டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா, நடிகைகள் பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை அதிதி பாலன் பேசுகையில், ” மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். நான் மிகவும் ரசித்து விருப்பத்துடன் பணியாற்றிய படம்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
ஹாஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன் @ 2.22’!
எளிமையான, புது சிந்தைனைகளுடன் வரும் கதைகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க திரை ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர். அதுபோன்ற கதைகள் வரும்போது நிச்சயம் அது பெரும் வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுபோன்ற பல கதைகள் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ‘டோபமைன் @ 2.22′ படத்தில் இணைந்துள்ளனர். திரவ் இந்தப் படத்தை இயக்கி அதில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குநர், நடிகர் திரவ் பகிர்ந்துகொண்டதாவது, “’டோபமைன் @ 2.22’ படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி வருகிறது. அவர்களின் வாழ்க்கை இன்னும் நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்களின் உணர்வுகள் மற்றும் ஒரு விஷயத்திற்கு அடிமையாதல் பற்றிய கதையாக இது நகரும்.…
Read More‘அந்தகன்’ திரைப்படம் – வெற்றி விழா!!!
ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் – வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் பிரவீண் காந்த் பேசுகையில், ”’அந்தகன்’ படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் ‘கரிஸ்மா’…
Read Moreசீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ பத்திரிகையாளர் சந்திப்பு!!
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழுவினர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சீயான் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், கலை இயக்குநர் மூர்த்தி, இயக்குநர் பா. ரஞ்சித், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா ஆகியோர்…
Read More’கொட்டுக்காளி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் கலையரசு, “நாங்கள் தயாரித்து வழங்கும் ஏழாவது படம் ‘கொட்டுக்காளி’. உலகம் முழுவதும் இந்தப் படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது எங்களுக்குப் பெருமை. ‘கூழாங்கல்’ படம் பார்த்ததும் நாங்கள் வினோத்துடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தோம். ‘கொட்டுக்காளி’ மூலம் அது நடந்துள்ளது. வினோத்ராஜ், சூரி, அன்னா பென் என அனைவரும் சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவினரும் நன்றாக வேலை செய்திருக்கின்றனர். படம் நிச்சயம் பேசப்படும். இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார். ஒளிப்பதிவாளர் சக்திவேல், “என்னுடைய…
Read Moreதமிழ்நாடு திரைப்பட விழா (TNFF)-வின் 2வது பதிப்பு தொடங்கியது!
தமிழ்நாடு திரைப்பட விழா (Tamil Nadu Film Festival – TNFF) என்ற பெயரில் சென்னையில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இத்திரைப்பட விழாவின் முதல் பதிப்பு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு திரைப்பட விழா (TNFF)-வின் 2வது பதிப்பை நேரடியாக நடத்த திட்டமிட்ட விழாக்குழுவினர், 2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சென்னையில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, தமிழ்நாடு திரைப்பட விழா (TNFF) இரண்டாவது பதிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் செண்டரில் தொடங்கியது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திரைப்பட விழாவில்…
Read Moreபிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பணிகள் தொடக்கம்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்ஷன் திரைப்படம் ‘என்டிஆர் நீல்’ பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது! ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் மாஸ் நடிகர் என்டிஆர் கைக்கோக்கிறார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தற்காலிகமாக ‘என்டிஆர்நீல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2024 தொடங்கி இருப்பதால், என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் படம் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. என்டிஆர் மற்றும் இயக்குநர் நீல் தங்களது குடும்பத்தினருடன் இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர். ரசிகர்களை குஷிப்படுதுத்தும் வகையில், இந்தப் படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும் என வெளியீட்டுத் தேதியையும்…
Read Moreஇயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு விழா !!
மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், , KJB Talkies சார்பில் பாலமணிமார்பன், Seven Warriors சுரேஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்துகொண்ட இவ்விழாவினில் “ஹாட் ஸ்பாட் 2 ” படத்தின் பிரத்தியேக புரோமோ திரையிடப்பட்டது. இந்நிகழ்வினில் Seven Warriors சார்பில் சுரேஷ் குமார் பேசியதாவது… மீடியா நண்பர்கள் தந்த ஆதரவு தான் இந்த இரண்டாம் பாகம்…
Read More’பேச்சி’ திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இன்று (ஆக.9) சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், “பேச்சி வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சினிமா வர்த்தகமே இன்று நிலையற்ற சூழலில் இருக்கும் போது பேச்சி என்ற சிறு படம் 10 வது நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் எங்களுக்கு 18 காட்சிகள்…
Read Moreதிரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலினை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார். தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் தன்னுடைய தடத்தினை பதித்திருக்கிறார். இவர் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பாரதி புத்தகாலயம் பதிப்பக உரிமையாளர் க. நாகராஜன் நிகழ்த்தினார். கவிஞர் நந்தலாலா இந்த நூலுக்கான ஆய்வுரை அளிக்க..’ மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக எழுத்தாளரும், இயக்குநருமான சீனு. ராமசாமி நன்றி உரையாற்றினார்.…
Read More