ் ஆவணப்படம் பொருநை!
ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் 2019 ஆம் ஆண்டு தமிழி என்ற ஆவணப்பட இணையத் தொடரை உருவாக்கி வெளியிட்டிருந்தது. சுமார் 20,000 கிமீ பயணித்து, பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை பலவற்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் முன்னெடுப்பில், பொருநை என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி என்று அழைக்கப்படும் பொருநை நதிக்கரையில் 2020-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை முழுமையாக பதிவு செய்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பொருநை ஆவணப்படத்தை ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப்குமார் – இளங்கோ சம்பத்குமார் ஆகியோர் இந்த ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளனர். சரண்குமார், பாலாஜி பாஸ்கரன், சந்தோஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, திலகேஷ், பரத்பாலாஜி ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளனர். இந்த…
Read Moreஇசைப் பயணத்தை விரிவுபடுத்தும் பாடகியின் புதிய மாலிவுட் அத்தியாயம்!!
தனது மனதை வருடும் குரல் மற்றும் தனித்துவமான இசை அடையாளத்தால் இண்டி இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள கெனீஷா, தற்போது தனது கலைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டத் தயாராக உள்ளார். Mud Fish திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகும் அவர், தனது இசைப் பயணத்தில் ஒரு புதிய மற்றும் உற்சாகமான அத்தியாயத்தை தொடங்குகிறார். சுயாதீன இசை மற்றும் உலகளாவிய மேடை நிகழ்ச்சிகள் மூலம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள கெனீஷாவின் மாலிவுட் நுழைவு, திரைப்படத்தின் இசை உலகிற்கு ஒரு புதுமையான இசைச் சுவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கெனீஷாவுக்கு இசை என்பது எப்போதும் உணர்வுகளை வெளிப்படுத்தவும், மக்களை இணைக்கவும், நேர்மறை ஆற்றலைப் பரப்பவும் உதவும் சக்திவாய்ந்த ஊடகமாக இருந்து வருகிறது. அர்த்தமுள்ள மற்றும் மனதைத் தொடும் இசையை உருவாக்கும் ஆழ்ந்த…
Read Moreமலையாள ZEE5, பேட்ரியாட் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை ஜூன் 5 அன்று அறிவித்துள்ளது
இந்தியா, 22 மே 2026: மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன் 5 அன்று வெளியிடத் தயாராக உள்ளது. இப்படம் மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள திரையுலகின் இரு மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலை மீண்டும் ஒன்றிணைக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உளவு, அரசியல், தொழில்நுட்பம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நாடக அம்சங்களை இணைக்கும் பேட்ரியாட், ரகசியமும் அதிகாரமும் நிறைந்த ஒரு அமைப்பில் கட்டுப்பாடற்ற கண்காணிப்பின் ஆபத்தான விளைவுகளை ஆராய்கிறது. இந்தக் கதையின் மையத்தில், நாட்டைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு அதிநவீன அரசு கண்காணிப்பு திட்டத்தை உருவாக்க உதவிய…
Read Moreஅங்கீகாரம்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு… மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படம், டிரெய்லர் வெளியீட்டிலேயே ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜிப்ரான் இசையமைப்பில் ‘Contempt of Time’ எனும் தலைப்பில் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” என ஆரம்பிக்கும் இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் வலிமையான கருத்துகளுடன் உருவாகியுள்ள இந்தப் பாடலை புகழ்பெற்ற கலைஞரான வைக்கம் விஜயலட்சுமி தனது உணர்வுபூர்வமான குரலில் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியும் மனதை பிசைந்து, வாழ்க்கை, நீதி, அங்கீகாரம் ஆகியவற்றைப் பற்றிய பல கேள்விகளை நம்முள் விதைத்து கலங்க வைக்கிறது. பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள “அங்கீகாரம்” திரைப்படம், விளையாட்டு வீரர்கள்…
Read More“BLOOM” காட்சியழகும் கவிதை நயமும் கொண்ட கலாச்சாரங்களைத் தாண்டிய காதல் இசை வீடியோ!
இந்த கோடைக்காலத்தில் புத்துணர்ச்சியூட்டும் ஒரு புதிய காதல் அலையாக “BLOOM” மலரத் தயாராக உள்ளது. வளர்ந்து வரும் திறமையான கலைஞர்களான விநாயக் வைத்தியநாதன் மற்றும் அக்ஷயா உதயகுமார் இணைந்து நடித்துள்ள இந்த அழகிய காதல் இசை வீடியோவை Aur Ek Flower’s நிறுவனத்தின் சார்பில் ஆதித்யா கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ளார். இந்த இசை வீடியோ பிரபலமான Divo YouTube சேனலில் வெளியாக உள்ளது. ராகுல் அசோக் குமார் இயக்கியுள்ள BLOOM, வெறும் இசை வீடியோவாக மட்டுமல்லாமல், ஒரு நாளின் காலப்பகுதிக்குள் காதல், மாற்றம், நினைவுகள் மற்றும் மனிதர்களுக்கிடையேயான தற்காலிகமான உணர்வுப் பிணைப்புகளை அழகாக வெளிப்படுத்தி மனதைத்தொடும் ஒரு காட்சி அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. BLOOM-இன் மையக் கரு, சென்னை இளைஞன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் இடையேயான கவிதைநயம் நிறைந்த கலாச்சார எல்லைகளைத் தாண்டிய காதலை அடிப்படையாகக்…
Read More