மெட்ராஸ் மேட்னி – திரை விமர்சனம்

  நடுத்தர குடும்ப வாழ்க்கை அழகானது என்பதை சொல்வதே இந்த மெட்ராஸ் மேட்னி. மிடில் கிளாஸ் வாழ்க்கை என்பது அன்றாடம் போராட்டம் நிறைந்தது. எந்தவித சந்தோஷத்திற்கும் , சாகசங்களுக்கும் அங்கே இடமில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் பிரபல கதாசிரியர் ஒருவர், அப்படிப்பட்ட நடுத்தர குடும்ப மக்களின் வாழ்க்கை பற்றி ஒரு கதை எழுத முடிவுs செய்கிறார். அதற்காக நடுத்தர குடும்ப மக்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை சேகரிக்க தொடங்குகிறார். அப்போது, நடுத்தர மக்கள் மீதான தனது பார்வை தவறு என்பதை தெரிந்து கொள்கிறார். இப்படி அவர் சந்தித்ததில் முக்கியமானவர் காளி வெங்கட். அவரது வாழ்க்கை மூலம் கதையாசிரியருக்கு கிடைத்த தெளிவு தான் படம். கதையின் நாயகனாக காளி வெங்கட் நடிப்பில் தனது புது எல்லை யை தொட்டு இருக்கிறார். கண்ணன் என்ற நடுத்தர குடும்பத்து நாயகனாக மக்கள்…

Read More

பரமசிவன் பாத்திமா -திரை விமர்சனம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலை கிராமம் ஒன்று மத மாற்றத்தால் மூன்று கிராமங்களாக பிரிகிறது. இதில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அவ்வப் போது மோதல்கள். இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட… கொலை வழக்கை விசாரிக்க காவல் அதிகாரி இசக்கி கார்வண்ணன் வருகிறார். இந்த கொலைகளை செய்தது இளம் தம்பதிகள் என்பது தெரிய வர…. கொலைகளுக்கான காரணம் என்ன என்பது கிளைமாக்ஸ். அரசு உதவி பெறும் கிறிஸ்தவ நிர்வாகப் பள்ளியில் ஆசிரியராக வரும் விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயாதேவியும் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். மதங்களால் வேறுபட்ட அவர்கள் மனங்களால் ஒன்றுபட்ட போது காதல் திருமணம். மனமொத்த தம்பதிகளுக்கு இளைஞர்களை கொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதை விவரிக்கிறது திரைக்கதை. எம்…

Read More

தக் லைப் – திரைவிமர்சனம்

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால்… இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு அதிரடி சதிராட்டம் ஆடி இருக்கிறார்கள். டெல்லியில் பிரபல கேங்ஸ்டர் ரங்கராய சக்திவேலுக்கும்( கமல்ஹாசன்), போலீசுக்கும் இடையே நடக்கும் துப்பாக்கி சண்டையில் அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர் துப்பாக்கி தோட்டாவுக்கு பலியாக… இதனால், அவரது மகன் அமரன் ( சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்க, தங்கை சந்திராவோ (ஜஸ்வர்யா லட்சுமி) காணாமல் போகிறார். இந்நிலையில், அமரனை தத்தெடுத்து மகன் போல வளர்க்கிறார் சக்திவேல். இச்சூழலில், சக்திவேலுவின் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர் ) மகள் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு, கேங்ஸ்டர் தலைமையை அமரனிடம் ஒப்படைத்து விட்டு, சிறைக்குச் செல்கிறார் சக்திவேல். இதனால் அமரன் மேல் கடுப்பாகிறார் மாணிக்கம். இந்நிலையில் சிறையில் இருந்து ரிலீஸான சக்திவேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக விசாரித்து பார்த்த…

Read More

ராஜபுத்திரன் – திரை விமர்சனம்

தென் தமிழ் நாட்டில் ராமநாதபுரம் வட் டாரத்தில் 90களின் காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து தந்தைக்கும் மகனுக்குமான பாசக் கதை. அப்பா செல்லையா தனது மகன் பட்டா மீது உயிரையே வைத்திருக்கிறார். மகனுக்கும் அப்பா தான் சகலமும். தந்தையை பெயர் சொல்லி அழைத்து மகிழும் அளவுக்கு அப்படி ஒரு அன்பு. அப்படி ஒரு அன்யோன்யம். சரியாகப் படிக்காத பட்டா குடும்ப கடனை அடைப்பதற்காக சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்யும் லிங்கா கும்பலிடம் வேலையில் சேர்கிறான். வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பது அவன் வேலை. ஒருநாள் அவன் கொண்டு செல்லும் பணம் திருடு போய் விட, அதற்கு ஈடாக தனது வீட்டு நிலப் பத்திரத்தை செல்லையா கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் பணத்தை கொடுத்து அனுப்புகிறவர்களே ஆளை வைத்து திருடுவது தெரியவர… பட்டா எடுக்கும் அதிரடி…

Read More

மனிதர்கள் – சினிமா விமர்சனம்

மதுப் பிரியர்களான ஆறு நண்பர்கள் காரில் பயணிக்கிறார்கள். இரவானதும் ஒரு இடத்தில் டேரா போட்டு கையோடு எடுத்து வந்திருந்த மது பாட்டில்களை காலி செய்கிறார்கள். போதையின் உச்சத்தில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் ஆயுத தாக்குதலில் பேச்சு மூச்சு இல்லாமல் போக, அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்க மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள்.அவர்களது அந்த முடிவு அவர்களை எங்கே கொண்டு போய் விடுகிறது என்பது கிளைமாக்ஸ். கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் எல்லோருமே புதுமுகம். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் தங்கள் மிதமிஞ்சிய போதை ஒரு உயிரை காவு வாங்கி விட்டதே என்று துடித்து துவளும் காட்சிகளில் உணர்ச்சியை கொட்டி நடித்திருக்கிறார்கள். நண்பர்களில் ஓரிருவர் இந்த சம்பவம் தங்களை எங்கு கொண்டு போய்…

Read More

ஜின் தி பெட் – திரை விமர்சனம்

700 ஆண்டுகளுக்கு முன்பு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக மன்னர்களால் மந்திரவாதிகள் மூலம் உருவாக்கப்பட்ட தீய சக்தி கொண்ட ஆவி தான் ஜின். இதில், நல்ல ஜின்களும் உண்டு. நல்ல ஜின்கள் மன்னர்களின் பாதுகாவலர்களாக இருப்பதோடு போர்களில் அவர்கள் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தன. அதோடு மட்டுமின்றி மக்களுக்கு நல்லதும் செய்து வந்தன. இப்படிப்பட்ட ஜின்கள் தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவரிடம் இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஜின் தி பெட். மலேசியாவில் ஒப்பந்த அடிப்படையில் பிரபல ஓட்டலில் இசைக்கச்சேரி நடத்தி வந்த நாயகன் முகேன் ராவ், காண்ட்ராக்ட் முடிந்ததும் தமிழகம் வரவேண்டிய நிர்ப் பந்தம். வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பும் முகேன் ராவ் ஒரு மாயப் பெட்டியில் அடைக்கப்பட்ட ‘ஜின்’ என்று மலேசிய மக்களால் அழைக்கப்படும் பேயுடன் ஊருக்கு திரும்புகிறார். அந்தப் பேயை மலேசியாவில் வாங்கியதுமே ரூ. 5 லட்சம் பணப்பரிசு…

Read More

வேம்பு – திரை விமர்சனம்

சோதனைகளை சாதனையாக மாற்றும் பெண்ணே இந்த வேம்பு. பள்ளிப் பருவம் தொட்டே சிலம்பம் கற்று வரும் வேம்புவுக்கு மாநில அளவில் ஸ்டேட் லெவல் சாம்பியன் ஆக வேண்டும்…அதன் மூலம் அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பது லட்சியம். அதற்காக பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் சிலம்பம் தான் அவள் உயிர் மூச்சாக இருக்கிறது. சிலம்பத்தில் சாதித்து அதன் பிறகு தன் மீது அன்பு பாராட்டும் மாமன் மகனை கரம் பற்றுவது என்பது அவள் திட்டம். ஆனால் பெண்கள் விஷயத்தில் ஊரில் நடக்கும் சில அசம்பாவிதங்கள் அவள் பெற்றோரை பயமுறுத்த, அவள் விரும்பிய அதே மாமன் மகனுக்கு உடனடியாக மணமுடித்து வைக்கின்றனர். திடீர் திருமணம் தனது சிலம்ப லட்சியத்துக்கு இடையூறாக வந்து விடுமோ என்று பயப்படும் வேம்பு தன் கணவனிடம் இது பற்றி பேசுகிறாள். அவனும்…

Read More

மையல் – திரை விமர்சனம்

திருட்டை தொழிலாக கொண்ட நாயகன் இரவில் ஆடு திருடிக் கொண்டு டூவீலரில் வர… மற்றொரு பக்கம் வயதான தம்பதிகள் இருவரால் கொடூரமாக கொல்லப்பட… இதற்கிடையே ஆடு திருடியவனை பொதுமக்கள் சுற்றி வளைந்து கொள்ள… உயிர் தப்ப ஓடும் அவன் ஒரு கிணற்றில் விழுந்து கால் முறிவு ஏற்பட்ட நிலையில் அங்கு தனது மந்திரவாதி பாட்டியுடன் வசித்து வரும் இளம்பெண் அவனைக் காப்பாற்றுகிறாள். அவளுக்கு பாட்டி வகை யில் மாந்திரீகமும் தெரியும். வைத்தியமும் தெரியும் என்பதால் தன் குடிசையில் தங்க வைத்து பச்சிலை வைத்தியத்தில் காலை குணமாக்குகிறாள். அவளின் அக்கறையான அன்பில் காதலுமா கிறான், திருடன். அதற்கு மேலும் அவன் அங்கிருக்க பிடிக்காதஅவளது மந்திரவாதி பாட்டி, இனி மறந்தும் இந்த பக்கம் வந்து விடாதே என்று சொல்லி அவனை நள்ளிரவு நேரத்தில் அனுப்பி வைக்கிறாள். அந்த இளம் பெண்ணின்…

Read More

நரி வேட்டை – திரை விமர்சனம்

சிறு வயதில் தந்தையை இழந்த டோவினோ தாமஸ் தாயின் அரவணைப்பில் வளர்கிறார். கல்லூரி படிப்பை நிறைவு செய்தவர் படிப்புக்கேற்ற வேலையில் மட்டுமே சேர்வது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே வங்கியில் வேலை செய்யும் பிரியம் வதா மீது பிரியமும் கொள்கிறார். சரியான வேலைக்காக காத்திருக்காமல் கிடைக்கிற வேலையை செய்து வா. படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் போது அதை செய் என்கிறார் காதலி. அம்மாவும் அதையே வலியுறுத்த, அந்த நேரத்தில் ரிசர்வ் போலீஸ் வேலை தேடி வர… வேண்டா வெறுப்பாக வேலையில் சேர்கிறார். எப்படியாவது தேர்வெழுதி சீக்கிரமாகவே அங்கிருந்து சென்று பெரிய அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், போலீஸ் ட்ரெய்னிங்கில் இருந்து கொண்டே படிப்பினை தொடர்கிறார். இந்த சமயத்தில், மலைவாழ் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான நிலம், வீடு உள்ளிடவற்றைக் கேட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி…

Read More

ஆகக் கடவன – திரை விமர்சனம்

ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன் மூவரும் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பர்களான அவர்கள், மூவரும் இணைந்து சொந்தமாய் ஒரு மெடிக்கல் ஷாப் நடத்த ஆசைப்படுகிறார்கள்.அதற்கேற்ப தனது ஒரே பெண்ணின் திருமணத்துக்காக மெடிக்கல் ஷாப்பை விற்கும் முடிவில் இருக்கிறார் உரிமையாளர். ஊழியர்களே வாங்கிக் கொள்ள விரும்புவது தெரிய வந்ததும் மகிழ்ச்சியுடன் கொடுக்க முன்வருகிறார். அதற்கான விலையாக ரூ. 6 லட்சம் ரூபாய் பேசப்பட்டு அவர்களும் பணம் புரட்டிய நிலையில் திடீரென நண்பர்கள் அறையில் இருந்த ரூ.6 லட்சம் திருட்டுப் போகிறது. இதனால் , ஊரில் உள்ள நிலத்தை விற்று பணம் ரெடி செய்வதற்காக ஆதிரனும் ராகுலும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு பயணப்படுகிறார்கள் அப்போது வழியில் வாகனம் பஞ்சராகி விட, ஊரை விட்டு ஒதுங்கி இருக்கும் பொட்டல் காட்டுப் பகுதியில் உள்ள பஞ்சர் கடைக்கு…

Read More