பார்க்கிங்-கின் வெற்றி மகுடத்தில் மற்றொரு பொன்முடி

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதை முக்கிய ஆய்வு நோக்கத்திற்காக (Core Study Purpose) அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது! செழுமையான உள்ளடக்கம் கொண்ட நல்ல கதைகள் எல்லைகளைக் கடந்து உலக அங்கீகாரத்தைப் பெறும். தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் அதன் நல்ல திரைக்கதை மூலம் இதை நிரூபித்துள்ளது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம். இந்தப் படத்தின் திரைக்கதை தற்போது சர்வதேச அந்தஸ்தை பெற்றுள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் (ஆஸ்கர் விருதுகள்) ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் ஆய்வு நோக்கங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கிய ‘பார்க்கிங்’ படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கீழ் சுதன் சுந்தரம் மற்றும் கே.எஸ். சினிஷ் தயாரித்துள்ளனர். இப்படத்தில்…

Read More

கல்கி 2898 ADல் மிக முக்கிய பாத்திரம் வகிக்கும் பைரவா மற்றும் புஜ்ஜி

ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் கலந்து கொண்ட கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் – ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அறிவியல் புனைகதை காவியமான ‘கல்கி 2898 கி.பி’ படத்தின், ஐந்தாவது மற்றும் இறுதி ஹீரோவான ‘புஜ்ஜி’ என்ற பெயரிடப்பட்ட, எதிர்கால வாகனத்தின் அசத்தலான டீஸரைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர்கள், இறுதியாக மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில் நிகழ்வில் ‘புஜ்ஜி’யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, ‘புஜ்ஜி’ யை – நடிகர் பிரபாஸ் ஒரு வீடியோவாக வெளியிட்டார், அவர்கள் ஒன்றாகப் பயணம் செய்த தருணங்களை நினைவு கூர்ந்து, பிரபாஸ் முழு மனதுடன்,…

Read More

மாற்றுத் திறனாளி குழந்தையின் வாழ்க்கைப் படத்தில் கதை நாயகனாக தீரஜ்

“டபிள் டக்கர்” படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீரஜ் தன் அடுத்த படமான “பிள்ளையார் சுழி” மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளார். மனோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பிறப்பித்தல் பணிகளில் உள்ளது. இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சிலம்பரசி வி தயாரித்து, எயர் ஃப்ளிக்ஸ் இணை தயாரித்துள்ள “பிள்ளையார் சுழி” ஒரு மாற்றுத் திறனாளி குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான மற்றும் மகிழ்ச்சிகரமான படம் என இயக்குனர் தெரிவித்துள்ளனர். தீரஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார். “போதை எறி புத்தி மாறி” மற்றும் சமீபத்தில் வெற்றியடைந்த “டபிள் டக்கர்” போன்ற படங்களில் தனது மிரட்டலான நடிப்புக்காக பிரபலமாகிய தீரஜ், “பிள்ளையார் சுழி” யிலும் பார்வையாளர்களை மீண்டும் கவருவார் என்று…

Read More

”பார்வையாளர்களின் உணர்வுகளுடன் ஈர்க்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற பொறுப்பை சித்தா கொடுத்தது” -சித்தார்த்

வழக்கத்திற்கு மாறான கதைகள் மற்றும் காலத்தைத் தாண்டிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நடிப்பில் கலை தாகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே! திறமையான பான்-இந்திய நடிகராக சித்தார்த், திரைப்படத் துறையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான படங்களில் அவர் நடிக்காவிட்டாலும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனைப் படங்களுமே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. பாலிவுட்டில் ‘ரங் தே பசந்தி’மூலம் அழியாத முத்திரையை பதித்தாலும், தெலுங்கில் ‘பொம்மரில்லு’ மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தாலும் அல்லது தமிழ்த் துறையில் பல்வேறு வகைகளில் ஜொலித்தாலும், சித்தார்த் சினிமா மற்றும் நடிப்பு மீதான தனது அசைக்க முடியாத ஆர்வத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அவரது சமீபத்திய படமான ‘சித்தா’ரசிகர்களின் இதயங்களை வென்றது. இப்போது, நடிகர் சித்தார்த் அவரின் நாற்பதாவது படமான ‘சித்தார்த்40’ படத்தில் நம்பிக்கைக்குரிய குழுவுடன்…

Read More

பூனை மற்றும் நாயின் நட்பைப் பேசும் Garfield

Sony Pictures Entertainment India தயாரிப்பில்  Jim Davis என்பவரின் கைவண்ணத்தில் உருவான ஒரு அமெரிக்க நகைச்சுவை தொடர்தான் Garfield . சங்கிலி தொடர் போன்று இதுவரை 5 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 1 Garfield The Movie (2004) 2 Garfield : A Tail of 2 Kitties (2006) 3 Garfield Goes Real (2007) 4 Garfield ‘s Fun Fest (2008) 5 Garfield ‘s Pet Force (2009) Garfield The Movie (2024) ஆறாவது பதிப்பு! Garfield என்பது, ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!. தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie என்ற ஒரு நாய் , உற்ற நண்பன்! இருவரும் லூட்டி அடிப்பதில் சமர்த்தர்கள்! ஒரு கட்டத்தில் , Vic என்கிற தனது தந்தையோடு…

Read More

நடிப்பில் இந்த இடத்தை அடைய பல பிரச்சனைகளை தடைகளைத் தாண்டி வந்திருக்கிறேன்.

தனது வசீகரிக்கும் தோற்றத்தோடு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் நடிகர்கள் பார்வையாளர்களின் மனதில் தனி இடம் பிடிப்பார்கள். இதில் நடிகர் நிரூப் நந்தகுமாரும் ஒருவர். இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ’தலைமைச் செயலகம்’ வெப்சீரிஸில் நடித்திருக்கும் நிரூப்பின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த வெப் தொடரின் ஒரு பகுதியாக இருந்ததன் சிறந்த அனுபவம் பற்றி நடிகர் நிரூப் பகிர்ந்து கொண்டதாவது, “அனுபவம் வாய்ந்த இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் ஹரிஹரன் என்ற சிக்கலான கதாபாத்திரத்தில் நடித்தது என் நடிப்புத் திறமையை இன்னும் பட்டைத் தீட்டும்படியாக இருந்தது. வெறும் கதாபாத்திரமாக மட்டுமே இதை அணுகாமல் நடிப்பிற்கு சவால் விடும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியின் நுணுக்கங்களை தேடித்தேடி கற்றுக் கொண்டேன். என் நடிப்பைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். நடிப்பில் இந்த இடத்தை அடைய…

Read More

சக மனிதன் மீதான அக்கறையைப் பேசும் “மழை பிடிக்காத மனிதன்”

விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ரோமியோ’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை வெளியிட தயாராகி வருகிறார். ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலி சோடா’, ’10 எண்றதுக்குள்ள’, ‘கோலி சோடா2’ போன்ற படங்களை இயக்கியவரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ‘மழை பிடிக்காத மனிதன்’ (MPM) படத்தை அதிக பட்ஜெட்டில் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி, ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், பிரபல கன்னட ஹீரோ ‘டாலி’ தனஞ்ஜெயா, மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, ப்ருத்வி ஆம்பர், சரண்யா பொன்வண்ணன், ‘தலைவாசல்’ விஜய், ஏ.எல். அழகப்பன், ‘திருமலை’ படப்புகழ் இயக்குநர் ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘ ‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் ஒரு சிறப்பான,…

Read More

யோகிபாபு – ரமேஷ் திலக் இணைந்து நடித்த வானவன் படப்பிடிப்பு நிறைவு

‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தயாரிப்பில், இயக்குநர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில், யோகிபாபு, ரமேஷ் திலக் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வானவன் படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது. யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் இணைந்து நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படமாக வானவன் உருவாகி வருகிறது. யோகி பாபுவின் நகைச்சுவையுடன் Feel Good, Fantasy ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் அசத்தலான காமெடியுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மலையாளத்தின்…

Read More

ஆதார் மலையாள ரீமேக்கில் திலீஷ் போத்தன்

பல சர்வதேச விருதுகளை வென்று, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்ற, வெண்ணிலா கிரியேஷன்ஸ் பி. சசிகுமார் தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ் நடிப்பில் வெளியாகி, 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ‘ஆதார்’ திரைப்படம் மலையாளத்தில் உருவாகிறது. இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழில் உருவான ‘ஆதார்’ திரைப்படத்தில் அருண்பாண்டியன் நடித்த அழுத்தமான ரைட்டர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான திலீஷ் போத்தன் நடிக்கவிருக்கிறார். கருணாஸ் நடிப்பில் வெளியான ‘திண்டுக்கல் சாரதி’ எனும் வெற்றி பெற்ற படத்திற்கு திரைக்கதை & வசனம் எழுதியவர். ஜீவா- நயன்தாரா நடிப்பில் வெளியான ‘திருநாள்’, கருணாஸ் நடிப்பில் வெளியான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ மற்றும் ‘ஆதார்’ ஆகிய திரைப்படத்தை இயக்கியவர் ராம்நாத் பழனிகுமார். இவரது திரைப்படங்களில்…

Read More

உப்பு புளி காரம் தொடர்பாக டிஸ்னி ஹாட் ஸ்டாரின் அடுத்த அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் ‘உப்பு புளி காரம்’  சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான ‘குடும்பப் பாட்டு’ எனும் அழகான தீம் பாடலுடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அற்புதமான பாடல் இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸான ‘உப்பு புளி காரம்’ சீரிஸானது, காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட்…

Read More