இன்றைய குழந்தைகளின் உலகம் பெரும்பாலான பெற்றோரின் கணிப்புக்கு அப்பாற்பட்டது.குழந்தைகளுக்கான நேரம் ஒதுக்கி அவர்களிடம் நட்பு பாராட்டினால் மட்டுமே அவர்களின் அந்த பருவத்து எண்ணங்களை புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை கொஞ்சம் எமோஷனல், அதிக காமெடியுடன் சொல்லியிருப்பதே இந்த பறந்து போ. மிர்ச்சி சிவா-கிரேஸ் ஆண்டனி தம்பதிகள் தங்கள் ஒரே மகன் விஷயத்தில் பெரிய கனவுடன் இருக்கிறார்கள். இதனால்குடும்பத்தின் அதிகபட்ச தேவைக்காக கணவர் சென்னையிலும் மனைவி கோவையிலுமாக வேலை, தொழில் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். மகன் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பது, அவன் எது செய்தாலும் பாராட்டுவது என்று இருந்தாலும், அந்த பிஞ்சு நெஞ்சின் விருப்பமோ அவர்கள் எதிர்பாராத கோணத்தில் இருக்கிறது. அதை மகனுடனான பைக் டூரில் அறிந்து கொள்ளும் அப்பா அதன் பிறகு என்ன முடிவு…
Read MoreCategory: விமர்சனம்
3 பி எச். கே – திரை விமர்சனம்
ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியின் வீடு வாங்கும் கனவு நனவு ஆனதா என்பதே படம். மனைவி, மகன், மகள் என்று அளவான குடும்பம் வாசுதேவனுடையது. வாடகை வீடு, மகன் மகள் படிப்பு என்று வாங்கும் சம்பளம் போதாத நிலையிலும் சொந்தமாய் ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பது வாசுதேவனின் லட்சியமாக இருக்கிறது. அதற்காக சிறுக சிறுக பணம் சேர்க்கிறார். இதற்கிடையே குறைந்தபட்ச மார்க்கில் பாசான மகனை இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க பெரும்பகுதி பணம் போகிறது. மறுபடி கொஞ்சம் பணம் சேர்ந்தபோது மகள் திருமணம் நிச்சயம் ஆகிறது. கணிசமான கையிருப்பை அது காலி செய்கிறது. இதற்கிடையே வாசுதேவனுக்கு மாரடைப்பு வந்து கட்டாய இதய ஆபரேஷன். இப்படி பணம் சேரச் சேர, செலவுகளும் அதற்கேற்ப வந்து சேர்ந்து கொள்ள, மேலும் சோதனையாக இன்ஜினியரிங் படிப்பில் கோட்டை விட்டு வந்து கண்ணீர்…
Read Moreஅர்த்தமுள்ள படத்தை உருவாக்குகிறோம் என்பது மகிழ்ச்சி!! -இயக்குனர் ஷெரிப்
தமிழ் சினிமாவில் பல முக்கியமான திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜெய்கிரண், தற்போது தயாரிப்பாளராக தனது முதல் படமான ‘காந்தி கண்ணாடி’ மூலம் புதிய பயணத்தை தொடங்குகிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், எளிமை மற்றும் நேர்மையை பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படக்குழு முழு உற்சாகத்துடன் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் தயாரிப்பாளர் ஜெய்கிரண் கூறியதாவது, “காந்தி கண்ணாடி என்பது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மட்டுமல்ல, எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையை முதன்முறையாக கேட்டவுடனே என் நெஞ்சை தொட்டது போல் ஒரு உணர்வு இருந்தது. படம் முடிந்த பிறகும், ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்கும்…
Read Moreகண்ணப்பா – திரை விமர்சனம்
சிறு வயது முதலே தெய்வ நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன். அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றனர். அங்குள்ள மலையில் இருக்கும் வாயு லிங்கத்தை கவர்ந்து செல்ல, காளமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் திண்ணனின் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட சிக்கலில் திண்ணனை ஊரை விட்டுத் தள்ளி வைக்கிறார், தலைவரும் அவனது தந்தையுமான நாகநாதன்.திண்ணன் பட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நேரத்தில் காளமுகி தலைவன் வாயு லிங்கத்தை கைப்பற்ற பெரும்படையுடன் வருகிறான். இந்த வீர தீர போரில் நாகநாதன் வீர மரணம் அடைகிறார்.இதன் பிறகு தந்தையை கொன்ற காள முகியை திண்ணன் எப்படி அழித்தார்? நாத்திகராக இருந்த அவர், எப்படி சிவபக்தராக மாறினார் என்பது பரபரப்புக்கு குறைவில்லாத கதைக்களம். 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப…
Read Moreமார்கன் – திரை விமர்சனம்
க்ரைம் ஃபார்முலா கதைகள் எப்போதுமே சரியான விதத்தில் சொல்லப்பட்டால் வெற்றி நிச்சயம். ஒரு ஊசி போட்டால் உடல் கறுப்பாகி இறக்கும் வேதியியல் ஃபார்முலாவை கண்டு பிடித்த வில்லன், அதை பழி வாங்க பயன்படுத்துகிறார். இந்த விஷ ஊசியால் உயிர் இழக்கும் ரம்யாவின் கொலையில் இருந்து படம் தொடங்குகிறது. தனது மகள் கொல்லப்பட்ட சாயலிலேயே கொல்லப்பட்டிருக்கும் ரம்யாவின் கொலை வழக்கைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்க மும்பையில் இருந்து சென்னை வருகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி. அவரால் கொலையாளியை நெருங்க முடிந்ததா? . அந்த கொடூர கொலையாளி யார்? என்பதை புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறார்கள். கொலைகாரனால் துரத்தப்படுவதாகக் காட்டப்படும் வெண்ணிலா பாத்திரத்தில் கனிமொழி நடிப்பு மிகவும் சிறப்பு. விசாரணைக்கு உதவும் காவல்துறை அதிகாரிகளாக மகாநதி சங்கர், பிரிகிடா, SDAT ஊழியராக வரும் அம்ஜத் கான் பொருத்தமான…
Read Moreலவ் மேரேஜ் – திரை விமர்சனம்
30 தாண்டிய இளைஞர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் பெண் கிடைப்பதில்லை. ஒரு வழியாக கிடைத்த பெண்ணும் கிடைக்காது போனால்… மதுரையை சேர்ந்த விக்ரம் பிரபுவுக்கு 33 வயதாகியும் திருமணமாகவில்லை. 25 வயது காலகட்டத்தில் தேடிவந்த மண வாய்ப்புகளில் அலட்சியம் காட்டியதன் விளைவு, இப்போது 33 வயதை எட்டிய நிலையில் பெண் பார்க்கப் போகும் இடங்களில் வயதை காரணம் காட்டி புறக்கணிக்கப்படுகிறார். ஒரு வழியாக புரோக்கர் மூலம் பெண் பார்க்க கோவைக்கு குடும்பத்துடன் செல்கிறார்கள்.பெண் பிடித்துப் போக, பெண் வீட்டாருக்கும் சம்மதம். இதனால் தாமதிக்காமல் திருமண நிச்சயதார்த்தம். மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்துக்கு தேதி குறித்து ஊருக்கு கிளம்ப தயாரான நிலையில் கொரோனாவுக்காக ஊரடங்கு சட்டம் அமுல் ஆகிறது. இதனால் பயணத்துக்கு வாய்ப்பு இன்றி மாப்பிள்ளை குடும்பம் அங்கேயே தங்க வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் மணப்பெண்…
Read Moreகுட் டே – திரை விமர்சனம்
பணிப்பெண்ணை சீண்டிய அலுவலக மேலாளரை தட்டிக் கேட்டபோது உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்துகிறது நிர்வாகம். அம்மாவின் மருந்து செலவுக்கு பணம் அனுப்பினால் கோபத்தில் எரிந்து விழும் மனைவி, வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவனிடம் முறை வாசலுக்கும் சேர்த்து பணம் கேட்கும் உரிமையாளரிடம் ஆத்திரம்.. உடல்நிலை சரியில்லாத பெண் குழந்தை, 1000 ரூபாய் கடன் கேட்டால், அவமானப்படுத்தும் அறை நண்பன்… இப்படி ஒரு நாள் முழுவதும் பல அவமானங்களை கடந்து செல்லும் நாயகன், அத்தனைக்கும் ஒரே தீர்வு மது தான் என்று எண்ணி அன்றைய இரவு மதுவில் குளிக் கிறார். இதற்கிடையே காணாமல் போன குழந்தையை கண்டு பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் காவல்துறையும், நாயகனால் பாதிக்கப்பட, குழந்தையை தேடும் காவல்துறை தங்களை டென்ஷன் ஆக்கிய நாயகனையும் சேர்த்து தேடுகிறது. நாயகன் போலீசில் சிக்கினாரா… கடத்தப்பட்ட குழந்தையை காவல்துறை…
Read Moreரவுடி லிவிங்ஸ்டனிடம் விசுவாசமிக்க அடியாட்களாக இருப்பவர்கள் வைபவ், மணிகண்ட ராஜேஷ். லிவிங்ஸ்டனின் தொழில் குருவான ஷிகான் உசைனி தனது வீட்டில் ஒரு போலி திருட்டை நடத்த லிவிங்ஸ் டனை கேட்டுக்கொள்ள, அவரும் தனது விசுவாச அடியாட் களை அனுப்புகிறார். இன்சூரன்ஸ் மூலம் அந்த பணத்தை பெற்ற பிறகு கொள்ளையடித்த பணத்தை திருப்பி தந்து விட வேண்டும் என்பது வைபவ் அண்ட் கோவுக்கான அசைன்மென்ட். திட்டப்படி இரண்டு கோடியை கொள்ளையடித்து விடும் வைபவ்வும் மணிகண்டனும் டாஸ்மாக்கில் பணத்தை தொலைத்து விடுகிறார்கள். இதனால் விட்ட பணத்தை மீட்க வங்கி கொள்ளை ஒன்றுக்கு திட்டமிட்ட நிலையில் இருக்கும் ஆனந்தராஜ் கோஷ்டியில் இணைகிறார்கள். பூமிக்கடியில் பள்ளம் தோண்டி வங்கியை அடைந்த நிலையில் வங்கியை கொள்ளை அடிக்க முடிந்ததா? என்பதை முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் சொல்லி இருக்கிறார்கள். சிட்டி கேங்ஸ்டர்ஸ் காமெடி கதாபாத்திரத்திரங்களை…
Read Moreகுபேரா திரை விமர்சனம்
வங்கக் கடலில் கண்டுபிடிக்கப்படும் கச்சா எண்ணெய் மூலம் லட்சம் கோடிகளை தனக்கு சொந்தமாக்கத் துடிக்கும் கோடீஸ்வர தொழிலதிபர் நீரஜ் குப்தா, அதற்காக அந்த துறை மந்திரியை சந்தித்து பேசுகிறார். அரசுக்கு சொந்தமான எண்ணெய் வளத்தை தனியார்க்கு தாரை வார்த்தால் அப்புறமாய் அவர் கோடிகளில் குளிப்பார் என்பது மந்திரிக்கு தெரியாதா என்ன… அதனால் பேரம் பேசுகிறார். ஒரு லட்சம் கோடி பணமாக கை மாறினால் இது சாத்தியம் என்கிறார். அதோடு இந்த பணத்தில் அந்த துறை சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களுக்கு பத்தாயிரம் கோடி என பிக்ஸ் செய்கிறார். இதற்கு மந்திரி போடும் ஒரே கண்டிஷன், தரும் கோடிகள் கருப்பு பணமாக அல்லாமல் வெள்ளையாக தரப்பட வேண்டும். இந்த டீலுக்கு சம்மதிக்கும் தொழிலதிபர், செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை இது விஷயமாய் சந்திக்கிறார். உன்…
Read Moreபடைத்தலைவன் – திரை விமர்சனம்
யானை படங்கள் எத்தனை வந்தாலும் தமிழ் சினிமா தாங்கும். அப்படி ஒரு சமீபத்திய வரவு தான் இந்த படைத்தலைவன். வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த குட்டி யானை ஒன்றை நாயகன் சண்முக பாண்டியனின் தாயார் பிள்ளையைப் போல வளர்க்கிறார். அம்மாவின் மறைவுக்குப் பிறகு அவர் பாசமாக வளர்த்த யானை அந்த வீட்டில் ஒருவராகிப் போகிறது. இதற்கிடையே தொழிலுக்காக கடன் கொடுத்த உறவினர் பல்வேறு நெருக்கடி கொடுக்கிறார். குறித்த நாட்களில் பணத்தை வட்டியுடன் திருப்பி தரா விட்டால் நடப்பதே வேறு என்று அவர் கர்ஜித்துப் போக, இதனால் யானையை திருவிழாக்கள் கல்யாண வீடுகளுக்கு வாடகைக்கு விட்டால் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் கடனை அடைத்து விடலாம் என்று சண்முக பாண்டியன் நண்பர்கள் ஆலோசனை சொல்ல, அதை குடும்பமும் ஏற்கிறது. அப்படி ஒரு திருமண வீட்டுக்கு வாடகை பேசி…
Read More
