மே 10ல் வெளியாகும் சாந்தகுமார்-அர்ஜூன் தாஸின் |”ரசவாதி – தி – அல்கெமிஸ்ட்”

‘மௌனகுரு’, ‘மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்’ மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது! திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. அவர் இயக்குநராக அறிமுகமான ‘மௌன குரு’ படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அவரது இரண்டாவது வெளியீடான ‘மகாமுனி’ 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இந்த படத்தில் இருந்து பல…

Read More

விஜயகுமாரின் எலெக்‌ஷன் திரைப்பட வெளியீடு அறிவிப்பு

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌ ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை…

Read More

”இது மாறுதலுக்கான நேரம்” – நாற்கரப்போர் இயக்குநர் ஸ்ரீவெற்றி

ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீ வெற்றி. ‘நாற்கரப்போர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பட ரிலீஸுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது. இந்தநிலையில் தூய்மை பணியாளர்களின் அவல நிலையையும், அவர்களது நலன் குறித்த அரசின் பாராமுகத்தையும் குறித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ள இயக்குநர் ஸ்ரீ வெற்றி ஒரு நாள் அதிகாரத்தின் கதவுகள் தகர்க்கப்படும் என்கிற தனது மனக்குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் கூறும்போது, “அரசியல், உயர்சாதி, பணம், விளையாட்டு என்கிற வெள்ளை காய்களுக்கும் ஏமாளிகளான மக்கள், ஒடுக்கப்படுபவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சாதியால் இழிவு…

Read More

ஜூன் 27ல் வெளியாகும் கல்கி 2898 AD

பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான ‘கல்கி 2898 AD’ எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில், இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் அவர்களுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் ( ட்விட்டர்) தளத்தில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இப்படத்தின்…

Read More

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ”ராபர்” படத்தின் பர்ஸ்ட் லுக்

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார். இப்படத்தின் கதை என்ன? பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன்.சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன.மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும்…

Read More

நடிகனாக விரும்புபவனின் போராட்டத்தை கூறும் “ஸ்டார்” பட முன்னோட்டம்

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்’ எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மன்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள்…

Read More

அஜீத் பிறந்தநாளில் ரீ-ரிலீஷ் ஆகும் பில்லா 2

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது! ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அதிர விடும் அஜித்குமாரின் ஸ்கிரீன் பிரசன்ஸோடு தலைசிறந்த படைப்பான ‘பில்லா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம் செய்திருந்தார். ‘பில்லா’ படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் விரும்பி பார்க்கும் படமாக இது உள்ளது. இப்போது, ‘பில்லா’ ரீ-ரிலீஸ் என்ற செய்தி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ​​​​ ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150+ திரைகளில் இந்தப் படத்தை…

Read More

மலைவாழ் மக்களின் கஷ்டத்தையும் காதலையும் பேசும் “வேட்டைக்காரி”

படத்தின் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் கதையை சொன்னதும், கதை மிகவும் பிடித்துப் போக, ‘படத்திற்கு வேட்டைக்காரி என தலைப்பு வைங்க, படம் மக்களிடையே சிறப்பாக சென்று சேரும்’ என்று கூறி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தினார் கவிப்பேரரசு வைரமுத்து! ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர். வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாய் தெரியும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் பிரச்சினைகளையும் தெளிவாக படமாக்கி உள்ளார் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து! ராகுல் கதாநாயகனாக நடிக்கிறார். சஞ்சனா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு மற்றும் பிரபல கலைஞர்கள் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, காளிமுத்து காத்தமுத்து இயக்கி உள்ளார்.…

Read More

டிராகனுடன் காட்சியளிக்கும் ஹனுமன் போஸ்டர்

ஹனுமன் ஜெயந்தி நன்நாளில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர், வெளியிடப்பட்டது! இப்படத்தை ரசிகர்கள் ஐமேக்ஸ் 3டி இல் அனுபவிக்கலாம் !! பிரபல படைப்பாளி பிரசாந்த் வர்மா, பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ஹனுமான் படத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் கொண்டாடப்படும் இயக்குநராக மாறியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் வர்மா அவரது சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து (PVCU) மற்றொரு சாகச காவியத்தை ரசிகர்களுக்கு கொண்டு வருகிறார். ஜெய் ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஹனுமான் கதையின் ப்ரீக்வுலாக உருவாகவுள்ளது. , ஹனுமான் படத்தின் முடிவில் இப்படம் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் திரைக்கதை ஏற்கனவே முழுமையாக தயாராகிவிட்டது. இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர் மற்றும் பிரபலமான தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். அயோத்தி ராமர் கோயில் திறப்பு…

Read More

அமீரின் “உயிர் தமிழுக்கு” மே 10ல் வெளியாகிறது

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ‘உயிர் தமிழுக்கு’ பட வெளியீடு குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா கூறும்போது, “ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இந்த வரவேற்பால்…

Read More