’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் மீடியா மத்தியில் பாசிடிவ்வான ரெஸ்பான்ஸ் இருந்தது. இந்த ஆதரவினால் படத்திற்கான திரைகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. நிர்வாகத் தயாரிப்பாளர் ஆடிட்டர் விஜயன், “இந்தப் படம் புதுவிதமான சந்தோஷமான வெற்றி அனுபவத்தைக் கொடுத்துள்ளது. எங்களுக்கு இது முதல் படம் என்பதால் ரிசல்ட் எப்படி இருக்கும் என பயந்து கொண்டே இருந்தோம். ஆனால், மக்களின் ரிசல்ட் பார்த்ததும் பெருமையாகவும் திருப்தியாகவும் இருந்தது. உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி. கிளைமாக்ஸ் முடிந்தும் ரசிகர்களால்…

Read More

பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் மதிப்புக்குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது

பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் அளித்த அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட்மேன்” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த அவர், உலகளவில் பெண்களின் நலனுக்காக போராடும் இயக்கங்களுக்கு தூண்டுதல் அளித்துள்ளார். உலகிலேயே மிகவும் தாக்கம் செலுத்தும் 100 பேரில் ஒருவராக, Time பத்திரிகை அவரை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அவருடைய வாழ்க்கை கதை அடிப்படையாக கொண்டு, தேசிய விருதுபெற்ற ஹிந்தி திரைப்படமான “Padman” உருவானது. அக் கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்தார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் மாதவிடாய் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும், ஆஸ்கார் விருது வென்ற “Period. End of Sentence.” ஆவணப்படம்…

Read More

சென்னை ஃபைல்ஸ் – முதல்பக்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா!!

அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. ஆகஸ்ட் 1ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ், இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன், இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப், நாயகன் வெற்றி, நாயகி ஷில்பா மஞ்சுநாத், நடிகைகள் நயனா…

Read More

“இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்துக்கும் விமர்சனம் தேவை., அது ஆரோக்கியமான விமர்சனமாக இருக்கட்டும்” ‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் உதயா வேண்டுகோள்

நடிகர்கள் உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் – சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா – ‘தயா’ என். பன்னீர்செல்வம் – எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்…

Read More

பிளாக்மெயில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஆர் வி உதயகுமார் புகழாரம்

M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசியதாவது. “இந்தப் படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் சாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிய கடைசி 8 நாட்கள் மட்டும் பாக்கி இருந்தது. அதற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்தவர் ஜி.வி. பிரகாஷ். படத்திற்காக அவர் பாதி சம்பளம்தான் வாங்கி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டப்பிங் முடித்து ஆடியோ லான்ச் வரை வந்திருக்கிறார். அவருக்கு என்றுமே கடமைப் பட்டிருக்கிறேன்”.    இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்: “30 வருடங்களுக்கு முன்பு ‘பிளாக்மெயில்’ என்ற இந்திப் படம்…

Read More

ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் ‘சோழநாட்டான்’

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மும்பையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரான மாரியப்பன் முத்தையா தயாரிக்கும் ‘சோழநாட்டான்’ திரைப்படம் திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. “பட்டுக்கோட்டை” ரஞ்சித் கண்ணா இயக்கும் ‘சோழநாட்டான்’ முழுக்க ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘உழவன் மகன்’ படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது. மதுரை, திருநெல்வேலி புகழ் பாடும் எத்தனையோ படங்கள் வந்துள்ள நிலையில் சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பை திரையில் பறைசாற்றும் விதமாக இந்த திரைப்படம் தயாராகிறது. ‘சோழநாட்டான்’ திரைப்படத்தில் ‘டைனோசர்ஸ்’ மற்றும் ‘ஃபேமிலி படம்’ புகழ் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. லுத்துஃப் நாயகியாக நடிக்க, சௌந்தரராஜன் மற்றும் சுவேதா…

Read More

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சாஸ்தா புரொடக்ஷன்ஸ் வழங்கும் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த ‘யுவன் 360’, ‘சோனு நிகம் லைவ்’, ‘விஜய் ஆண்டனி 3.0’, ‘டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்’, உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ஏற்பாடு செய்யவுள்ளது. ‘ராக் ஆன் ஹாரிஸ் 3.0’ என பெயரிடப்பட்டுள்ள இந்த…

Read More

நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. காமெடி நடிகராக பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவாகர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார் . சண்டை காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக…

Read More

“இசையில் மட்டுமே ஈடுபாடாக இருந்த என்னை ஒரு நடிகனா அசுரன் படத்தில் அறிமுகப்படுத்திய டைரக்டர் வெற்றிமாறன் என்றென்றும் என் நன்றிக்குரியவர்”

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்சின் “உசுரே” திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரை அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, மிர்ச்சி சிவா, இயக்குனர் சுப்ரமணிய சிவா, இசையமைப்பாளர் சி.சத்யா, லோகேஷ் அஜில்ஸ், இயக்குனர் வாலி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் தங்கதுரை பேசியது: நம்ம படத்தை பற்றி பேசணும்னா கிளைமாக்ஸ் ரொம்ப நல்ல வந்திருக்கு.. எல்லாருமே நல்லாபண்ணிருக்காங்க. ஆந்திரால ஷூட்டிங் நடந்ததால் நல்லா சாப்பிட்டோம். சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிற சிவா சார் வேற லெவல். பறந்து போ பட வெற்றியை கொடுத்திட்டு வந்திருக்காரு.. எல்லாருமே நல்லா பண்ணிருக்காங்க மியூசிக் ரொம்ப அழகா வந்திருக்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. ஹெவன் பிக்சர்ஸ் சந்துரு பேசியது…

Read More

ஒரு ஜாதியினரை காயப்படுத்தி படமெடுப்பது சினிமாவுக்கு செய்யும் துரோகம் – சென்ட்ரல் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு!!

ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில், வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கத்தில், விளிம்பு மனிதர்களுடைய வாழ்வின் வலியைச் சொல்லும் ஒரு ஆழமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ சென்ட்ரல் ” ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் பங்கேற்க, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்…. இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது… சென்ட்ரல் பட டிரெய்லரும் பாடல்களும் பார்க்க எமோஷனலாக இருந்தது. இந்த யூனிட்டில் எனக்கு யாரையும் தெரியாது. பேரரசு இந்தப்படத்தில் லீட் ரோல் செய்துள்ளதாக சொன்னார். அவரை வாழ்த்த வேண்டும் என்று தான் வந்தேன். சென்ட்ரல் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். பேரரசுவை எனக்குப் பிடிக்கும் அவர் மனிதநேயமிக்க…

Read More