*SSR சத்யா பிக்சர்ஸ்* வழ ங்கும் *இசைஞானி இளையராஜா* அவர்கள் இசை மழையில் SSR சத்யா Bsc.,M.A,Mphil., LLB, ஜெனிபெர் மார்கிரட் MA. B.Ed.. அவர்கள் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் பசும்பொன் சித்தர் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று காவியம் *தேசிய தலைவர்* இசை முன்னோட்டம் இன்று (10/10/25) சிறப்பாக நடந்தேறியது..*கலைப்புலி எஸ்.தாணு* அவர்கள் முன்னிலையில் *மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா* அவர்கள் குறுந்தகடை வெளியிட *இளையதிலகம் பிரபு* அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார்கள்… தேசிய தலைவர் தேவராகவே வாழ்ந்திருக்கும் வரலாற்று நாயகன் *ஜே.எம்.பஷிர்* தேவர் தோற்றத்திலேயே விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவரின் பராட்டுதலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது… இயக்கம் – *ஆர்.அரவிந்த்ராஜ் B.A,Df.Tech.* சிறப்பு விருந்தினராக திரு V. பழனிவேல் திரு.மூர்த்தி தேவர், திரு ராஜ் மோகன், திரு.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் கலந்து…
Read MoreCategory: சினிமா செய்திகள்
இறுதி முயற்சி
— திரை விமர்சனம் கோவையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளராக இருந்து நொடித்துப் போனவர் ரஞ்சித். கடையை விருத்தி செய்வதற்காக கந்துவட்டிக்கார கும்பலிடம் ரூ 80 லட்சம் வட்டிக்கு வாங்குகிறார். வாங்கிய கடனுக்கு மேலாக வட்டி கட்டியும் இன்னும் ஒரு கோடி ரூபாய் கட்ட வேண்டும் என்கிறது கந்துவட்டி கும்பல். அதற்காக வீட்டுக்கே வந்து அந்த கும்பல் மிரட்டவும் செய்கிறார்கள். மேலும் மேலும் வட்டி பணம் கட்டி மேற்கொண்டு முதல் இல்லாமல் கடையை மூட வேண்டியதாகிறது. இதன் பிறகு கந்து வட்டி கும்பல் தொல்லை இன்னும் அதிகமாகிறது. அவரது குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்து, கடனை வசூலிக்க அவர்களை பலவழிகளில் துன்புறுத்துகிறார்கள். இதில் உச்சகட்டமாக வட்டிக்கீடாக மனைவியையும் மகளையும் கடத்தி போய் விடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். கடன் பிரச்சனையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் ரஞ்சித்துக்கு கடன் கேட்டு போகிற…
Read Moreதமிழ் சினிமாவை இன்னொரு ஸ்டெப் நகர்த்தும் முயற்சியில் சந்தோஷ் நம்பிராஜன்.
கருப்பு வெள்ளை சினிமா, கலர் சினிமா டிஜிட்டல் சினிமா, ஏஐ சினிமா என செலுலாய்டு உலகம் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை கண்டிருக்கிறது. அந்த வகையில் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில் “அகண்டன்” தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் செழியன் இயக்கத்தில் வெளியான “டூலெட்”. இந்த திரைப்படத்தின் நாயகனாக அறிமுகமானவர் சந்தோஷ் நம்பிராஜன். அதன் பின் ” வட்டார வழக்கு”, “உழைப்பாளர் தினம்” என இவர் நடித்த படங்கள் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டவை. இவர் நடிப்பில் அடுத்த விரைவில் வெளியாகும் “ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்” இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் கலந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. சொட்ட வைக்கும் காதல் ரசத்தோடு “காதலிசம்” திரைப்படமும் இணையத்தில் லிவிங் டுகெதர் ? கல்யாணமா? எது வருங்கால தலைமுறைக்கு சிறந்தது என்று பேசி…
Read Moreராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் ‘பேட்டில்’ திரைப்படத்தில் இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா மற்றும் நடிகர் முனீஷ்காந்த் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
எலைட் டாக்கீஸ் பேனரில் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘பேட்டில்’ (‘Battle’). சமீபத்தில் வெளியான ‘தண்டகாரண்யம்’ படத்தின் உதவி எழுத்தாளராகவும் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது. ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் ‘பேட்டில்’ திரைப்படத்தில் ‘தங்கலான்’ புகழ் அன்புடன் அர்ஜுன், ‘காந்தி கண்ணாடி’ படத்தில் சிறு வயது அர்ச்சனா பாத்திரத்தில் நடித்த ஆராத்யா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா, காயத்ரி, முனீஷ்காந்த், சுருளி, ‘இட்லி கடை’ படத்தில் சிறு வயது தனுஷ் பாத்திரத்தில் நடித்த திஹான் மற்றும் திவ்ய ஸ்ரீ உள்ளிட்டோர் ‘பேட்டில்’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரு ராப் பாடகரின் வாழ்க்கையைப் பின்னி பிணைந்து முழுக்க சென்னை பின்னணியில் நடைபெறும் இக்கதை, அந்த பாடகர் எதிர்கொள்ளும்…
Read Moreஐஐடி பாம்பே டெக்ஃபெஸ்ட் நிகழ்வில் ‘டிரான்:ஏரஸ்’ திரைப்படத்தை வியந்த வருங்கால தொழில்நுட்ப வல்லுநர்கள்!
செயற்கை தொழில்நுட்பம் வெறும் கருவியாக மட்டும் இல்லாமல் அதற்கும் மேற்பட்டதாக எப்படி இனி மாற இருக்கிறது என்பதை ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. தொழில்நுட்பம் என்பது நமக்கு அறிமுகம் இல்லாதவரை நமக்கு அது எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பதை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த இருக்கும் ஐஐடி மாணவர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். டிஸ்னியின் ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் ஐஐடி பாம்பே மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளது. படத்திலிருந்து உத்வேகம் பெற்று, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஐஐடி மாணவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பம், கற்பனை மற்றும் கேமிங் கலாச்சாரத்தைக் கொண்டாடும் நிகழ்வை உருவாக்கினர். அற்புதமான ஹை எனர்ஜி LED நடன நிகழ்ச்சியும் அங்கு நடந்த லேசர் நிகழ்ச்சியும் கண்ணைக் கவரும் விதமாக அமைந்தது. ஆனால், தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் உலகமான ’டிரான்:…
Read Moreமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் படத்தில், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார் !!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிப்பில், பூரி ஜெகன்நாத், சார்மி கௌர், JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா, பூரி கனெக்ட்ஸ், JB மோஷன் பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் #PuriSethupathi படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இணைந்துள்ளார். தனித்துவமான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையும் பான்-இந்தியா திரைப்படமான இன்னும் பெயரிடப்படாத #PuriSethupathi பட படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் தனது பூரி கனெக்ட்ஸ், (Puri Connects) நிறுவனத்தின் மூலம், சார்மி கௌர் மற்றும் JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா (JB Motion Pictures) ஆகியோருடன் இணைந்து தயாரித்து வருகிறார். தெலுங்கு திரையுலகின் அதிர்ஷ்ட நாயகி சம்யுக்தா, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவின் விபரங்களை…
Read Moreநயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் “ஹாய்” (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Z ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் ‘ஹாய்’ (Hi) படத்தை விஷ்ணு எடவன் (Vishnu Edavan)எழுதி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் கதாநாயகனாக கவினும் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள் அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றியவர் இவர் ஹாய் படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் விஷ்ணு எடவன் கூறும்போது : ஹாய்’ முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது.…
Read Moreநடிகர் தனுஷூக்கு நன்றி தெரிவித்த நடிகர் விக்னேஷ்!
தொழில்முனைவோர் ஆவதற்கு முன்பு 1991- 2000களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்னேஷ். கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் பெரிய சாம்ராஜ்யத்தையும் வணிகத்தில் கட்டமைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த ‘இட்லி கடை’ புரோமோஷன் நிகழ்ச்சியின்போது இசைஞானி இளையராஜாவின் ‘சின்னத்தாயி’ படத்தில் இருந்து ‘நான் ஏரிக்கரை…’ பாடலை நினைவு கூர்ந்திருந்தார் நடிகர் தனுஷ். காலத்தால் என்றும் அழியாத மெலோடி பாடலாக நிலைத்திருக்கும் அது இப்போதும் இசை ரசிகர்கள் மத்தியிலும் பல மியூசிக் ரியாலிட்டி ஷோக்களிலும் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது. இந்தப் பாடலையும் படத்தையும் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக நடிகர் தனுஷிற்கு சமீபத்தில் ‘ரெட் ஃபிளவர்’ மூலம் கம்பேக் கொடுத்திருக்கும் நடிகர் விக்னேஷ் நன்றி தெரிவித்துள்ளார். “இதுபோன்ற காலத்தால் என்றும் நிலைத்திருக்கும் மெலோடி பாடலை கொடுத்த இளையராஜா அவர்களுக்கு நன்றி. அவரது…
Read Moreஇசை நிறுவனத்தைத் துவங்கிய ஐசரி கணேஷ்!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஐசரி K கணேஷ், இன்று அதிகாரப்பூர்வமாக “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” எனும் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் மூலம், திரைப்பட தயாரிப்பு, இசை, திரையரங்குகள், போஸ்ட் புரொடக்சன் மற்றும் ஸ்டூடியோ வசதிகள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து, 360° முழுமையான பொழுதுபோக்கு தளத்தை உருவாக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும். தமிழ்நாட்டின் முன்னணி பப்ளிக் லிமிடெட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தன்னுடைய அனைத்து படைப்பு மற்றும் வணிக நிறுவனங்களையும் ஒரே பிராண்டின் கீழ் ஒருங்கிணைத்து, முழுமையான IP உரிமையை பெற்று, முதலீட்டாளர்களுக்கான நீண்டகால மதிப்பை உறுதி செய்துள்ளது. “இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர்நாடி,” என்று டாக்டர் ஐசரி K.…
Read Moreஜியோஹாட்ஸ்டாரில் அக்டோபர் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகும் ‘மிராய்!
ஃபேண்டஸி- ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ள ‘மிராய்’ அக்டோபர் 10 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. எமோஷன், புராணம் மற்றும் ஆக்ஷன் ஆகியவற்றுடன் இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சிகளுடன் படம் இருக்கும். விதியும் தெய்வீகமும் மோதும் உலகில் அமைக்கப்பட்டுள்ள ‘மிராய்’, மனிதகுலத்திற்கு சமநிலையையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்க அனைத்து தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போர்வீரனின் கதையைச் சொல்கிறது. அற்புதமான காட்சியமைப்புகள், திறமையான நடிகர்கள் மற்றும் ஆழமான கதையுடன், ஜியோஹாட்ஸ்டாரில் இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-சவுத் டிஜிட்டல் வெளியீடுகளில் ஒன்றாக ‘மிராய்’ இருக்கும். இந்தப் படத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ரித்திகா நாயக், ஜகபதி பாபு, ஜெயராம் மற்றும் ஷ்ரியா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ராணா டகுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்க, நடிகர்…
Read More