தளபதி விஜய் நடித்த ‘கில்லி’, ‘சச்சின்’, ‘குஷி’ உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் விஜய்யும் சூர்யாவும் இணைந்து நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது. ‘மிருகா’, ‘மாயப்புத்தகம்’, ஜீவா, மிர்ச்சி சிவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘கோல்மால்’ உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எண்ணற்ற படங்களை விநியோகம் செய்தவருமான பி. வினோத் ஜெயின், ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தை அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவம்பர் 21ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது குறித்து பேசிய அவர், “கடந்த 2001ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தளபதி விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம், வைகைப்புயல் வடிவேலுவின் என்றென்றும் நெஞ்சில் நிற்கும் நகைச்சுவை, இசைஞானி…
Read MoreCategory: சினிமா செய்திகள்
பேஷன் ஸ்டுடியோஸ் & கோல்ட்மைன்ஸ் வழங்கும் ஓடிடியில் பெரும் வரவேற்பு பெற்ற ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படம் இயக்கிய இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில், அருள்நிதி- மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ அறிவிப்பும் ஃபன்னான விஷூவல் புரோமோவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது!
வெவ்வேறு ஜானர்களில் பார்வையாளர்களுக்கு நெருக்கமான தரமான கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறது பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம். குடும்ப பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையில் விறுவிறுப்பான, எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த மற்றும் உணர்வுப்பூர்வமாக தொடர்புபடுத்திக் கொள்ளும் பல கதைகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘பாசமலர்’ படத்தில் ஆரம்பித்து 1990-களில் வெளியான ‘கிழக்கு சீமையிலே’, பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘வேதாளம்’ எனப் பல படங்கள் அண்ணன்- தங்கை பாசத்தை பல தலைமுறைகளாக பேசி வருகிறது. அந்த வகையில், ‘மை டியர் சிஸ்டர்’ என்ற உணர்வுப்பூர்வமான கதையை வழங்குகிறது பேஷன் ஸ்டுடியோஸ். கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ், மனிஷ் ஷாவுடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற தன் அறிமுக படத்திலேயே விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெற்ற பிரபு ஜெயராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதை…
Read MoreBehindwoods புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்டமாக தயாரிக்கும், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்
Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை தென்னிந்தியாவின் சிறந்த மற்றும் வரலாற்று புகழ் பெற்ற இசை நிறுவனமான ‘லஹரி மியூசிக்’ அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. Behindwoods Founder & CEO மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் மூன்வாக், இசை, நடனம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கின் கொண்டாட்டமாக உருவாகி வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இதயத்தை வருடும் இசையுடன் வெளியாகும் இந்தப் படம், ரசிகர்கள் மற்றும் திரைத் துறையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த இணைப்பைப் பற்றி பேசும் போது, *லஹரி மியூசிக் நிறுவனர் திரு. மனோஹரன் நாயுடு* கூறுகையில்: “இது எங்களின் 50வது ஆண்டு; ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை பெற்று…
Read Moreபழங்குடியினர் சமூகத்திற்கு 50 லட்சம் செலவில் எந்திரங்கள், உபகரணங்கள் உதவி செய்த :சீக் பவுண்டேஷன்’ !
சென்னை சீக் பவுண்டேஷன் (Seek Foundation)கோத்தகிரி மற்றும் கூடலூர் பழங்குடியினர் சமூகத்துக்கு 50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள ஆம்புலன்ஸ், சரக்கு வாகனம் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளனர்.இது பற்றிய விவரம் வருமாறு: பழங்குடியினர் சமூகங்களின் நிலையான முன்னேற்றத்தையும் நலனையும் மேம்படுத்தும் நோக்கில், ‘சீக் பவுண்டேஷன்’ என்கிற நிறுவனம், அதன் நிறுவனர் டாக்டர் விமலா பிரிட்டோ அவர்களின் தலைமையில், ஒரு ஆம்புலன்ஸ், ஒரு சரக்கு வாகனம் மற்றும் பல தையல் இயந்திரங்களை கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளின் பழங்குடியினர் மக்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த விழா சென்னை செயின்ட் பிரிட்டோஸ் அகாடமி (SBA)யில் நடைபெற்றது. இதில் நீலகிரி வாழ் பழங்குடியினர் நலச் சங்கத்தின் (NAWA) செயலாளர் திரு. ஆல்வாஸ் மற்றும் ‘Seek Foundation’ தலைமை நிர்வாக அதிகாரி, திரு. தாமஸ் பொன்ராஜ், செயிண்ட் பிரிட்டோஸ் அகாடமியின் முதல்வர் திருமதி…
Read Moreகிச்சா சுதீப் நடித்த MARK படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக நிறைவு!
கிச்சா சுதீப் நடித்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் MARK திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இறுதி கட்டத்தில், 200 அடி நீளமுடைய மாபெரும் கப்பல் செட் அமைக்கப்பட்டு, அதில் நடைபெற்ற பாடல் படப்பிடிப்பில் 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் 300 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கலந்து கொண்டனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு பிரமாண்டமாக படத்தை உருவாக்க தயாரிப்பு குழு முழு மனதுடன் செயல்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களான நவீன் சந்திரா, யோகி பாபு, குரு சோமசுந்தரம், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இதன் மூலம் MARK திரைப்படம் தனது படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது வெளியீட்டுக்காக பிந்தைய பணிகளில் இறங்கியுள்ளது.
Read Moreமகளிர் உலக கோப்பையின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின், முதன் முறையாக சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்த, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் !!
இந்திய நாடே போற்றிய மாபெரும் உலகக் கோப்பை வெற்றிக்கு பின், முதன்முறையாக, சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை புரிந்துள்ள, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) பிரம்மாண்ட பிக்கில் பால் (Pickle Ball) நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். சமீபத்தில் உலகின் பலமான 8 அணிகள் கலந்துகொண்ட உலககோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், அசத்தலாக விளையாடியதுடன், அணியை வழிநடத்தி, இந்தியா மகளிர் அணிக்கு முதல் உலககோப்பையை பெற்றுத் தந்து, இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர். இந்தியாவெங்கும் மகளிருக்கு முன்னுதாரண முகமாக மாறியுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், உலகக் கோப்பையின் வெற்றிக்குப் பிறகு, முதன்முறையாக சென்னை வருகை புரிந்துள்ள நிலையில், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சென்று பல்கலைக்கழகத்தின் வேந்தர் Dr. மரியாசீனா ஜான்சன் மற்றும்…
Read More“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப்…
Read Moreசிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!
தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, தான் நடித்த “பிறந்தநாள் வாழ்த்துகள்” படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதில் மகிழ்கிறார்! 56’வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள இரு படங்களில் ஒன்று சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’, மற்றொன்று அப்புக்குட்டி நடித்த ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற அப்புக்குட்டிக்கு, அதன் பிறகு தற்போது நடித்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்! இந்தத் தருணத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் இயக்குனர் ராஜு சந்ரா, தயாரிப்பாளர் ரோஜி மேத்யூ மற்றும் தனக்கு கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா அனில் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவிக்கிறார்… அதேபோல், சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் ‘ஆநிரை’ குறும்பட…
Read Moreஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் பெருமைமிகு தருணம்!!
நவம்பர் 6, 2025 அன்று டைரக்டர்ஸ் நிறுவனம் (IOD இந்தியா) ஏற்பாடு செய்த 2025 லண்டன் உலகளாவிய பெருநிறுவன ஆளுகை மற்றும் நிலைத்தன்மை மாநாட்டில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நமது வேந்தர் டாக்டர் ரெஜீனா ஜேப்பியார் முரளி சிறப்பு விருந்தினராகவும் பேச்சாளராகவும் கலந்து கொண்டார். உலகம் முழுவதிலுமிருந்து வந்த புகழ்பெற்ற கல்வி மற்றும் வணிக தலைவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். புதுமை, நிலைத்தன்மை மற்றும் கல்வியில் தலைமைத்துவம் குறித்த தனது ஊக்கமளிக்கும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். உலக அரங்கில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கல்வித்துறைக்கு இது பெருமைமிகு மைல்கல் தருணமாக அமைந்தது.
Read Moreகிஷோர் – TTF வாசன் இணைந்து மிரட்டும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் – TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘IPL -இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில் கிஷோர், TTF வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். S. பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் G.R. மதன் குமார் தயாரித்திருக்கிறார். இம்மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்…
Read More