கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது திருச்சிற்றம்பலம் திரைப்படம். சன் குழுமத்திலிருந்து துவங்கப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் அயன், சிங்கம், ஆடுகளம், மங்காத்தா உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வினியோகித்தும், எந்திரன், சர்கார், பேட்ட, பீஸ்ட், ஜெயிலர், சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமான ராயன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இவர்கள் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் இணையும் ‘கூலி’ திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஐந்தாவது திரைப்படம் ஆகும். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
காமெடி நடிகர் தெனாலி மகனுக்கு, நடிகர் விஜய் சேதுபதி கல்வி கட்டணம் முழுவதும் செலுத்தினார்!
விவேக் உடன் அதிக படங்களில் காமெடியில் நடித்தவர் தெனாலி. இவரது மகன் வின்னரசன் டாக்டர் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படிப்பதற்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்துச் சென்று நிலமையை கூற, உடனடியாக 76′ ஆயிரம் ரூபாய் கல்லூரியில் கட்டி, வருங்கால பிசியோதெரபி டாக்டரை உருவாக்கி உள்ளார் விஜய் சேதுபதி! என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் நானும், என் மகனும் மறக்கவே முடியாது என நன்றியோடு தெரிவித்தார் நடிகர் தெனாலி!
Read Moreஇந்தியன் ஃபிலிம் பெஸ்டிவலில் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்ற இயக்குநர் நித்திலன் சாமிநாதன்!!
மெல்போர்னில் நடந்த இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவலில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்றிருக்கிறார்! நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படத்திற்காக, மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் (Indian Film Festival) இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ‘சிறந்த இயக்குநர்’ விருதை வென்றுள்ளார். இந்த விஷயம், படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய திரையுலகில் மதிப்பு மிக்க இயக்குநர்களான கரண் ஜோஹர் (ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி), விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்), இம்தியாஸ் அலி (அமர் சிங் சம்கிலா), கபீர் கான் (சந்து சாம்பியன்), ராஜ்குமார் ஹிரானி (டன்கி), மற்றும் ராகுல் சதாசிவன் (பிரமயுகம்) ஆகியோரின் படங்களும் இந்தப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விருது குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக நித்திலன் சாமிநாதன் பேசியிருப்பதாவது, “மகிழ்ச்சியில் எனக்குப் பேச…
Read Moreவிஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது!!
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்பட டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகும் என்று இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ள படக்குழுவினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பான்-இந்தியா திரைப்படம் நாடு முழுவதும் பலத்தை எதிர்பார்ப்புகளை ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளது. திரைப்படம் குறித்து பேசிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, “ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய திரை விருந்து காத்திருக்கிறது. தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணி அற்புதங்களை செய்து மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது. இதன் ஒரு சிறு பகுதியான டிரைலர்…
Read Moreகுச்சிப்புடி நடனக் கலைஞரும், நடிகையுமான சந்தியா ராஜுக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு!
மதிப்பிற்குரிய குச்சிப்புடி நடனக் கலைஞரும், தெலுங்கு நடிகையுமான சந்தியா ராஜு, இந்த வருடம் 2024ல் நடைபெற இருக்கும் 77வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் மதிப்புமிக்க ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பைப் பெற்றுள்ளார். தனது முதல் தெலுங்குத் திரைப்படமான ‘நாட்டியம்’ படத்திற்காக இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர் சந்தியா ராஜு. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்கோ குழுமத் தொழில்துறையின் தலைவர் தொழிலதிபர் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜாவின் மகள். ஹைதராபாத்தில் உள்ள நிஷ்ரிங்கலா டான்ஸ் அகாடமி மற்றும் நிஷ்ரிங்கலா ஃபிலிம்ஸின் நிறுவனராக சந்தியா ராஜூ உள்ளார். குச்சிப்புடியின் கிளாசிக்கல் நடன வடிவத்திற்கு ஜோதி கொடுத்து, அதை தனது நேரடி நிகழ்ச்சிகள், நடன அகாடமி மற்றும் சினிமா மூலம் உலகளாவிய…
Read Moreசத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்.. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் தேதி அறிவிப்பு..!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின், டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸ் வரும் ஆகஸ்ட் 16 முதல், ஸ்ட்ரீம் செய்யப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸ், வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகியிருக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸ், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான, ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும். இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸினை தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ளார். நடிகர்…
Read Moreநிமிஷா சஜயன் நடிப்பில், ஜிதேஷ் வி வழங்கும், கலமாயா பிலிம்ஸின் ‘என்ன விலை’!!!
பன்முகத்திறன் கொண்ட பல கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதில் நிமிஷா சஜயன் ஆர்வம் கொண்டவர். ‘சித்தா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘போச்சர்’ என தான் ஏற்று நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களின் ஆன்மாவையும் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் இப்போது ‘என்ன விலை’ என்ற புதிய தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் த்ரில்லர் அம்சங்களுடன் கூடிய ஒரு ஃபேமிலி டிராமா ஆகும். திலீஷ் போத்தன் இயக்கத்தில், பகத் பாசில் நடிப்பில் விமர்சன மற்றும் வணிகரீதியாக வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படமான ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ திரைப்படத்தின் அசாதாரண திரைக்கதைக்கு புகழ் பெற்ற சஜீவ் பழூர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தின் சிறந்த திரைக்கதைக்காக, சிறந்த திரைக்கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் இவர்…
Read Moreகாலத்தை வளைக்கும் மர்ம திரில்லரான ‘கியாரா கியாரா’ ஸ்னீக் பீக்கை வெளியிட்டது !!.
இந்தியா, 09 ஆகஸ்ட் 2024: மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரம் வெள்ளிக்கிழமை மாலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ZEE5 அதன் சமீபத்தில் வெளியிடப்பட்ட, மர்மத் திரில்லர் ‘கியாரா கியாரா’ சீரிஸின், வசீகரிக்கும் 3D ப்ரொஜெக்ஷனை நடத்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரில்லரின் ஒரு ஸ்னீக் பீக் மூலம், மும்பைவாசி பொது மக்கள் ஒரு அற்புதமான ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கூட்டணி தயாரிப்பில், உமேஷ் பிஷ்ட் இயக்கியுள்ள ‘கியாரா கியாரா’ சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைரியா கர்வா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்டோரியன் கோதிக் கட்டிடக்கலைக்குப் பெயர் பெற்ற டேவிட் சாசூன் நூலகம், மும்பையின் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நிகழ்ச்சியின் தொடக்க நாளான ஆகஸ்ட் 9…
Read Moreநடிகை தமன்னா, ஜான் ஆப்ரகாம் நடிப்பில் மும்மொழிகளில் ‘வேதா’ பாடல்!!
ஷர்வாரி, ஜான் ஆபிரஹாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை வழங்கும் ‘வேதா’ படத்தில் இருந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பாடலான, ‘நீதானே நீதானே’ வெளியாகியுள்ளது. ‘ஹோலியான்’ மற்றும் ‘மம்மி ஜி’ ஆகிய இரண்டு எனர்ஜிட்டிக் பாடல்களுக்குப் பிறகு, இந்த அழகான பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். இந்தப் பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இடையேயான கெமிஸ்ட்ரி நிச்சயம் பார்வையாளர்களை மயக்கும். அதேசமயம், பாடலின் முடிவில் ஒரு அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டும் உள்ளது. பாடலை வெளியிட்ட ஜான் ஆபிரகாம், “‘நீதானே நீதானே…’ பாடல் ‘வேதா’ படத்தின் ஆன்மா. என் கதாபாத்திரத்தின் எமோஷனல் மற்றும் ரொமாண்டிக் பக்கத்தை இது காட்டும். இந்தப் படத்தில் வெறும் ஆக்ஷன்…
Read Moreநடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லாரா’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்!
‘ சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான் ‘லாரா ‘. இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார்.எம் கே அசோசியேட்ஸ் என்ற பெயரில் கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த தொழிலதிபர் M.கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். ஆர்.ஜெ.ரவின் ஔிப்பதிவு செய்துள்ளார். ரகு சரவண் குமார் இசையமைத்துள்ளார். வளர்பாண்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல் வரிகள் – M.கார்த்திகேசன், முத்தமிழ் செய்துள்ளார்கள். ‘லாரா ‘ படத்தில் பிடிச்சிருக்கு, முருகா புகழ் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் மேத்யூ வர்கீஸ் , கார்த்திகேசன், எஸ்.கே. பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.…
Read More