வல்ல தேசம் படம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா, புதுமையான முறையில் ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி அசத்தியிருக்கிறார். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி அசத்தியிருக்கிறார். சிறு வயது முதலே சினிமா துறை மீது காதல் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என இயங்கி வரும் நந்தா தனது படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநராகத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், 2017-ல் வெளிவந்த “வல்ல தேசம்” எனும் அதிரடித் திரில்லர் திரைப்படத்தின் மூலம் பரவலான பாராட்டுகளைப்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் RB செளத்ரியை நேரில் சந்தித்த வடிவேலு – ‘மாரீசன்’ மீது மகிழ்ச்சி பகிர்வு!
திரு. RB செளத்ரி அவர்களின் தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98 வது திரைப்படமாக வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடித்திருக்கும் “மாரீசன்” திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த வடிவேலு அவர்கள் திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதையொட்டி அவர் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு RB செளத்ரி அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து திரு.வடிவேலு அவர்கள் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.
Read Moreசூர்யாவின் மாஸ் திருவிழா ‘கருப்பு’ பட டீசர் வெளியானது !
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தின் அப்டேட்டுக்காக, ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், இந்த மெகா பட்ஜெட் படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே மாபெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 1 நிமிடம் 38 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர், ஒவ்வொரு காட்சியிலும் சூர்யாவின் மாஸ் லுக், அனல் பறக்கும் ஃபிரேம்கள், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வசனங்கள் என சூர்யா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், அவரின் வழக்கமான ஃபார்முலாவிலிருந்து விலகி, அதிரடியான மாஸ் கோணத்தில், துணிச்சலான புது முயற்சியாக அமைந்துள்ளது. சூர்யா, ஆர்ஜே பாலாஜி இணைந்திருக்கும் இந்த புதுக்கூட்டணி, அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையிலான அட்டகாசமான படைப்பை…
Read Moreநடிப்பில் புதிய சவால்களை கொண்ட படமாக ‘பிளாக்மெயில்’ அமைந்தது”- நடிகை தேஜூ அஸ்வினி!
தன்னுடைய இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி தற்போது வெளியாக இருக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தில் நடித்திருக்கிறார். மு. மாறன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ‘படாக் படாக்’ பாடலில் ஜிவி பிரகாஷ்குமார்- தேஜூ அஸ்வினி இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த வைரல் ஜோடி தற்போது பெரிய திரையிலும் இணைந்துள்ளது. இந்த முறை இன்னும் தீவிரமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் கதைக்களமாகவும் அமைந்திருக்கிறது. எனர்ஜிடிக் மற்றும் யூத்ஃபுல் கதாபாத்திரத்தில் மட்டுமே இதுவரை பார்த்திருந்த தேஜூ அஸ்வினி முதல் முறையாக சீரியஸான பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். “வழக்கமான நடிப்பைத் தாண்டி பல…
Read Moreஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘காந்தாரா: சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
‘காந்தாரா : சாப்டர் 1’ படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது ‘ ராஜ குமாரா’ , ‘கே ஜி எஃப்’, ‘சலார் ‘ மற்றும் ‘ காந்தாரா’ போன்ற சாதனை படைத்த படங்களுக்கு பின்னால் உள்ள – அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று ‘காந்தாரா :சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. படத்தின் பின்னணியில் உள்ள காவிய தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இந்த வீடியோ வழங்குகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைக்கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது. மேலும் இது மூன்று ஆண்டுகளுக்கும் மேலான…
Read More20 பிரபல பாடகர்கள் பாடியதோடு திரையிலும் தோன்றியுள்ள ‘ஹேப்பி’ பாடல் வைரல் ஆனது குறித்து இயக்குநர் சித்தார்த் சந்திரசேகர் பெருமிதம்
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பலே பாண்டியா’. விஷ்ணு விஷால் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை வேடங்களில் நடித்த இப்படத்திற்கு தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருந்தார். ‘பலே பாண்டியா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹேப்பி’ பாடல் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகி 10 லட்சம் பார்வைகளை கடந்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. கவிஞர் வாலி எழுதிய இப்பாடலை 20 பிரபல பாடகர்கள் பாடியதோடு திரையிலும் தோன்றி இருந்தனர். ஹரிசரண், தேவன் ஏகாம்பரம், நரேஷ் ஐயர், நவீன் மாதவ், பரவை முனியம்மா, மலேசியா வாசுதேவன், ரஞ்சித், ஆலாப் ராஜு, ரகீப் ஆலம், அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ், வேல்முருகன், மாணிக்க விநாயகம், முகேஷ், மால்குடி சுபா, திவ்யா, அனிதா, சுசித்ரா, விஜய் யேசுதாஸ்,…
Read More‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் ‘பெத்தி'( Peddi) படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு!!
”குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடித்து வரும் ‘பெத்தி’ ( Peddi) படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘குளோபல் ஸ்டார் ‘ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான ‘பெத்தி’ ( Peddi) திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த திரைப்படம்- இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் நாடு…
Read Moreஅதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வந்துவிட்டது. இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வேற லெவல் சர்ப்ரைஸ், என பல புதுமைகளுடன் அசத்த வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் 11. தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர். பல இளம் திறமையாளர்களின் வாழ்வின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர். சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்…
Read Moreதிரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ இசை ஆல்பம் !!
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் பாடலை திரு. கமல்ஹாசன் பாராட்டியதுடன் அக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினரிடையே இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்கள் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. சமீபத்தில் தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார் இசையில், இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் எழுத்தில் வெளியான, ‘ச்சீ ப்பா தூ…’ பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடலின் வீடியோ ஆல்பத்தை பார்த்த திரு. கமல்ஹாசன் பாடலினால் கவரப்பட்டு, அக்குழுவினரை அழைத்து பாராட்டியதுடன், அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். திரு. கமல்ஹாசனின் பாராட்டினால் இக்குழுவினர் பெரும்…
Read Moreஈழத்தில் உருவாகியிருக்கும் “அந்தோனி” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.!!
ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், கயல் வின்சன்ட் மற்றும் TJ.பானு இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி இலங்கை – யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது டப்பிங் பணிகள் ஆரம்பித்திருப்பதாக படக்குழுவினர் அறியத்தருகின்றனர். அந்தோனி திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்குகின்றனர். ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் கலைவளரி சக ரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். திரு.இரமணன் அவர்கள் இத்திரைப்படத்தில் இணை இயக்குனராகவும் பணிபுரிகின்றார். மற்றும் இணை தயாரிப்பாளர்களாக விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) , சிறீஸ்கந்தராஜா (ட்ரிம்லைன் புரடக்ஷன்ஸ்) ஆகியோர் இணைந்து கொண்டிருக்கின்றார்கள். கயல் திரைப்பட நடிகர் “கயல் வின்சன்ட்” அவர்களும், சினிமா உலகில் தனக்கென தனி…
Read More