Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன்–நாயகியாக இணையும் புதிய திரைப்படமான அறிவு படத்தின், படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. Movietron Production நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், பெண் உரிமைகளை மையமாக கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாகவுள்ளது. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்தப் படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, வலுவான சமூக கருத்துக்களை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்வதில் பெயர் பெற்றவர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் D.இமான்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
ஜியோ ஸ்டுடியோஸ் & பி62 ஸ்டுடியோஸ் வழங்கும் ஆதித்யா தரின் ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் துரந்தர் பழிவாங்கல் படம் மூலம் ரன்வீர் சிங் களமிறங்குகிறார் – டிரெய்லர் வெளியானது!
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வெடிகுண்டாக வெடித்துள்ளது. இந்திய திரையுலகில் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்த துரந்தர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது இன்னும் பிரமாண்டமாக, எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் மிரட்டலாக திரும்பியுள்ளார். ஜஸ்கிரத் மற்றும் ஹம்ஸா என இரண்டு அவதாரங்களில் அவர் காட்டும் ஆக்ரோஷம் டிரெய்லரில் அதிர வைக்கிறது. தந்திரமான மாஸ்டர் மைண்ட் அஜய் சன்யாலாக மாதவன், மிரட்டும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பாலாக அர்ஜுன் ராம்பால் மற்றும் எஸ்பி சௌத்ரி அஸ்லாமாக சஞ்சய் தத் ஆகியோர் தங்களது பவர்ஃபுல்லான நடிப்பால் மிரட்டியுள்ளனர். தியேட்டர்களில்…
Read Moreசர்வதேச மகளிர் தினத்தில் ‘மயிலா’ டீசர் வெளியீடு — IFFR Premiere மற்றும் NETPAC பரிந்துரைக்கு பிறகு புதிய கவனம்!
சென்னை, மார்ச் 8: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, “மயிலா” திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெண்களின் வலிமை, பொறுமை மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் காட்டும் துணிச்சலை பிரதிபலிக்கும் கதையை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது. மயிலா படத்தை எழுதி இயக்கியவர் செம்மலர் அன்னம்.தமிழ் நாட்டின் கிராமப்புற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள “மயிலா”, சுயமரியாதை, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்திற்காக முயற்சி செய்யும் ஒரு வேலைக்குப் போகும் சாதாரண பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அவளுடைய சிறிய மகளின் பார்வையில் கூறுகிறது. இந்தப் பார்வையின் மூலம், குடும்பங்களையும் சமூகங்களையும் அமைதியாக வடிவமைக்கும் பெண்களின் வாழ்வியலை இப்படம் வெளிப்படுத்துகிறது. “மயிலா” உலகத் திரையரங்கில் முதன்முதலாக International Film Festival Rotterdam (IFFR) திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு உலக சினிமாவில் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் Bright Future பிரிவில் இப்படம் இடம்பெற்றது.…
Read Moreமிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!
2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், மற்றுமொரு முதன்மை கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார். ‘பூவே உனக்காக’ புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் நடித்துள்ளனர். முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும்…
Read More‘லீடர்’ டீசருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ரசிகர்களுக்கு நன்றி; படம் ஏப்ரலில் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்று உறுதி
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது. ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ்.…
Read Moreகௌதம் ராம் கார்த்திக்கின் அதிரடி அரசியல் களத்தில் வெளியான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டைட்டில் டீசர்!
“மனமே அனைத்திற்கும் காரணம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம்.” என்று கவுதம புத்தர் சொன்ன பொன்மொழியுடன் Bloody Politics படத்தின் டைட்டில் டீசர் தொடங்குகிறது. தீனா ராகவன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், ஒரு வலுவான அரசியல் மனோபாவத்தை உருவாக்குகிறது. டீசர் மெதுவாக தனது உலகத்திற்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. இதில் மூத்த நடிகர் ஜெயபாலன் நடித்துள்ள முதியவருக்கான கதாபாத்திரத்துக்கும், கதாநாயகனின் குரலுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் முக்கிய அம்சமாக உள்ளது. ஒரு கொடிக்கம்பத்தின் அர்த்தமும் அதன் அரசியல் அடையாளமும் குறித்து அவர்கள் பேசும் இந்த உரையாடல், C. N. அண்ணாதுரை முதல் நடிகர் விஜய் வரை உள்ள அரசியல் குறிப்புகளை நுட்பமாக இணைக்கிறது. இந்தக் காட்சிகளை எல்லாம் சமூக இயக்குநர் ராஜு முருகன் எழுதிய கூர்மையான வசனங்கள் உயிர்ப்பிக்கின்றன. அதனைத் தொடர்ந்து, பின்னணி குரல்…
Read Moreமார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் ‘லோக்கல் டைம்ஸ்’ தமிழ் காமெடி-டிராமா தொடர் உலகளாவிய வெளியீடு — கலகலப்பான டிரெய்லருடன் அறிவிப்பு
ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ள ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில், Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 13 அன்று வெளியாகும் ‘லோக்கல் டைம்ஸ்’, பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார், அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே,தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது தமிழ் ஒரிஜினல் காமெடி-டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை மார்ச் 13 அன்று அறிவித்துள்ளது. சிரிக்க வைக்கும் அதே சமயம் மனதை தொடும் டிரெய்லருடன் வெளியிடப்பட்ட…
Read Moreசெல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு “மனிதன் தெய்வமாகலாம்” படக்குழு அதிரடி டீசரை வெளியிட்டது.
திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான திரைப் பங்களிப்புக்காக அறியப்பட்டவர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கான சிறப்பு விருந்தாக, அவரது வரவிருக்கும் திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.அது உடனடியாக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 70 விநாடிகள் நீளமான இந்த டீசர், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களின் திறமையான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துகிறது. சிறுமி, ஆசிரியர் மற்றும் செல்வராகவன் இடையேயான குரல் உரையாடலுடன், படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வலுவான காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒரு ஈர்க்கும் திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும் இந்த டீசர், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து உடனடியாக நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது. மனிதன் தெய்வமாகலாம் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி…
Read Moreநடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர், “கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதை பற்றி உணர்வுப்பூர்வமான திரைக்கதையை கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் படமாக்கும்போது சில சவால்களை சந்தித்தோம். ஆனால், அதையும் தாண்டி நடிகர்களின் நடிப்பு, படமாக்கப்பட்ட சூழல் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. பிரியங்கா மோகனின் பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை இந்த கதைக்குள் கொண்டு வந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி ரசிகர்களுக்கும்…
Read Moreஅர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி” பட டைட்டில் டீசர் வெளியானது !!
புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நகர வாழ்க்கையில் கடனில் போராடும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையோடு ஆரம்பிக்கும் டைட்டில் டீசர், அடுத்தடுத்து ஆச்சரியம் தரும் காட்சிகளால் அதிர வைக்கிறது. அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பண மிஷின், பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என கண்கள் விரிய ஒரு புதுமையான கதைக்களத்திற்குள் நம்மை இழுத்து செல்கிறது. உணர்வுப்பூர்வமாக ஆரம்பிக்கும் இந்த டைட்டில் டீசர் காமெடி டிராக்கில் மாறி, வெகு சுவாரஸ்யமாக நிறைவு பெறுகிறது. இந்த படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜூன் தாஸ்,…
Read More