வெவ்வேறு ஜானர்களில் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போடும் இசையமைப்பாளர் ஜிப்ரான், மோகன் ஜி இயக்கத்தில், சோலா சக்ரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று கதையான ‘திரெளபதி 2’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாளை (ஜனவரி 23, 2026) உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்து கொண்டதாவது, “நாம் வாழும் காலத்தைத் தாண்டி, கடந்த காலத்தை நினைவூட்டும் இசையை உருவாக்குவது மிகப் பெரும் சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த நன்றி. ‘திரௌபதி 2’ ஒரு சாதாரண வரலாற்று திரைப்படம் அல்ல! அது நம் மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வலி, கவிதை, காதல், பழிவாங்கும் உணர்வு, தேசப்பற்று ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கிறது. கமல்ஹாசன்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் !
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “புருஷன்” திரைப்படத்தை Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S.அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படத்தை சுந்தர் சி இயக்க, விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, திரைப்பட வர்த்தக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த படம், சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுந்தர் சி –…
Read MoreZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” – விரைவில் டிஜிட்டல் வெளியீடு
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தனது அடுத்த படைப்பான “தடயம்” படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். “தடயம்” எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் ZEE5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள “தடயம்”, சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவான ஒரு தீவிரமான கதையம்சம் கொண்ட படைப்பாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னதாக, சமுத்திரகனி இயக்கி நடித்த “விநோதய சித்தம்” திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம்,…
Read Moreசத்தமாய் பேசும் திரையுலகில் மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த Zee Studios “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு !
அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளரை கட்டிப் போடும், ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த டீசர் உருவாகியுள்ளது. வார்த்தைகள் இல்லாத போதிலும், இந்த டீசர் நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. தீவிரமான காட்சிகளும், மௌன இடைவெளிகளும், நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, “காந்தி உண்மையில் என்ன பேசப் போகிறார்?” என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. சொல்லப்படாத விஷயங்களின் பாரம் மௌனத்தின் மூலம் வலுவாக உணர்த்தப்படுகிறது. நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு வார்த்தைகள் இன்றியே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமையை…
Read More‘திரௌபதி 2’ திரைப்படம் குறித்து கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்! இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன் ஆகியோருக்கு தங்கள் நடிப்பை வலுவாக வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் தங்கள் கதாபாத்திரங்களான திரௌபதி, ஆயிஷா, கோதை ஆகியவற்றின் அனுபவங்களை நாயகிகள் பகிர்ந்துள்ளனர். திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்த ரக்ஷனா இந்துசூடன் பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ படத்தில் திரௌபதியாக நடித்தது என் சினிமா கரியரில் மறக்க முடியாத அனுபவம். இந்த கதாபாத்திரம் தீவிரமான உணர்வுகளையும், எதையும் தாங்கும் உறுதியையும் அதே சமயம் நளினத்தையும் ஒருங்கே கொண்டது. அந்த ஆழமான உணர்ச்சிகளையும் வலிமையையும் வெளிப்படுத்துவது எனக்கு மிகப் பெரிய சவாலாக…
Read Moreதனித்த இடத்தை உருவாக்கி வரும் பவானி ஸ்ரீ!!
நடிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். விடுதலை படத்தில் அவர் வெளிப்படுத்திய வலுவான நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றதோடு, ஆழமும் தீவிரமும் கொண்ட கதாபாத்திரங்களில் முழுமையாக ஒன்றி நடிக்கும் அவரது திறமைக்கு விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருமனதாக பாராட்டியுள்ளனர். அவரது பயணத்தில் புதிய மற்றும் உற்சாகமான கட்டமாக, ஹாட்ஸ்பாட் 2 மூலம் light hearted சினிமாவுக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கிறார். நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம், இந்த வாரம் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படத்தின் preview காட்சிகளும் மற்றும் பத்திரிகையாளர் காட்சிக்கான திரையிடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது புத்துணர்ச்சியான திரைத் தோற்றமும் சிறப்பான நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. தன்…
Read Moreஇரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ – பிரியா தம்பதியர்!!
இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர இயக்குநரும், தொடர் வெற்றியை வழங்கி வரும் தனித்துவமான படைப்பாளியான இயக்குநர் அட்லீ மீண்டும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார். இயக்குநர் – தயாரிப்பாளர் அட்லீ – திருமதி பிரியா அட்லீ இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார் எனும் மகிழ்ச்சியான செய்தியை.. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மீர் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக அட்லீ அப்பாவாகி இருக்கிறார். இது தொடர்பாக பிரியா அட்லி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ” எங்களது குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைகிறார். ஆம்! நான் மீண்டும் கருவுற்று இருக்கிறேன். உங்களுடைய வாழ்த்துகளையும், அன்பையும் எதிர்பார்க்கிறேன்” என பதிவிட்டு, பிரத்யேக புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம்- அட்லீயின் விவரிக்க முடியாத தந்தையின் பாசத்தையும்,…
Read More‘லாரா’ திரைப்படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு ‘அறுவடை’ திரைப்படம்.
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த், ஒளிப்பதிவு -ரகு ஸ்ரவண் குமார், இசை , படத்தொகுப்பு – கே .கே . விக்னேஷ். பாடல்கள் – கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி. கிராமியப் பின்னணியிலான கமர்சியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார். கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் ‘அறுவடை’ படத்தின் சார்பில் கோயம்புத்தூரில் பொங்கல் விழா கொண்டாடிப் படப்பிடிப்பை முடித்துள்ளனர். அறுவடைத் திருநாள்…
Read Moreபிரதமர் மோடி முன்னிலையில் மெய்சிலிர்க்க வைத்த திருவாசகம் – ஜனவரி 22ல் ஜி.வி. பிரகாஷ் வெளியிடும் முதல் பாடல் !!
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் அவர் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். பொங்கல் விழாவின் ஆன்மிகமும் தமிழ்ச் சுவையும் கலந்த அந்த காலை நேரம், தமிழ் உணர்வோடு ஒலித்த திருவாசக இசை நிகழ்ச்சியால், தனித்துவம் பெற்றது. பிரதமர் மோடி நேரில் அமர்ந்து இந்த இசையை ரசித்தது, நிகழ்வின் பெருமையை மேலும் உயர்த்தியது. ஜி.வி. பிரகாஷின் குரலும் இசையும், திருவாசகத்தின் ஆழ்ந்த பக்தி உணர்வை சமகால இசை மொழியில் வெளிப்படுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.…
Read Moreசசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும்…
Read More