உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் ஜாக்கி சான். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரது சமீபத்திய ‘எ லெஜன்ட்’ (‘தி மித் 2’) திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் விரைவில் வெளியிடுகிறது. ஸ்டான்லி டாங் இயக்கியிருக்கும் இத்திரைப்படம், ‘தி மித்’ சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். பரபர சண்டைகள், விறு விறு சாகசங்கள், உள்ளத்தை தொடும் உணர்வுகள், கற்பனைக்கு எட்டாத காட்சிகள் என கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜாக்கி சான், லே சாங், நா ஜா, ஆரிஃப் லீ, லி சென், பெங் சியோவ்ரான் மற்றும் ஜெங் யெச்சென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தற்கால அகழ்வாராய்ச்சி நிபுணர் மற்றும் முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இளம்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘#நானிஓடெல்லா 2’
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், எஸ் எல் வி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் ‘#நானிஓடேலா 2’ படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது . ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் தனித்துவமான நடிப்பால் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ‘#நானிஓடேலா 2 ‘ அறிவிப்பு மூலம் மீண்டும் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். ‘தசரா’ படத்தின் மூலம் நூறு கோடிக்கு மேல் வசூலித்த வெற்றி கூட்டணியான நானி- ஓடேலா மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ‘தசரா’ படத்தை விட மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என உறுதியளிக்கும் வகையில் புதிய திரைப்படத்தில் இந்த இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். குறிப்பாக ‘தசரா படத்தினை விட நூறு மடங்கு அதிகமாக பார்வையாளர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய படம் உருவாகும்’ என…
Read Moreஅமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி ‘பேச்சி’ வெளியாகிறது!
அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி இயக்கத்தில், வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் வெருஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், பாலசரவணன், காயத்ரி, தேவ் ராம்நாத் ஆகியோரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ’பேச்சி’ வித்தியாசமான கதைக்களம் மட்டுமின்றி மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்ட திகில் ஜானரால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் இரவுக் காட்சிகள் கூட ஹவுஸ் புல்லாகும் அளவுக்கு ‘பேச்சி’ திரைப்படம் மக்களிடம் வரவேற்பு பெற்றதோடு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த படமாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று 25 நாட்களை கடந்து ஓடிய ‘பேச்சி’ விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. படம் வெளியாவதற்கு முன்னரே திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில் படம் பார்த்த பத்திரிகையாளர்கள் இயக்குநர் ராமச்சந்திரன்.பி அவர்களை மட்டுமின்றி ஒளிப்பதிவாளர்,…
Read Moreநிதிக்குற்றத்தை சொல்லும் பான் இந்திய ஃபைனான்ஸியல் திரில்லர் திரைப்படம் “ஜீப்ரா” !!
ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜீப்ரா”. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 2024 அக்டோபர் 31 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். ZEE தமிழ் தொலைக்காட்சியில், பெரும் வெற்றிபெற்ற “செம்பருத்தி” சீரியலின் தயாரிப்பாளர்கள், தங்களது முதல் திரைப்படமாக இப்படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதிக்குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக்களம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்.…
Read Moreஅட்டகாசமான ஹாரர் அனுபவத்திற்குத் தயாராகுங்கள் !, திரையரங்குகளில் வெற்றி பெற்ற, ‘டிமான்ட்டி காலனி 2’ ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது !
~ விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திகில் ஹாரர் கிளாசிக்கின் இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம், வரும் செப்டம்பர் 27 அன்று வெற்றிகரமாக ZEE5 இல் பிரத்தியேகமாகத் தொடர்ந்து ஸ்ட்ரீமாகவுள்ளது ~ ~ பி.டி.ஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான, ZEE5 தென்னிந்தியாவில் உள்ள பார்வையாளர்களைக் கவரும் வகையில், தொடர்ச்சியாகப் பல அற்புதமான படைப்புகளை வழங்கி வருகிறது. சமீபத்திய வெளியீடுகளான ‘ரகுதாத்தா’, ‘நுனக்குழி’ உள்ளிட்ட அசத்தலான படைப்புகளை அடுத்து, இந்த ஆண்டின் அதி பயங்கரமான ஹாரர் பிளாக்பஸ்டர் “டிமான்ட்டி…
Read Moreவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் – நயன்தாரா கூட்டணியின் ‘மூக்குத்தி அம்மன் 2’ வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி ‘
தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் உருவாகிறது. தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழுவினர் தெளிவாக திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். டிவைன் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி…
Read Moreலெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம்
ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார் பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான ‘தி லெஜெண்ட்’ திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார். தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘காக்கி சட்டை’, ‘கொடி’, உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘கருடன்’ திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல…
Read More‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் #Karthi29
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் #Karthi29 அதிரடி ஆரம்பம் தென்னிந்திய திரைத்துறையில், மாறுபட்ட களத்தில், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி, ஒக்கே ஒக்க ஜீவிதம், ஃபர்ஹானா போன்ற அழுத்தமான படைப்புகளை, பெரிய திரையில் எந்த சமரசமும் இல்லாமல் தயாரித்து வெளியிட்ட, சிறப்பு மிகு தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தற்போது இந்நிறுவனம், படத்திற்குப் படம் வித்தியாசமான காதாப்பாத்திரங்களில், முற்றிலும் வேறுபட்ட களங்களில், வெற்றிப்படங்களைத் தந்து வரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தியுடன் மீண்டும் கைகோர்க்கிறது. முன்னதாக கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் போன்ற கிளாசிக் பிளாக்பஸ்டர் படங்களையும், காஷ்மோரா மற்றும் ஜப்பான் போன்ற மாறுபட்ட சோதனை முயற்சிகளையும் வழங்கியுள்ளனர். தற்போது,…
Read Moreசென்னையில் முதன்முதலாக பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் இசைக் கச்சேரி.
காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், பாண்டவர் பூமி, ரோஜாக்கூட்டம், ஜெமினி, ஆட்டோகிராப், வசூல்ராஜா MBBS, அட்டகாசம், ஐயா, திருட்டுப் பயலே, முனி, அசல், அரண்மனை போன்ற படங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, மறக்க முடியாத ஹிட் பாடல்களை கொடுத்து திரைத் துறையிலும் சரி, மக்கள் மனதிலும் சரி தமக்கென தனி இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். தற்போது சென்னையில் முதல் முறையாக இசையமைப்பாளர் பரத்வாஜின் இசைக்கச்சேரி பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது, யோகா அறக்கட்டளை மற்றும் Zest Entertainment இணைந்து சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள ” விங்ஸ் வர்த்தக மையம் ” செயிண்ட் ஜார்ஜ் விளையாட்டு மைதானத்தில் வருகிற அக்டோபர் மாதம் 19 ம் தேதி இந்த பிரம்மாண்டமான இசைக் கச்சேரியை நடத்தவிருக்கிறார்கள். இந்த இசை நிகழ்ச்சி திருப்பூர் ரோட்டரி கிளப்,…
Read Moreசூப்பர் ஸ்டார் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ” ரத்தமாரே ” படக்குழுவினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் அனிரூத் இசையில் இடம் பெற்ற” ரத்தமாரே ரத்தமாரே ” என்ற பாடலை பாடாத வாய்கள் இல்லை, கேட்காத காதுகள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இந்த பாடல் வரியை தலைப்பாக வைத்து சிறப்பான படம் ஒன்று உருவாகி இருக்கிறது. TSS Germany Films மற்றும் V2 Creation, New Jersey என்ற பட நிறுவனங்கள் சார்பில் சுமார் 13 ஈழம் மற்றும் இந்திய தமிழர்கள் இணைந்து crowd funding முறையில் தயாரித்திருக்கும் ” ரத்தமாரே ” படம் தான் அது. லிவிங்ஸ்டன், வையாபுரி, அம்மு அபிராமி, பிரசாத், ரமா, ஜனனி, அசார், மகிமா, ஸ்ரீஜித் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் தினேஷா ரவிச்சந்திரன். வசனம் :…
Read More