‘மிக மிக அவசரம்’, ‘மாநாடு’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதைநாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷிரிம்டன், சுபா, பிரவீன், முபாஸிர், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக…
Read MoreCategory: சினிமா செய்திகள்
பவர் ஸ்டார் பவன் கல்யாணின் பீரியட் ஆக்ஷன் படமான ‘ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் நுழைகிறது!
இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முதல் பீரியட் ஆக்ஷன் படமான ’ஹரி ஹர வீர மல்லு பார்ட்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ மூலம் சரித்திரம் படைக்க உள்ளார். மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படம் முன்னெப்போதும் இல்லாத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவதை உறுதியளிக்கிறது. பீரியட் ஆக்ஷன் படத்தில் பவன் கல்யாணின் புதிய அவதாரத்தை காண ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜோதி கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் 17ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்ஷன்- அட்வென்ச்சர் படமாகும். ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் புகழ்பெற்ற ஹரி ஹர வீர மல்லுவின் கதைதான் இது. சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்றவற்றை பிரமாண்டமான பட்ஜெட்டில்…
Read More” திருக்குறள் ” படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். அத்துடன் இப்படத்திற்காக, சங்க இலக்கியச் சொற்களோடு, கவித்துவமும், பொருட்செறிவும்…
Read Moreடிஸ்னியின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பிரத்யேகமான புதிய போஸ்டரில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முஃபாசாவாக கர்ஜிக்கிறார்!
டிஸ்னியின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பிரம்மாண்ட ஊடக நிகழ்வில் நம்ரதா ஷிரோத்கர் கட்டமனேனி சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிரத்யேகமான புதிய போஸ்டரை வெளியிட்டார். டைமனுக்கு அலி மற்றும் டாக்காவுக்கு சத்யதேவ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். டிஸ்னியின் முஃபாசா: தி லயன் கிங் டிசம்பர் 20 ஆம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. இதில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முஃபாசாவாகவும், பிரம்மானந்தம் பும்பாவாகவும், டைமோனாக அலியும், சத்யதேவ் டாக்காவாகவும், அய்யப்பா பி ஷர்மா கீரோஸாகவும் குரல் கொடுத்துள்ளனர்.
Read Moreதென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.
பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான “சில்க் ஸ்மிதா – Queen of the South” திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இதில் சந்திரிகா ரவி பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், S.B விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது. அவரது பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர், இது பார்வையாளர்களுக்கு காந்தக்கண்ணழகி – சில்க் ஸ்மிதாவைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.
Read Moreதிரைத்துறையில் சிறந்த சாதனையைத் தொடர்ந்து எஸ்.ஜெ.சூர்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும்!
திரைத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 – வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா கலந்து கொள்கிறார். இதில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என சுமார் 5 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்ட திரு. எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறது. வாலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தென் இந்திய அளவில் சிறந்த…
Read More‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியது – ஜி.வி.பிரகாஷ்குமாரின் புதிய படம்!
நடிகர் அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ போன்ற த்ரில்லர் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மாறன். இப்போது, ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இன்று ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார். இயக்குநர் மு. மாறன் கூறும்போது, “திட்டமிட்டபடி படம் சரியான வேகத்தில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. நடிகர், இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் பிஸியாக இருந்தாலும் இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். அவர் தனது டப்பிங் தொடங்கி இருக்கிறார். விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும்”…
Read Moreஇசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’ – காதலின் செழிப்பை விவரிக்கும் காதல் கதை!
இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ எனும் புதிய படத்தில் விமல் கதையின் நாயகனாக நடிக்கிறார். புரொடக்ஷன் நம்பர் 7 ஆக உருவாகும் இப்படம், மலை கிராமத்தில் வசிக்கும் இரு வேறு நம்பிக்கைகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை மதங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பாசாங்கின்றி சுவாரசியத்துடன் விவரிக்கிறது. இப்படத்த்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்குகிறார். படத்தின் இறுதி…
Read Moreஸென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்து வரும் திரைப்படம் ‘தருணம்’.
‘தேஜாவு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது வரும் 2025 பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியிடவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
Read Moreசிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக்
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை…
Read More