குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி”படத்தில், தேசி ராஜு பாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு !!

குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில், இணைந்துள்ள விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் வெளியானது !! குயின் அனுஷ்கா ஷெட்டி, கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடி, UV கிரியேஷன்ஸ் வழங்கும், ஃபர்ஸ்ட் பிரேம் எண்டர்டெயின்மெண்ட்டின், பான் இந்தியா திரைப்படமான “காதி” படத்தில், இணைந்துள்ள நடிகர் விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் வெளியானது !! தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில் மிரட்டலான அதிரடி கதாப்பாத்திரத்தில், நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், மிரட்டலான ஆக்சன் கதாப்பாத்திரத்தில் தோன்றும் கிள்ம்ப்ஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேர்பைக் குவித்தது. UV கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா…

Read More

“ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” – நடிகர் ஆகாஷ் முரளி!

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளியின் முதல் திரைப்படமான ‘நேசிப்பாயா’ ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள நடிகர் ஆகாஷ் முரளி ஆர்வமாக இருக்கிறார். படம் வெளியாவது பற்றி தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் ஆகாஷ் முரளி, “எனக்கு பயம் இருக்கவே செய்கிறது. படம் பார்த்துவிட்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை வெளியான படத்தின் விஷூவல் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. படத்திற்கும் அதே போன்ற பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என எதிர்பார்க்கிறேன்” என்றார். படத்தின் ட்ரெய்லரில் திறமையான நடிகர்கள் மற்றும் பிரமாண்ட தயாரிப்பு போன்றவை மூலம் இதன் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை…

Read More

“படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக ‘நேசிப்பாயா’ இருக்கும்” – நடிகை அதிதி ஷங்கர்!

குறுகிய காலத்திலேயே தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அதிதி ஷங்கர். இப்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கும் ’நேசிப்பாயா’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. படம் பற்றி நடிகை அதிதி ஷங்கர் கூறும்போது, “ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணு வர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது மற்ற நடிகர்களைப் போல எனக்கும் கனவாக இருந்தது. கதாநாயகிகளை தன்னுடைய படத்தில் எப்போதும் அவர் அழகாக காட்டுவதோடு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வைப்பார். முழு படப்பிடிப்பு அனுபவமும் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஆகாஷ் முரளியுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் கேமரூனும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘நேசிப்பாயா’ திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக இருக்கும்”…

Read More

ராணாராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ‘ நாக பந்தம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் விராட் கர்ணா – அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி – NIK ஸ்டூடியோஸ் – அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ நாக பந்தம் ‘ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ நாக பந்தம் ‘ எனும் திரைப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நாயகன் விராட் கர்ணாவின் பிரீ – லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாதற்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விராட் கர்ணா…

Read More

நல்ல நோட்டுதான் கள்ள நோட்டு : ‘கள்ள நோட்டு’ படத்தின் இயக்குநர் கூறுகிறார்.

‘பணம் ஆறாம் அறிவு போன்றது, அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது’ என்றார் பெர்னாட்ஷா. ‘பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைப் பணத்தால் திருப்பித் தர முடியாது ‘என்றார் சார்லி சாப்ளின். ‘பணம் இருந்தால் உபசரிப்பு. இல்லை என்றால் அவமதிப்பு. இதுதான் இன்றைய நாட்டு நடப்பு’ இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும் அனைவர் மனதிலும் ரூபாய் நோட்டைப் போலவே கள்ள நோட்டைப் பற்றிய ஒரு கறுப்பு நிழலும் வந்து போகும். திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் போலவே கள்ள நோட்டு பற்றிய ஒரு சாகச உணர்வு பலர் மனதிலும் அலையடிக்கும். அப்படிக் கள்ள நோட்டு பற்றிய ஒரு கதையை மையமாக வைத்து ‘கள்ள நோட்டு ‘என்கிற…

Read More

~ பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ZEE5 சிறப்பு ₹49 மாதாந்திர சந்தா பேக்கையும் வழங்குகிறது ~

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்குப் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இந்த பொங்கல் சீசனில் தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை, மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதை, அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த ஆண்டு, ZEE5, 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேடு மற்றும் ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் மதிப்புமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது. ZEE5 தளத்தில், ஜல்லிகட்டு முழு நிகழ்வையும் பிரத்தியேகமாக நேரலை ஸ்ட்ரீம் செய்யும், இதன் மூலம் உலகளாவிய பார்வையாளர்கள் நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சார மகத்துவத்தை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, தமிழகத்தின் வீரம் மற்றும் கலாச்சாரப் பெருமையை உணர்த்துகிறது. இந்த வரலாற்றுப் பெருமைமிகு நிகழ்வை,…

Read More

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன்- பார்ட் 2’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா கவனிக்க, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ்…

Read More

தனுஷ் வெளியிட்ட அதர்வா முரளியின் ‘டி என் ஏ’ பட டீசர்

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.   ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ ஃபர்ஹானா ‘ போன்ற வெற்றி படைப்புகளை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர் , சேத்தன், ரித்விகா , கே பி , சுப்பிரமணியம் சிவா, கருணாகரன், ‘பசங்க ‘ சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் –…

Read More

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் உரையாடல்களை தீவிக் எழுத, ஷான் லொகேஷன் படத் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கவனிக்க, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார்.…

Read More

இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’.

இதில் ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், சாந்தினி தமிழரசன், குமார் நடராஜன், சரத், நவ்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். அறிமுக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் எடிட்டர் ஸ்ரீகாந்த் நடன இயக்குனர் தினேஷ் குமார் மற்றும் சிந்தியா லூர்டே தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிக விரைவில் குடும்பங்கள் கொண்டாட திரைக்கு வர உள்ளது Creative head சிந்தியா லூர்டே மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் இயக்குனர் தினேஷ் தீனா கதைக் களம் பற்றி கூறியதாவது. அன்பான தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் கூடிய அழகான குடும்பம். இந்தக் குடும்பத்தில், நம் நாயகன் சக்தி ஒரு புயல் போன்றவர். அமெரிக்காவிலிருந்து தமிழ் கலாச்சாரத்தை நேசிக்க வந்த அமைதியான மற்றும் மென்மையான தென்றல் நம் நாயகி ஷிவானி. நாயகனின்…

Read More