குழந்தையை காக்க போராடும் தாயாக சோனியா அகர்வால் நடிக்கும் பிஹைண்ட்

ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக ‘பிஹைண்ட் ‘என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை அமன் ரஃபி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இதில் பாசமுள்ள உணர்ச்சிகரமான தாயாக சோனியா அகர்வால் நடித்துள்ளார் . லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்.இவர் தென்னிந்திய முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சுதீப் ஆகியோருடன் நடித்துப் புகழ் பெற்றவர்.   சோனியா அகர்வாலின் கணவராக கதையின் கதாநாயகனாக ஜினு இ தாமஸ் நடித்துள்ளார்.அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார். ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். தாய்மை தனது குழந்தையைத் தொடர்கிற கண்ணுக்குத் தெரியாத அந்த ஆபத்தை உணர்ந்து கொள்கிறது.…

Read More

”இது வெள்ளிக்கிழமை நாயகன் வெள்ளிக்கிழமை நாயகியின் வெற்றி” – மகிழ்ச்சியில் படக்குழு

நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான ‘டியர்’ திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘டியர்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர்.‌ பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை களம், கதை சொல்லும் பாணி, நட்சத்திர நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணியிசை.. என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருந்ததால் ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினர். இப்படம் வெளியான பிறகு வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களின் தொடர்…

Read More

”மிராய்” தேஜா சஜ்ஜாவின் புதிய சூப்பர் ஹீரோ திரைப்படம்

சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டம்நேனி, டிஜி விஸ்வ பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் படத்திற்கு மிராய் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 18, 2025 அன்று திரையரங்குகளில் 3டியில் வெளியாகிறது !! டோலிவுட்டின் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி சமீபத்தில் தங்களது அடுத்த தயாரிப்பான புரடக்சன் நம்பர் 36 ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இப்படத்தில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா சூப்பர் யோதா கேரக்டரில் நடிக்க, திறமைமிகு இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனி இயக்குகிறார். நல்ல சினிமா ரசனையும், திரைப்படத் தயாரிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவருமான டிஜி விஸ்வ பிரசாத், சிறந்த தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார். முன்னர் அறிவித்தபடி படக்குழுவினர் படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒரு அறிமுக வீடியோவை…

Read More

வனிதா விஜயகுமார் சோனியா அகர்வால் நடிப்பில் தண்டுபாளையம்

1980 ஆம் ஆண்டுகளிலிருந்து இன்று வரை ஒரு மிகப்பெரிய கொள்ளை கூட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் தன் வேட்டையை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது. கொலை,கொள்ளை, குற்றம் போன்ற செயல்களை யாருடைய கண்ணுக்கும் தென்படாமல் சம்பவத்தை நிகழ்த்திக் கொண்டே செல்கின்றது. இதில் ஒரு கூட்டத்தினரை 15 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்தது காவல்துறை. இவற்றில் 390 திருட்டு வழக்குகள், 108 கொலை குற்ற வழக்குகள் மற்றும் மிகக் கொடுமையான 90 கற்பழிப்பு வழக்குகள் என ஒரே கும்பலுக்கு 6 முறை மரண தண்டனை வழக்குகள் இருப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட தூக்குதண்டனை வழங்க முடியவில்லை. அதேநேரம் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மிகவும் மோசமான நிலைமைக்கு ஆளாகிறார்கள். கைதானவர்கள் அனைத்து வழக்குகளிலும் விடுதலையாகிக் கொண்டே வருகிறார்கள்.…

Read More

இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் வெஃப் தொடர் “இன்ஸ்பெக்டர் ரிஷி”

நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து. நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இன்ஸ்பெக்டர் ரிஷி இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. மும்பை, இந்தியா- 2024, ஏப்ரல் 18 – இன்ஸ்பெக்டர் ரிஷி தொடர் அதன் உலகளாவிய பிரீமியரைத் தொடர்ந்து, பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடராக குறிபிடத்தக்க வகையிலான சாதனையை படைத்துள்ளது. மனதை ஆழ்ந்துபோகச் செய்யும் அதன் கதை சொல்லும் பாணி, பிரமாண்டமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் இந்த, திகில் க்ரைம் டிராமாவாக உருவாகியிருக்கிறது. அனைத்தையும்…

Read More

தர்ஷன் – அஞ்சு குரியன் நடிப்பில் சரிகமா வெளியீட்டில் “எண்ட ஓமனே” ஆல்பம் பாடல்

உலகளவில் இசைத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் சரிகமா நிறுவனம், அடுத்ததாக, தர்ஷன், அஞ்சு குரியன் நடிப்பில், கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில், பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் குரல்களில், இளைஞர்களை கொள்ளை கொள்ளும் அற்புதமான “எண்ட ஓமனே” எனும் ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளது. உலகளவில் இசைத்துறையில் ஆளுமைமிக்க நிறுவனமாக, பல்லாண்டுகளாக கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் “சரிகமா”. திரை இசைப் பாடல்கள் மட்டுமின்றி, சுயாதீன இசையை தொடர்ந்து ஆதரித்து வரும் சரிகமா , பல புதுமையான ஆல்பங்களையும், சுயாதீன கலைஞர்களின் பாடல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் கொண்டாடி மகிழும் “எண்ட ஓமனே” எனும் புது ஆல்பம் பாடலை தற்போது வெளியிட்டுள்ளது. கனா படப்புகழ் தர்ஷன், மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடிப்பில், பெரும் பொருட்செலவில்,…

Read More

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த சியான் விக்ரம்!

‘சியான்’ விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்திற்கு வீர தீர “சூரன்” என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கான சிறப்பு காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் காணொளி ஆகியவை வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் இரட்டை விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருகிறார்கள். இயக்குநர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் வீர தீர “சூரன்” எனும் திரைப்படத்தில் சியான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெயினராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச்…

Read More

நடிகர் விவேக்கின் 3ம் ஆண்டு நினைவுதினத்தை மரக்கன்றுகளுடன் நினைவு கூர்ந்த நடிகர்கள்

மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ்! நடிகர் வைபவ்வின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. நடிகர் வைபவுடன் செல்முருகனும் இணைந்து நடித்து வருகிறார் இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, வைபவ்வின் 27 வது திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை படக்குழு நட்டுள்ளனர். மேலும் அங்கு பணியாற்றும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது.

Read More

விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ’தங்கலான்’ படத்திலிருந்து வெளியான க்ளிம்ப்ஸ்

சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோக நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸுடன் இணைந்து, இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகரான சியான் விக்ரம் நடிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ‘தங்கலான்’ படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.‌ படத்தின் வெளியீட்டிற்காக பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சியான் விக்ரமின் பிறந்த நாளான இன்று, அவரது ரசிகர்களுக்கு படக்குழுவினர் ஒரு சிறப்பான விருந்தை அளித்துள்ளனர். பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘தங்கலான்’ திரைப்படத்தின் சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்காக அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை… பிரமிக்க வைக்கும் மாற்றத்தைக் கண்டு, ரசிகர்கள்…

Read More

அபாகஸ் கிராண்ட் மாஸ்டர் ச்ரபேஷ் நடிக்கும் “சிற்பி” திரைப்படம்

AR Productions என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் சிற்பி என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறது. இதில் நடிகர் லிங்கா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் அபாகஸ் கிரான்ட் மாஸ்டர் சரபேஷ் இந்த திரைபடத்தில் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த படத்தில் முத்துக்குமார், வினோத் சாகர், அரோல் சங்கர், பூமிகா ஷெட்டி, ரோஜா ஸ்ரீ, பாப்ரி கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைபடத்தின் மூலக்கதை செந்தில் ஜெகன்நாதனின் எவ்வம் என்ற சிறுகதையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. திரைக்கதை எழுதி படத்தை சிவகணேஷ் இயக்கி வருகிறார். இவர் தமிழில் சிங்கபெண்ணே, போலீஸ் டயரி ஆகிய வெப் தொடர்களை ZEE5 சேனலுக்காக இயக்கியவர். இது மட்டுமில்லாமல் கன்னடத்தில் 8 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். கிச்சா சுதீப் தயாரித்த ஜிகர்தண்டா, ரவிச்சந்திரன் நடித்த ஆ திருஷ்யா…

Read More