ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நஸ்ரியாவின் சூக்ஷ்மதர்ஷினி!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த “சூக்ஷ்மதர்ஷினி” எனும் அட்டகாசமான ஃபேமிலி டிராமா திரில்லரை, கடந்த ஜனவரி 11 முதல் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. நஸ்ரியா நடிப்பில், இந்த மிஸ்டரி த்ரில்லர் திரைப்படத்தினை, அதுல் ராமச்சந்திரன் மற்றும் லிபின் டி.பி. எழுத்தில், எம்.சி. ஜித்தின் இயக்கத்தில், ஹாப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏவிஏ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம், சிறு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்றுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. பாசில் ஜோசப், அகிலா பார்கவன், மெரின் பிலிப், பூஜா மோகன்ராஜ், சித்தார்த் பரதன், தீபக் பரம்போல், மனோஹரி ஜாய், அபிராம் ராதாகிருஷ்ணன், ஜனனி ராம் (டயானாவாக), ஹெஸ்ஸா மேஹக் மற்றும் சரஸ்வதி மேனன் உட்பட ஒரு பெரும் நட்சத்திரம்…

Read More

‘நிறம் மாறும் உலகில் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகி வரும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் , விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி , விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி ,துளசி, ஐரா கிருஷ்ணன்…

Read More

நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் ‘கைக்குட்டை ராணி’ ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது

திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படமான‌ ‘கைக்குட்டை ராணி’ 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. டி ஃபிலிம்ஸ் பேனரில் தேவயானி தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள ‘கைக்குட்டை ராணி’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எடிட்டர் பி. லெனின் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ். ஒலி வடிவமைப்பையும் கையாண்டுள்ளனர். சுமார் இருபது நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது. ‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தை பார்த்த 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா…

Read More

ரிலீஸ் செய்ய உதவியவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்!!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் மனோபாலா அஞ்சலி வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான “மதகஜராஜா” படம் பல்வேறு பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது இயக்குநர் சுந்தர் சி விஷால் ஏசி சண்முகம் திருப்பூர் சுப்ரமணியம் ஜெமினி பிலிம்ஸ் உள்ளிட்டவர்களின் சீரிய முயற்சியால் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. படத்தை தயாரித்தவர்கள் விநியோகித்தவர்கள் திரையிட்டவர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மனதிலும் மகிழ்ச்சியை பொங்க வைத்திருக்கிறது மதகஜராஜா. படம் எடுக்கப் பட்டு தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டால் அந்த படம் ஓடாது என்ற வறட்டு வாதத்தை அடித்து நொறுக்கி இருக்கிறது இந்த ப்ளாக் பஸ்டர் வெற்றி. சினிமாவை நேசிக்கும் எல்லோருக்கும் இது மிக மகிழ்ச்சியான தருணமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் நல்ல படங்களை எடுத்தால் அதன் வெற்றியை எத்தனை ஆண்டுகள் ஆனாலும்…

Read More

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜி. துரை ராஜ் கவனிக்கிறார். தாய் மாமன் உறவைப் பற்றி மண் மணம் கமழும் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார். இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும்…

Read More

விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் படத்தின் முதல் சிங்கிளான “சொல்லிடுமா” பாடல் வெளியானது

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி அவர்களின் 12வது தயாரிப்பான ககன மார்கன் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான “சொல்லிடுமா” பாடலை வழங்குவதில் படக்குழுவினர் பெருமை அடைகிறார்கள். விஜய் ஆண்டனியே இசையமைத்துப் பாடியிருக்கும் இந்த பாடல், அனைத்து வயதினரையும் சுண்டி இழுக்கும் வகையில் Energetic மற்றும் vibe ஆன பாடலாக அமைந்துள்ளது. வசீகரிக்கும் பாடல் வரிகளைக் கொண்டு “சொல்லிடுமா” பாடல் இசையமைக்கப் பட்டிருக்கிறது.இசையமைப்பாளராகவும், பாடகராகவும் விஜய் ஆண்டனி மீண்டும் தனது தனித் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுப்பதோடு மட்டுமல்லாமல் படத்தின் வெளியீடு எப்பொழுது என்ற எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. பிரபல எடிட்டரான லியோ ஜான் பால் இயக்கிய ககன மார்கன், ஒரு கொலை மர்மம் சார்ந்த திரில்லர் வகையான படமாகும். தலைமைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனியுடன், அறிமுக நாயகன்…

Read More

பொங்கல் வாழ்த்துக்களுடன் திரை வெளியீட்டை அறிவித்த “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” படக்குழு !!

Plan3 Studios சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது. Mathens Group இப்படத்தினை இணைந்து வழங்குகிறது. பொங்கல் வாழ்த்துக்களுடன், பிப்ரவரி திரை வெளியீடு குறித்த, அறிவிப்பு போஸ்டரை, தயாரிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிராமத்து வீட்டுப் பிண்ணணியில், அன்பான விலங்குகளுடன், கர்பிணி மனைவியை அணைத்தபடி, அப்புகுட்டி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. கிராமத்துப் பின்னணியில் அழுத்தமான சமூகம் கருத்துடன், வித்தியாசமான ஃபேண்டஸி டிராமாவாக இப்படத்தை இயக்கியுள்ளார் ராஜு சந்ரா. மலையாளத்தில் இரண்டு படங்கள் இயக்கிய ராஜுசந்ராவின் முதல் தமிழ்ப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. தேசியவிருது நாயகன் அப்புக்குட்டி…

Read More

“மத கஜ ராஜா: மக்களின் பேராதரவுடன் வெற்றி நடைபோடும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்!”

அனைவருக்கும் வணக்கம், மத கஜ ராஜா – வை ராஜா- வாக கொண்டாடும் மக்களின் பேராதருடன் 100கோடி வசூலை எதிர்நோக்கி தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று வெளியான மத கஜராஜா திரைப்படம் மக்களின் பேர் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் வெளியான போதும் மக்கள் அளித்த வரவேற்பில் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் ஆகவும் இன்னும் பல திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்தும் வருகின்றனர். மக்களின் பேராதருடன் 100கோடி வசூலை எதிர்நோக்கி இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம் திரைப்படம் நன்றாக இருந்தால் அதனை மக்கள் எப்போது வெளியானாலும் மக்களின் ஆதரவும் பாராட்டுகளும் கிடைக்கும் என்பதற்கு இப்படம் மிகப்பெரிய சாட்சியாக அமைந்துள்ளது. திரையுலகில் நல்ல திரைப்படங்கள் பல சமயங்களில் வெளியிட முடியாத சூழ்நிலையில் காலம் கடந்து வெளியாகி தோல்வியும் அடைந்துள்ளது உதாரணமாக இளைய தளபதி…

Read More

ஏஸ்’ (ACE) படத்தில் போல்டு கண்ணன் ஆக கலக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஏஸ் ‘ (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ்’ (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால்…

Read More

குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி”படத்தில், தேசி ராஜு பாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு !!

குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில், இணைந்துள்ள விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் வெளியானது !! குயின் அனுஷ்கா ஷெட்டி, கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடி, UV கிரியேஷன்ஸ் வழங்கும், ஃபர்ஸ்ட் பிரேம் எண்டர்டெயின்மெண்ட்டின், பான் இந்தியா திரைப்படமான “காதி” படத்தில், இணைந்துள்ள நடிகர் விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் வெளியானது !! தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில் மிரட்டலான அதிரடி கதாப்பாத்திரத்தில், நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், மிரட்டலான ஆக்சன் கதாப்பாத்திரத்தில் தோன்றும் கிள்ம்ப்ஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேர்பைக் குவித்தது. UV கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா…

Read More