குனீத் மோங்கா கபூரின் சீக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இணையும் புதிய தமிழ் படம்!

ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநருடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது. குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரின் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது. எளிமையான பூஜைக்கு பிறகு மதுரையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ’தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’, ’தி லஞ்ச்பாக்ஸ்’, ’மசான்’, ’பாக்லைட்’ மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற ’காதல்’ போன்ற உலகளவில் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம். தனித்துவமான கண்ணோட்டத்துடன், புதிய திறமையாளர்களை வளர்த்து உலகளவில்…

Read More

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

இளம் நடிகர் திரு வீர், தனது சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில், சமீபத்தில் வெளியான சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்குகிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிப்பில், “புரொடக்ஷன் நம்பர் 2 “ வாக இப்படம் உருவாகிறது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான சிவம் பஜே ( Shivam Bhaje ) விமர்சகர்களிடம் பெரும் பாராட்ட்டுக்களைப் பெற்றது. தற்போது கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இயக்குநர் பரத் தர்ஷன் எழுதியுள்ள மற்றொரு சுவாரஸ்யமான, பொழுதுபோக்கு கதையை தயாரிக்கவுள்ளது.…

Read More

டிஸ்னியின் ‘ஜூடோபியா 2’ படத்தில் தைரியமான காவல்துறை அதிகாரி ஜூடி ஹாப்ஸிக்கு இந்தியில் குரல் கொடுத்திருக்கிறார் நடிகை ஷ்ரதா கபூர்!

டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நவம்பர் 28 அன்று வெளியாகும் ‘ஜூடோபியா 2’ படத்தின் இந்தி வெர்ஷன் அறிவிப்புக்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சிறப்பு சந்திப்பில், தைரியமான காவல்துறை அதிகாரியான ஜூடி ஹாப்ஸூக்கு இந்தியில் குரல் கொடுத்தது பற்றிய தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார் நடிகை ஷ்ரதா கபூர். இந்த சந்திப்பில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை தான் ஆழமாக உள்வாங்கிக் கொண்டது பற்றி ஷ்ரதா பேசினார், “ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவள் தன் நிலையில் உறுதியாக இருந்ததை நிச்சயமாக என்னால் புரிந்துகொள்ள முடியும். அவள் அதிகாரம் மிக்கவள், தேவைப்படும் தருணத்தில் மென்மையாகவும் இருப்பாள். ஜூடியாக இருந்தது மகிழ்ச்சி!” மேலும் ஒரு அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் கிரியேட்டிவ் புராசெஸ் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தது மிகவும் வித்தியாசமான அனுபவம். வேடிக்கையாகவும்…

Read More

நாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் !

மரபும் மாயையும் கலந்த அற்புதமான ஆன்மீக பயணத்துக்கு தயாராகுங்கள்! இளம் நடிகர் விராட் கர்ணா தன் திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட தெய்வீகமான பான் இந்திய அனுபவத்தை, நாகபந்தம் மூலம் வழங்கவுள்ளார்.  தொலைநோக்கு இயக்குநர் அபிஷேக் நாமா அவர்களின் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி அவர்களின் பெருமித தயாரிப்பாக உருவாகி வருகிறது நாகபந்தம். இது சாதாரண படம் அல்ல — ஆன்மீகத்தையும் ஆக்ஷனையும் இணைக்கும் மாபெரும் புராண திரில்லர்! விராட் கர்ணா தனது கதாபாத்திரத்திற்காக, முற்றிலும் தன் உடலை மாற்றும் வகையில்,  பெரும் அர்ப்பணிப்புடன்  கடுமையாக உழைத்து வருகிறார். அவரது அர்ப்பணிப்பும் தீவிர உழைப்பும், ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இயக்குநர் அபிஷேக் நாமா தலைமையில் உருவாகும் இந்தப் படம், பக்தியும் அதிரடி அம்சங்களும் இணைந்த ஒரு அற்புதமான திரை அனுபவமாக இருக்கும். ஆழமான ஆன்மீக கருப்பொருளுடன் கூடிய வணிக…

Read More

“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப்…

Read More

நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார். அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ்…

Read More

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று திரையிடப்படும் இந்திய திரைப்படம் ‘பிரமயுகம்’!

நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் உருவான ‘பிரமயுகம்’ (மலையாளம்- 2024) திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியூம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் திரையிடல் பிப்ரவரி 12, 2026 அன்று அகாடமி அருங்காட்சியகத்தில் ஜனவரி 10 – பிப்ரவரி 12 வரையிலும் நடைபெறும் நிகழ்வில் திரையிடப்படும். ராகுல் சதாசிவன் எழுதி இயக்கிய ‘பிரமயுகம்’ திரைப்படம் கேரள நாட்டுப்புறக் கதைகளின் இருண்ட காலங்களின் பயம், சக்தி மற்றும் மனித பலவீனம் பற்றிய கதையாகும். கருப்பு & வெள்ளையில் (Black & White) வெளியான இந்தத் திரைப்படம் அதன் ஆளுமைத்திறன், கதைசொல்லல் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டது. ‘பிரமயுகம்’ திரைப்படத்தில் கொடுமோன் போட்டி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் நடிகர் மம்முட்டி. அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ்…

Read More

டான் டிராக்டன்பெர்க்கின் ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படம் ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது!

’பிரிடேட்டர்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் மிகச்சிறப்பாக வந்திருப்பதை இயக்குநர் டான் டிராக்டன்பெர்க் உறுதிபடுத்தியுள்ளார். அவரது சமீபத்திய படமான ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் 90% மதிப்பெண்களுடன் பாராட்டுகள் பெற்றது. அறிவியல் புனைக்கதையான இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் புதுமையான அறிவியலும் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும். டிராக்டன்பெர்க்கின் ’பிரே அண்ட் பிரிடேட்டர்: கில்லர் ஆஃப் கில்லர்ஸி’ன் வெற்றியைத் தொடர்ந்து, ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படமும் புதுமையான கதையாக்கம், அதிரடி ஆக்‌ஷன் ஆகியவற்றிற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதில் பிரிடேட்டர் முதன்மை கதாநாயகனாகக் காட்டப்படுகிறது. இந்தப் படத்தில் எல்லே ஃபேன்னிங் மற்றும் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோமடங்கி ஆகியோருடன் திறமையான பல நடிகர்களும் நடிகத்துள்ளனர். படம் பற்றி நடிகர் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோமடங்கி பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பிரிடேட்டர் ஃபிரான்சைஸின் இந்தப் படத்தைப் பார்த்து…

Read More

கிடாக்கறி விருந்து வைத்து பைசன் படத்தின் வெற்றியை ஊர் மக்களோடு கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ்

பைசன் படம் வெற்றியை படத்தில் பணியாற்றிய ஊர் மக்களோடு கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்க்கத்தில் துருவ், அனுபமா, ரெஜிஷா, அமீர் நடிப்பில் வெளியான பைசன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு பிடித்த படமாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் லாபகரமான படமாகவும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் படக்குழுவினர் நடத்தினார்கள். அதனை தொடர்ந்து இந்த படம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்றது உதவிய, பணியாற்றிய விளையாட்டுவீரர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருநெல்வேலியில் இயக்குனர் மாரிசெல்வராஜ் கலந்துகொண்டு கிடா விருந்து உபசரிப்போடு , ஊர்மக்களோடு படத்தின் வெற்றியை கொண்டாடினார். மாரிசெல்வராஜின் படங்களில் தனது ஊர் மற்றும் கிராமத்து அசல் மனிதர்களை தனது திரைக்குள் கொண்டுவருவதை வழக்கமாகக்கொண்டுள்ளர். அந்த வகையில் பைசனின்…

Read More

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

      சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனந்தா. வலியை அமைதியாக மாற்றும் நம்பிக்கையை மையமாகக கொண்ட ஐந்து ஆழமான, மனதை நெகிழ வைக்கும் கதைகளை இப்படம் வழங்குகிறது. பா. விஜய் வசனம் மற்றும் பாடல்களை எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். இப்படம் ஒவ்வொரு மனித வாழ்விலும் வழிகாட்டும் கண்ணுக்கு தெரியாத அருளை படம்பிடித்து காட்டுகிறது. ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்னம், ஒய். ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ஸ்ரீ ரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்துள்ள அனந்தா ஒரு வழக்கமான பக்தி படம் அல்ல..! இது வாழ்க்கை, அன்பு மற்றும் இறைவனின் காணமுடியாத கிருபையை கொண்டாடும் ஒரு திரைக்காவியம். யதார்த்தம், உணர்ச்சி மற்றும் தெய்வீக ஆற்றல் ஆகியவற்றை கலந்து, இப்படம் ஐந்து இதயப்பூர்வமான…

Read More