வேகத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் கடும் உழைப்பின் வழியே, புதிய இலக்கணம் வகுத்திருக்கிறது “சினம்” படக்குழு. அருண் விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்க சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட “சினம்” படம் தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டு திரையுலகமே ஆச்சயப்படும் வேகத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில், ஆக்ரோஷமான சண்டைக்காட்சியை எடுத்து முடித்துள்ளது படக்குழு. தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகளை துவக்கவுள்ளது “சினம்” படக்குழு. இது குறித்து இயக்குநர் GNR குமரவேலன் கூறியதாவது… நடிகர் அருண் விஜய்யின் ஒத்துழைப்பு இல்லையெனில் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவர் தற்போது தொடர் வெற்றிகளுடன், ஒரே கட்டமாக பல படங்களில் நடித்து வருகிறார். அவரது சமீபத்து வெளியீடான “மாஃபியா” படத்தின் வெளியீட்டு பணிகளுக்கும் அவர் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஆனால் இத்தனை இடையராத பணிகளுக்கு மத்தியிலும் இப்படத்திற்கு…
Read MoreCategory: சினிமா செய்திகள்
டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மேலும் காமெடிக்கு வலு சேர்க்க மொட்டை ராஜேந்திரன், ஷாரா…
Read Moreநேரம் தவறாத சிலம்பரசன் T R ; விறுவிறுப்பாக படமாகும் மாநாடு பாடல் காட்சி
அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது வெங்கட் பிரபு டைரக்சனில் சிலம்பரசன் T R நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. கதா நாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.. இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி , ஒய் ஜி மகேந்திரன், எஸ்.ஜே. சூர்யா, உதயா, கருணாகரன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், பஞ்சு சுப்பு, டேனியல் ஆகியோர் கொண்ட ஒரு நடிகப் பட்டாளமே இந்தப் படத்தில் பங்கேற்று நடிக்கின்றனர்.. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரவீண் கே. எல் எடிட்டிங் செய்கிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சியைக் கவனிக்க படம் வேக வேகமாக உருவாகி வருகிறது. “மாநாடு” படத்திற்காக தற்போது…
Read More375 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்படும் ’திரௌபதி’!
தமிழ் சினிமாவில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறைந்தபட்சம் இரண்டு படங்கள் முதல் 7 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 28 அன்று வெளிவரவிருக்கின்ற படங்களின் பட்டியலில் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனித்துவரக்கூடிய திரைப்படமாக திரௌபதி இடம்பெற்றுள்ளது. இயக்குனர் மோகன்.G தயாரித்து இயக்கியிருக்கும் குறைந்த பட்ஜெட் படம் திரெளபதி. இந்தப்படத்தின் முதல் டிரெய்லர் “ஜாதிகள் உள்ளதடி பாப்பா” என்கிற அடைமொழியோடு வெளியானபோது ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சிக்குள்ளானது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான ரஜினியின் தர்பார் பட டிரெய்லர் பரபரப்பை பின்னுக்குத்தள்ளி அனைத்து சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் விவாத பொருளாக முதலிடத்தை ஒரு வார காலம் ஒன்றரை கோடியில் தயாரான திரெளபதி ஆக்கிரமித்து தக்கவைத்துக்கொண்டது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. படம் எந்த மாதிரியான கருத்தை முன்வைத்தது தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இயக்குநரை தவிர்த்து வேற யாருக்கும் தெரியாது.…
Read Moreமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்!
மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக அப்பு…
Read More5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும் ஏப்ரல் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியீடு
பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க, இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும் ஏப்ரல் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியீடு பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், ‘ஏ ஃபிளாட்’, ‘வஸ்தாடா நா ராஜு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹேமந்த் மதுக்கர் இப்படத்தை கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக மாதவன் நடிக்க, நாயகியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு பிரம்மாண்டான வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, டிரைடன்ட் ஆர்ட்ஸ்…
Read Moreஒரு சீனில் கூட விஜய் சேதுபதி நடிக்கவில்லை: ஆனால் நட்பிற்காக வெளியிடும் ’சென்னை பழனி மார்ஸ்’
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து ‘சென்னை பழனி மார்ஸ்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பிஜூ. இந்தப் படத்தில் முற்றிலும் புதிய களம், புதிய கதை என நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். இந்த படம் குறித்த தகவல்களை படக் குழுவினருடன் இணைந்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் பிஜூ. நான்கு சண்டைக்காட்சிகள் கொண்ட படம், ஹீரோயிஸமான படங்களும் இங்கு வேண்டும். ‘சென்னை பழனி மார்ஸ்’ மாதிரி புதுமுகங்கள் நடித்த படங்களும் வேண்டும். எல்லாவிதமான படங்களும் வரும்போதுதான் மக்களுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும். நண்பர்கள் இருவர் சேர்ந்து சென்னையிலிருந்து பழனி வழியாக மார்ஸ் போகமுடியுமான்னு முயற்சி பண்றாங்க. அது ஒரு தந்தையின் கனவாக இருந்தது. தந்தையைத் தொடந்து அவரது பையன் அந்தக் கனவை நூல் பிடித்துப் போகிறான். அவனுடன் நண்பனும் சேர்ந்துகொள்ள பயணம் சென்னையிலிருந்து…
Read More17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி!
பல ஆண்டுகளாகவே, ஒரு சில தலைப்புகள் சினிமாவில் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன, ஆனால் அவை வியப்புக்குரியவை. அவற்றில் ஒன்று வெள்ளித்திரையில் தோன்றும் ஜோடிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி. அது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பின்னரும், அவர்களின் திரைப்படங்களை நாம் பார்க்கும் போது நம்மை அறியாமல் வியக்க வைக்கிறது. வெளிப்படையாக, எப்போதும் இளமையான மாதவன் மற்றும் காலம் கடந்தாலும் அதே அழகு மற்றும் இளமையுடன் இருக்கும் சிம்ரன் போன்ற ஒரு கவர்ச்சியான ஜோடி நம்மை ‘பார்த்தாலே பரவசம்’ (2001) மற்றும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002) ஆகிய படங்களில் அவர்களை ரசிக்க வைத்தார்கள். உண்மையில், இந்த படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாகக் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாக இருந்தனர். நிச்சயமாக, அதுதான் அழகு அல்லவா? சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான…
Read Moreஆன் லைனை அலப்பறைச் செய்த விஜய்-யின் ‘ பிகில்’ போஸ்டர்கள்!
கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் விஜய்யின் 63ஆவது படமான பிகில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஜூன் 21) மாலை வெளியானது முதல் இணையத்தை கலக்கி வருகிறது. மேலும் இன்று பிறந்தநாள் காணும் விஜய்க்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்தையும், ட்விட்டர் மூலம் ட்ரெண்டிங்கையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை சிறப்பிக்கும் மற்றொரு அம்சமாக முன்னரே அறிவித்தபடி, பிகில் படத்தின் இரண்டாவது லுக்கையும் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது படக்குழு. தந்தை-மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் வரும் விஜய்யின் நான்கு விதமான தோற்றங்கள் இந்த போஸ்டரில் வெளியாகியுள்ளது. குப்பத்தில் சக்தி வாய்ந்த நபராக இருக்கும் தந்தையின் பெயர் பிகில் எனவும், கால் பந்தாட்ட வீரராக வரும் மகனின் பெயர் மைக்கேல் எனவும் போஸ்டரை…
Read Moreஅரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாற்றும் ஜோதிகா! இம்மாதம் “ராட்சசி”.
ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. “நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்” என்ற பார்முலாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் அவர்களிடம் படத்தைப் பற்றிக் கேட்ட போது, ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க.. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் “நிர்மலா டீச்சர்”, ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு டீச்சரோ பேர் கட்டாயம் மனசில இருக்கும். நம்மளோட அந்த டீச்சர் பள்ளிக்கூடத்துல நடக்குற நடக்க வேண்டிய…
Read More