தெறிக்க விடும் கருணாஸ்! மாறுபட்ட கோணத்தில் ஆர்ஜே பாலாஜி!

ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக ‘சொர்க்கவாசல்’ உருவாகி வருகிறது. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிக்கும் இப்படத்தை பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார். இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமாகிய நட்டி (நடராஜன் சுப்பிரமணியன்) மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்களான சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கருணாஸ், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன் மற்றும் மெளரிஷ் ஆகியோர் சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர். சிறையை பிரதான கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்தப்…

Read More

சென்னையில் Torque Entertainments – ன் ‘Return of the Dragon – Home Edition ‘ music concert – ல் சாதனை படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி

தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராகவும், சர்வதேச அளவில் தனித்துவம் வாய்ந்த இசை கலைஞராகவும், ராப் பாடகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ‘ Return of the Dragon – Home Edition’ எனும் பெயரில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமான Music Concert ஐ நடத்தினார். Torque Entertainments நிறுவனம் சார்பில் சென்னையின் மையப் பகுதியில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த Music Concert க்கு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். இந்த மைதானத்தில் நடைபெற்ற Music Concert ஒன்றில் இதுதான் அதிக அளவில் ரசிகர்கள் ஒன்று கூடிய இசை நிகழ்ச்சி என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் தமிழா ஆதி- மேடையின் இறுதி பகுதி வரை சென்று, அனைத்து…

Read More

அமோக வரவேற்பு… தியேட்டர் அதிகரிப்பு… உற்சாகத்தில் சார் படக்குழுவினர்

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள  “சார்” திரைப்படம் திரையரங்குகளில்  வெளியாகி வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறது. இப்படம் மக்கள் மத்தியிலும் திரை ஆர்வலர்கள் மத்தியிலும் பரவலான பாராட்டுக்களை குவித்து வருகிறது. அதிக திரையரங்குகளில் இப்படம் வெளியான போதிலும், வெளியான முதல் நாளிலேயே மக்களின் ஆதரவில், தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மிக முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும், கல்வி எனும் ஆயுதத்தை சார் திரைப்படம் தூக்கி பிடிப்பதாகவும், சமூகம் தலைநிமிர கல்வி அவசியம் என இப்படம் உரக்க சொல்லுவதாகவும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இப்படம் பேசும் கருத்தியலை வாழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை போல, இப்படமும் சமூக அக்கறையுடனும்,…

Read More

கல்வியின் மகத்துவத்தை பேசும் நல்ல படைப்பு சார் – திருமாவளவன் புகழாரம் !!

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, பரவலான பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இப்படம் பேசும் கருத்தியலை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன். அவர்கள், படம் பார்த்து, படக்குழுவினரை பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் படம் குறித்து கூறியதாவது.. நண்பர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சார் திரைப்படம் கல்வியால் தான் எளிய மக்கள் மேன்பட முடியும் என்பதை பேசுகின்ற ஒரு திரைப்படம், கல்வி தான் உண்மையான…

Read More

Bigg Boss Tamil Season 8 பிரம்மாண்டமாக துவங்கியது!

Bigg Boss Tamil Season 8 Oct 6 ஆம் தேதி பிரம்மாண்டமான 5 மணி நேர தொடக்கவிழாவுடன் துவங்கியது. புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 8வது சீசனின் தொடக்கத்திலிருந்தே, இந்த நிகழ்ச்சி பல புதிய அம்சங்களால் நிரம்பியுள்ளது – புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் அசாத்திய ‘ஆண்கள் Vs பெண்கள்’ கருப்பொருள் என ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக அசத்தலான தோரணையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தார். விவாதங்களை நேரடியாக சந்திப்பது, போட்டியாளர்களின் தவறுகளை நேர்மையாக விசாரிப்பது, உள்ளிட்ட விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை மிக்க அணுகுமுறைக்கு பலத்த பாராட்டுகள் கிடைத்தன. தொடக்க எபிசோடு தமிழகம் முழுவதும் 9 TVR மற்றும் சென்னையில் 13 TVR என சாதனை படைத்திருப்பது,…

Read More

RSSS பிக்சர்ஸ் தயாரிப்பில் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான ‘ஒற்றைப் பனை மரம்’

சிறந்த இயக்குனர் விருது பெற்ற ”மண்” பட இயக்குனர் *புதியவன் ராசையா*வின் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனை மரம்’ உருவாகியுள்ளது.   யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, ஈழத்தில், கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடுகின்றன இப்படத்தில் வரும் காட்சிகள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் அஷ்வமித்ரா. தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திருப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைந்துள்ளது. அதனாலேயே சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றிருக்கிறார்.   தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச…

Read More

ஐந்தாவது வேதத்தின் ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள் !! இதோ ZEE5 மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை வெளியிட்டுள்ளது!

~ 90களின் புராணத் திரில்லர் சீரிஸான மர்மதேசம் மூலம் புகழ் பெற்ற, இயக்குநர் நாகா இயக்கத்தில், அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்த இந்த சீரிஸில், சாய் தன்சிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ~ ~ ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ அக்டோபர் 25 முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கும் ~ முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு மித்தாலஜி திரில்லர் ரோலர் கோஸ்டர் பயணத்திற்குத் தயாராக இருங்கள்! உங்களை உற்சாகப்படுத்தும் ‘ஐந்தாம் வேதம்’ என்ற ஒரிஜினல் சீரிஸின், இதயம் அதிர வைக்கும் டிரெய்லரை வெளியிடுவதில் ZEE5 மகிழ்ச்சியடைகிறது. இந்த அற்புதமான டிரெய்லரை, நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இது பார்வையாளர்களை பண்டைய ரகசியங்கள் மற்றும் ஆபத்தான பயணங்கள் அடங்கிய புதிய உலகில் மூழ்கடிக்கிறது. அபிராமி மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில், ‘மர்மதேசம்’ என்ற கிளாசிக் தொடரை உருவாக்கிய…

Read More

“ரசிகர்களின் மீது இருக்கும் நம்பிக்கையில் தான் வேட்டையன் படத்துடன் ரிலீஸ் செய்தோம்” ; பிளாக் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உற்சாகம்

வித்தியாசமான கதையம்சம் கொண்ட அதே சமயம் ரசிகர்களுக்கு தரமான படங்களை மட்டுமே தருவது என்கிற குறிக்கோளுடன் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’ துவங்கி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படம் வரை அந்த பணியை செவ்வனே செய்து வரும் இந்த நிறுவனத்தின் சமீபத்திய படைப்பாக ‘பிளாக்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் வெளியான இந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு பக்கம் வேட்டையன் படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வித்தியாசமான கதை பற்றி வாய்மொழியாக பரவிய செய்திகளால் திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த…

Read More

“ஜில்லா விட்டு ஜில்லா வந்து” டூ “சில்லாஞ்சிறுக்கி” ; பாடலாசிரியர் மோகன் ராஜனின் வெற்றி பயணம்

சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் பல கலைஞர்களின் திறமைகளை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லாஞ்சிறுக்கி பாடல்’ இளைஞர்களின் காதுகளில் ரீங்காரமிடும் ரிங் டோனாக மாறியுள்ளது. ஏற்கனவே பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடலாசிரியர் மோகன் ராஜன் மீது ‘லப்பர் பந்து’ மீண்டும் புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சசிகுமார் இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவான ‘ஈசன்’ படத்தில் மிகவும் புகழ்பெற்ற “ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேட்டியா” என்கிற சூப்பர் ஹிட் பாடலின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பாடலாசிரியர் மோகன் ராஜன். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த யாதுமாகி படத்தின் மூலம் அறிமுகமானாலும் அதற்கடுத்து வெளியான ஈசன் படம் தான் இவருக்கான அடையாளத்தை…

Read More

ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!

பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்கிறது. இந்தத் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 22, 2024 அன்று வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது. இயக்குநர் பாயல் கபாடியா மற்றும் நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி ஆகியோர் இந்தப் படத்தின் உலகளாவிய பயணம் மற்றும் இந்தியாவில் அதன் வெளியீடு குறித்தான தங்கள் எண்ணங்களை மும்பையில் இன்று (17.10.2024) நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டனர்.   படவெளியீடு பற்றி இயக்குநர் பாயல் கபாடியா பேசியதாவது, “இந்த படத்தை செதுக்க பல வருடங்கள் எடுத்துக் கொண்டோம். மேலும் ஸ்பிரிட் மீடியாவுடனான இணைந்திருப்பது படத்தை…

Read More