இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின் பின்னணியில், 2016-ல் உறவுகளையும் சொந்த மண்ணையும் இழந்து, வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் ஒரு தந்தையும் அவரது சிறுமகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக ‘தாய்நிலம்’ உருவாகியுள்ளது. தாய்நிலத்தை விட்டு வெளியேறிய பிறகு புதிய இடத்தில் வாழ்க்கையை தொடங்க வேண்டிய சூழலில், அந்த தந்தையும் மகளும் சந்திக்கும் சவால்களையும், அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் அன்பையும் திரைப்படம் பேசுகிறது. எல்லாவற்றையும் இழந்து தமிழ்நாட்டிற்கு…
Read MoreCategory: சினிமா செய்திகள்
தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது D56!
தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Sithara Entertainments நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி, Primark Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். மதுரை அருகில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பூஜை நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மக்களுக்கு…
Read Moreஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!
செப்டம்பர் 25, 2026: ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியாகியிருப்பதன் மூலம் அதன் இசைப்பயணம் தொடங்கியுள்ளது. ஸ்ரீ ராமரைப் போற்றும் ஆன்மீக அழைப்பாக உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையையும், திரையிசையின் அழகையும் ஒன்றிணைக்கிறது. ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு மற்றும் தர்மத்தின் மீதான அர்ப்பணிப்பை பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன. பாடல் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் ஸ்ரீ ராமரின் திருநாமம் பாடலில் பக்தி மணம் பரப்புகிறது. இயக்குநரும் தயாரிப்பாளருமான நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “தலைமுறை தலைமுறையாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மை வழிநடத்தும் ஸ்ரீ ராமர்தான் ‘ராமாயணம்’ கதையின் மையம். இருள் சூழும் தருணங்களிலும்,குழப்பம் மற்றும் நிச்சயமற்ற நிலைகளில் அவரது பாதையைப் பின்பற்றுகிறோம். மகிழ்ச்சியான தருணங்களில் நன்றியுடன் அவரை நினைவுகூருகிறோம். ஸ்ரீ ராமருடன் நாம்…
Read Moreதேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!
சரண்ராஜ் செந்தில்குமாரின் சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படமான ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘மண்டவெட்டி’ படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியாகியுள்ளது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படத்தில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் உணர்வுப்பூர்வமான குரல், தீபக் வேணுகோபாலின் இசை மற்றும் தமிழ்மணி எழுதியுள்ள பாடல் வரிகள் ஆகியவை இணைந்து, மர்மமான ஒரு பெண்ணைச் சுற்றியுள்ள மாயத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ‘ராட்சசியே’ பாடல் உருவாக்கியுள்ளது. மெல்லிசையும் மர்மமும் கலந்த இந்தப் பாடல், கேட்பவர்களை ‘மண்டவெட்டி’ உலகத்திற்குள் அழைத்துச்…
Read Moreசஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்தில் ஆலியா பட்டின் இதுவரை காணாத நியூ ஜெனரேஷன் கேபரேட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது!
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம் 2027-ம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. படம் குறித்த ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல் போஸ்டர் வெளியானது முதலே இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, படத்தில் ரன்பீர் கபூர் இடம்பெறும் கதாபாத்திர தோற்றங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது, ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான நியூ ஜெனரேஷன் கேபரேட் அவதாரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் போஸ்டரில் ஆலியா பட், கண்கவர் ஸ்லிட் ஸ்கர்ட் மற்றும் சிகை அலங்காரத்துடன் நாற்காலியில் அமர்ந்தபடி தோன்றுகிறார். அவரது தோற்றம் படத்தின்…
Read More80-களின் பின்னணியில் ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வுகளுடன் வெளியாகியுள்ள ‘பத்தா’ டிரெய்லர்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ (Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios)மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இரண்டு சிறுவர்கள் ரௌடி பத்தாவின் வீர பிரதாபங்களைப் பற்றி விவாதிப்பதுடன் தொடங்குகிறது ‘பத்தா’ டிரெய்லர். யாராலும் தொட முடியாதவர், அசைத்து பார்க்க முடியாதவர் என பத்தாவின் வீரத்தைப் பற்றிப் பலரும் பேச அப்படியே திரையில் வரும் காட்சிகள், அவர் மீதான எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. தொடர்ந்து, ஆக்ஷன் காட்சிகளுடன் பத்தாவின் பல்வேறு முகங்களை…
Read Moreசஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களில் அழுத்தமான வேடத்தில் ஜொலிக்கும் ரன்பீர் கபூர்
சஞ்சய் லீலா பன்சாலி விவரித்திருக்கும் பிரம்மாண்டமான லவ் & வார் திரைப்படத்திற்கான உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ரன்பீர் கபூரின் இரண்டு புதிய தோற்றங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் திரைப்படம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாகும். ரன்பீர் கபூர் – ஆலியா பட் – விக்கி கவுஷல் ஆகிய மூன்று முன்னணி நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் இந்தப் படைப்பு, ரசிகர்களுக்குத் தனித்துவமான திரைப்பட விருந்தாக அமையவுள்ளது. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரன்பீர் கபூர் தோன்றும் பிரமிக்கவைக்கும் முதல் போஸ்டரில் பன்சாலியின் உலகத்தைப் பார்வையாளர்களுக்கு படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்தப் போஸ்டரில் ரன்பீர் கபூர் மிகவும் வசீகரமான தோற்றத்தில் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறார். பன்சாலியின் பிரத்யேகமான பிரம்மாண்டமும், தனித்துவமான விவரங்களும் இந்தப் போஸ்டரில்…
Read Moreவாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’ – 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!
பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்-ன் சமீபத்திய இசை வெளியீடான ‘அன்னக்கிளி’, வாகீசன் ராசையாவின் முதல் ஆல்பமான _தமிழ் கிறுக்கனின் முதல் பாடல், ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது. வெளியான 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. வாகீசனால் எழுதி, பாடி, நடிக்கப்பட்ட ‘அன்னக்கிளி’, தனது சிறுவயது காதலிக்குக் காதலை தெரிவிக்கும் இளைஞனின் இனிமையான கதையை உயிர்ப்பிக்கிறது. கிராமிய தமிழ்நாட்டின் வண்ணமயமான பின்னணியில், இளம் காதலின் அப்பாவித்தனம், வெட்கம் மற்றும் விளையாட்டுத்தனமான கேலியை அழகாக படம்பிடிக்கிறது. சமீபத்தில் எத்திராஜ் கல்லூரியில் Gen Z மாணவர்களிடமிருந்து இந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது, இது குழுவை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. _Top Cooku Dupe Cooku_ நிகழ்ச்சி மூலம் பிரபலமான மோனிஷா பிளெஸ்ஸி, இந்த பாடலில் வாஹீசனுடன் அழகான கெமிஸ்ட்ரியை பகிர்ந்து பாடலுக்கு மேலும் அழகு…
Read Moreஅப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா (Upasana Kamineni Konidela) நியமனம்!
புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை உபாசனா காமினேனி கொனிடெலா மேற்கொள்ள உள்ளார். அப்போலோ மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் தனது மருத்துவக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், உபாசனா காமினேனி கொனிடெலாவை Director – Projects பொறுப்பில் நியமித்துள்ளது. அப்போலோ குழுமத்தின் தலைமை நிர்வாகம், மருத்துவக் குழுக்கள் மற்றும் திட்டப் பங்குதாரர்களுடன் இணைந்து, இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள மருத்துவமனைத் திட்டங்களின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் பணிகளில் அவர் கவனம் செலுத்த உள்ளார். புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளின் விரிவாக்கம் மற்றும் மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான பகுதிகளில் ஒரே மாதிரியான வடிவமைப்புத் தர நிலைகளை உருவாக்குதல் ஆகியவை அவரது முக்கியப் பொறுப்புகளாக இருக்கும். மேலும், மருத்துவமனைகளில்…
Read Moreஎழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’!
பிரபல கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில், திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’. எம் 4 இண்டர்நேஷ்னல் (M4 International) வழங்கும், அப்பு மூவிஸ் (Appu Movies) சார்பில் திருமதி.ஏ.முஸ்தரி M.Sc மற்றும் பாபு தூயவன் B.Com D.F.T, இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பி.நித்யானந்தன் B.A.D.F.T, இயக்குகிறார். ’பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த விவாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘அங்காரன்’ படத்தில் நாயகியாக நடித்த ரெய்னா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாம்சன், ஜெகதீஷ், நிஷா, யார் கண்ணன், ஆர்.அரவிந்தராஜ், ராம்நாத், கிரிஷ் ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜெகன் கல்யாண் இசையமைக்கும் இப்படத்திற்கு கீதாகரண் B.V.A, ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எம்.சயீப் B.V.A, படத்தொகுப்பு செய்ய, ஸ்ரீதர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாஸ்கர்…
Read More
