ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியானது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. ஹாட்ஸ்டார் பிரதீப், “படம் எடுப்பதை விட மக்களிடம் படத்தைக் கொண்டு போய் சேர்ப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது. ராம் எனது சிறந்த நண்பர். அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான படம் எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் சிவா சேர்ந்தது எதிர்பாராத விஷயம். அதுவே பெரிய பலம். சந்தோஷ் தயாநிதி அருமையான இசை கொடுத்திருக்கிறார். அப்பாவுக்கும் பையனுக்குமான அழகான கதையை மக்கள் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி”. இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, “படத்தில் வாய்ப்பு கொடுத்த ராம் சாருக்கு நன்றி. ஆதரவு கொடுத்து…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
“ஒரே ஒரு போன் கால்ல எங்க படத்த தமிழ்நாட்டுல இருக்குற எல்லாரையும் திரும்பி பார்க்க வெச்சாரு விஜய் அண்ணா” ; பன் பட்டர் ஜாம் விழாவில் நன்றி சொன்ன ராஜூ ஜெயமோகன்
ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. . இந்த நிகழ்வில் *நடிகர் ராஜூ ஜெயமோகன் பேசும்போது, :* இந்த வாய்ப்பு கிடைக்கறதுக்கு முக்கியமான காரணம் பிக் பாஸ் ஷோ தான்னு நினைக்கிறேன்.. அதுக்கு…
Read More45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் – பாடகர்- இசை கலைஞரான ‘ராக் ஸ்டார் ‘ அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் – ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசை நிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சர்வதேச அளவிலான இவரது இசைப் பயணம் ரசிகர்களிடத்தில் பிரபலமாக இருக்கும் தருணத்தில் எதிர்வரும் 26 ஆம் தேதி அன்று கிழக்கு கடற்கரை சாலையில் அமையப்பெற்றிருக்கும் திருவிடந்தை எனும் இடத்தில் #Hukum எனும் பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்லாயிர கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும்…
Read More’ஓஹோ எந்தன் பேபி’ படத்தை பாராட்டிய பாலிவுட் நடிகர் அமிர்கான்!
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. நடிகை மிதிலா பால்கர், “‘ஓஹோ எந்தன் பேபி’ ரொமாண்டிக் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம். நிச்சயம் நீங்கள் அனைவரும் உங்களுடன் தொடர்பு படுத்தி பார்த்துக் கொள்ள முடியும். நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஜூலை 11 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்”. நடிகை அஞ்சு குரியன், “‘ஓஹோ எந்தன் பேபி’ ரோம்-காம் திரைப்படம். இந்த படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறோம். நிச்சயம் நீங்கள் அனைவரும் திரையரங்கிற்கு…
Read More“அடுத்தடுத்து ஈழ தமிழ் பேசி நடிக்கிறதுல என்ன தவறு?” – பட விழாவில் சசிக்குமார்!!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் பேசியதாவது… விஜய் கணபதி பிக்சர்ஸ் மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் பிடித்த படத்தைத் தருவோம். நாயகன் சசிகுமார் சார் இப்படத்திற்காகப் பார்த்துப் பார்த்து அத்தனை விஷயங்கள் செய்து தந்தார். இயக்குநர் சத்ய சிவா அருமையாக படத்தை எடுத்துள்ளார். லிஜோ மோல் அற்புதமாக நடித்துள்ளார் எல்லோரும் இந்த பாத்திரத்திற்கு அவரைத்தான் சொன்னார்கள். ஜிப்ரான் சார் தன் இசையால் சீட்…
Read Moreட்ரீம் நைட் ஸ்டோரீஸ் பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!
புதிய தயாரிப்பு நிறுவனமாக மலர்ந்துள்ள ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான “புரொடக்ஷன் நம்பர் 1” மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதிப்பைத் தெரிவித்துள்ளது. மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்களிலும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றிய இயக்குனர் லோகன் இயக்கும் இந்த படத்துக்கான அறிமுக நிகழ்வு, திரையுலக பிரபலங்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் திரண்ட மகிழ்வான ஒரு இரவாக மாறியது. இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மின்னும் ஆட்டக்காரர் ஷிவம் டூபே, நிகழ்வின் துவக்கமாக விளக்கேற்றும் விழாவில் கலந்து கொண்டார். தொகுப்பாளருடன் நகைச்சுவை கலந்த உரையாடலில் ஈடுபட்ட அவர், “இது ஒரு வரலாற்றுப் பொழுது. இத்தகைய ஒரு படத் திட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறேன் என்பது பெருமை!, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும்…
Read More“இளையராஜாவிற்கு பிறகு இசையை அதிகமாக நேசிப்பவர் வித்யாசாகர் தான்” ; தேசிங்கு ராஜா-2 விழாவில் ஆர்.கே.செல்வமணி பேச்சு
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எழில். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ்,…
Read Moreஜியோஹாட்ஸ்டாரில் ரேவதி இயக்கத்தில் பிரியாமணி நடித்துள்ள “குட் வொய்ஃப்”!!
ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக இன்று வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி தமிழ் ஓடிடியில் அறிமுகமாகிறார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. படத்தொகுப்பாளர் கிஷன், “மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் சிறப்பாக கொண்டு வந்தோம். ரேவதி மேமுடன் வேலை பார்த்தது புது அனுபவம். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்”. ஒளிப்பதிவாளர், துணை இயக்குநர் சித்தார்த் ராமசாமி, “இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரேவதி மேம் என்னுடைய முதல் ஃபீமேல் டிரைக்டர். செம கூல்! நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும்…
Read Moreலவ்மேரேஜ் படக்குழுவினர் எனர்ஜியே இந்த வெற்றி
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் – ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இவ்விழாவில் படக் குழுவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் முருகானந்தம் பேசுகையில், ” இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், அதற்கு காரணமாக திகழ்ந்த ஊடகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்கள் கழித்து நான் நடித்த இந்த திரைப்படத்தை குடும்பத்தினருடன் சென்று பார்க்கும்படி என்னுடைய உறவினர்களிடம்…
Read Moreமுதல்வர் ஸ்டாலின் திருக்குறள் திரைப்படத்தை காண வேண்டும் – தொல்.திருமாவளவன் வேண்டுகோள் !!
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், திருக்குறளை மையமாக வைத்து மிகப் பிரம்மாண்டமாக படைப்பாக வெளியாகியுள்ளது ‘திருக்குறள்’. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். தமிழக அரசியல் ஆளுமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், திரு திருமாவளவன், இன்று இப்படத்தினை பார்த்து, படக்குழுவினரைப் பாராட்டினார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்படத்தை பார்க்க வேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளார். படம் பார்த்த பிறகு திரு திருமாவளவன் கூறியதாவது… தமிழ் சமூகத்தில் போற்றப்பட வேண்டிய ஒரு படைப்பாக இன்றைக்கு வெளிவந்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சமூகம் எவ்வாறு வாழ்ந்தது என்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் காட்டக்கூடிய வகையில் ஐயன் திருவள்ளுவனின் படைப்பான உலக பொதுமறையாய்…
Read More