மே 3ல் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின் “சபரி”

இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ‘சபரி’ திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இந்தப் பல மொழித் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), ‘விவா’ ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர். எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம்…

Read More

அக்‌ஷய் குமார் வருகையால் “கண்ணப்பா” உண்மையான பான் இந்தியா படமாகியிருக்கிறது – விஷ்ணு மஞ்சு

விஷ்ணு மஞ்சுவின் பான் இந்தியா திரைப்படம் ‘கண்ணப்பா’-வில் இணைந்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் விஷ்ணு மஞ்சுவின் காவியத் திரைப்படமாக உருவாகும் ‘கண்ணப்பா’ மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு, ‘கண்ணப்பா’ திரைப்படம் மூலம் இந்திய சினிமா வரலாற்றுக்கு மிகப்பெரிய காவியத் திரைப்படத்தை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் முதல் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரும் இந்திய அளவில் புகழ்பெற்று இருப்பதோடு, படத்தின் அனைத்து பணிகளும் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அந்த வகையில், பிரபாஸ், மோகன் லால், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடிக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் மற்றொரு முன்னணி இந்திய நட்சத்திரமான பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இணைந்துள்ளார். மேலும், ‘கண்ணப்பா’…

Read More

ஏப்ரல் 18ல் வெளியாகும் தேஜா சஜ்ஜாவின் அடுத்த படத் தலைப்பு

சமீபத்தில் வெளியான ஹனுமன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனியுடன் இணையும் புதிய படத்தினை டோலிவுட்டின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி “புரடக்சன் நம்பர் 36”, ஆக பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. தயாரிப்பாளர் டிஜி விஸ்வ பிரசாத் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு போஸ்டரில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா முகத்தில் தீவிரமான முக பாவனையுடன் மிடுக்காக தோற்றமளிக்கிறார். அவரது முந்தைய படத்தில் பாரம்பரிய தோற்றத்தில் காட்சியளித்த தேஜா சஜ்ஜா முற்றிலும் புதிய ஸ்டைலான தோற்றத்திற்கு மாறி சூப்பர் யோதாவாக அசத்துகிறார். இப்படத்தின் தலைப்பு ஏப்ரல் 18ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஈகிள் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கார்த்திக் கட்டம்நேனி மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் இரண்டாவது திரைப்படம்…

Read More

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளைப் பேசும் “உப்பு புளி காரம்”

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கைப் மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்கி வருகிறது. தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த புதிய சீரிஸான ‘உப்பு புளி காரம்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. “உப்பு புளி காரம்” ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில், நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். நவீன தலைமுறையின் காதல் மற்றும்…

Read More

சிறந்த நடிப்பிற்காக தங்கச்சங்கிலி பரிசு பெற்ற பாரதிராஜா

தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வாரத்திலும் குழந்தைகளுடன் குடும்பமாகப் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இதைக் கொண்டாடும் விதமாக படத்தில் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ‘இயக்குநர் இமயம்’, நடிகர் பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு தங்கச்சங்கிலி வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தருணத்தில் கதாநாயகன் ஜிவி பிரகாஷ், மேனேஜர் ஸ்ரீதர், இயக்குநர் ஷங்கர், எடிட்டர் லோகேஷ், எக்ஸிகியூடிவ் புரொடியூசர் பூர்னேஷ் ஆகியோர் உடனிருந்து கெளரவித்தனர். இயக்குநராகத்…

Read More

ப்ளாக்பஸ்டர் “பிரேமலு”, ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்!!

  தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய பிளாக்பஸ்டர் திரைப்படமான “பிரேமலு” ஏப்ரல் 12, 2024 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. மேலும் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. கிரிஷ் A D இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும் பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது. ஹைதராபாத்தில் அவன், ஐடி துறையில்…

Read More

ஹாட் ஸ்பாட் வெற்றியைத் தொடர்ந்து “ஹாட் ஸ்பாட் – 2” அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. எடிட்டர் முத்தையா பேசியதாவது… அப்பா அம்மா நண்பர்களுக்கு நன்றி. அடியே படத்திற்கு முன்பே கிடைத்த வாய்ப்பு இது. இந்தப்படத்திற்காக நிறையச் சண்டை போட்டிருக்கிறோம் ஆனால் படம் நன்றாக வந்தது. சோஷியல் அவேர்னஸ் உள்ள படம். நல்ல வரவேற்பு தந்ததற்கு நன்றி. தொடர்ந்து இது போல் நல்ல படம் செய்ய முயற்சிக்கிறோம். நன்றி. இசையமைப்பாளர் வான் பேசியதாவது.. விக்னேஷ் கார்த்தி அண்ணாவிற்கு முதல் நன்றி. ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்து என்னால் இது முடியும்…

Read More

கல்கி 2898 AD’ திரைப்படத்தின் எதிர்பார்ப்புமிக்க அடுத்த அப்டேட்

  பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், பார்வையாளர்களை காலத்தின் மீது ஒரு பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்லும். இப்படத்தின் மீது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த பிரமாண்ட படைப்பிலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ‘கல்கி 2898 AD’ உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அறிமுகப்படுத்தும் வகையில், இப்படத்தின் அனிமேஷன் அறிமுக வீடியோ OTT இல் திரையிடப்பட உள்ளது, இந்த வீடியோவிற்கு நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ளார். பொழுதுபோக்கு செய்தி நிறுவனமான பிங்க்வில்லா தளத்தில் கூறியுள்ள தகவலின்…

Read More

இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் சி வி குமார் தயாரிப்பில் ‘இன்று நேற்று நாளை 2’

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பேனரில் சி வி குமார் தயாரிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயலான்’ வெற்றி படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்பது வருடங்களுக்கு பிறகு ‘இன்று நேற்று நாளை’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இன்று நேற்று நாளை 2’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் இந்த புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணத் திரைப்படத்தை பரத் மோகன் இயக்குகிறார். சி வி குமாரிடம் ‘மாயவன்’ திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், ‘இக்லூ’ மற்றும் ‘இப்படிக்கு…

Read More

”ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு 4-க்கு குளோன்கள் இருக்கிறது” – நடிகர் அப்துல் லீ

  Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை நந்தினி பேசியதாவது…. இது என் முதல் மேடை, இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படம் சம்மருக்கு நல்ல ஒரு விருந்தாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. நடிகர் அப்துல் லீ பேசியதாவது…. ஒரு ரகசியம் சொல்றேன் ஜீவிக்கு 4 குளோன் இருக்கு, ஒண்ணு மியூசிக் போடுது, ஒண்ணு…

Read More