கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜி கலைஞரின் கதை, வசனத்தில் ‘கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் கலை இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானார். இதுவரை 15க்கும் மேற்பட்டப் படங்களில் பணியாற்றியுள்ளார். இதுமட்டுமல்லாது ஆச்சி மசாலா, ராம்ராஜ் என பல முன்னணி விளம்பர பிராண்டுகளிலும் இவர் பணி புரிந்துள்ளார். திரு. சாபு சிரில் மற்றும் திரு. கதிர் இவர்களின் அறிவுரையோடு இயக்குநர் சிவாமெடின் இயக்கத்தில் வெளியான ‘3.6.9’ திரைப்படத்திலும் இவர் பணியாற்றினார். இந்தப் படத்தில் இவரது கலை இயக்கத்திற்காக ’ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ என்ற பெருமை மிக்க விருது கிடைத்துள்ளது. நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரக்கூடிய ‘சமரன்’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்த போது இந்த விருது அறிவிக்கப்பட்டது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் கலை இயக்குநர்களில் இவர்தான் இந்த விருதை முதன் முதலில் பெற்றுள்ளார் என்பது…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும், ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்”. திரைப்படம். ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக, இணையதள, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா பேசியதாவது… ஃபைட் கிளப், மிகப்பெரிய அனுபவம். முதலில் லோகேஷ் பிரதருக்கு நன்றி. இந்தப்படம் பற்றி பேச நிறைய இருக்கிறது. ரீல் குட்ஸ் ஃபிலிம்ஸ் ஆரம்பித்ததிலிருந்தே விஜய்குமாரும் நானும் படம் செய்யப் பேசி வந்தோம். இப்போது இந்த கட்டத்திற்குப் படம் வந்துள்ளது மகிழ்ச்சி. இந்தப்படம் கடந்த ஆண்டு பாதி முடித்திருந்தபோது விஜய் குமார் லோகேஷ் பிரதருக்கு…
Read More”குய்கோ” சினிமா விமர்சனம்
தனது 30 வருட பத்திரிக்கைத் துறைப் பணி மற்றும் அனுபவத்தை தொடர்ந்து அருள் செழியன் முதன்முறையாக இயக்கி இருக்கும் திரைப்படம் “குய்கோ”. அருள் செழியன் 2016ம் ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை” திரைப்படத்தின் கதாசிரியராக பணியாற்றியவர் என்பது நினைவு கூறத்தக்கது. ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் எப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக இருந்ததோ அதே போன்று “குய்கோ” திரைப்படமும் ஒரு வித்தியாசமான காண்பனுவத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருந்தது என்பதிலும் கண்டிப்பாக கொண்டாட்டத்திற்கான படமாக “குய்கோ” இருக்கின்றது என்பதிலும் படம் பார்த்த யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இயக்குநருக்கு பழைய தமிழ் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் போல் தெரிகிறது. தான் கதை எழுதிய திரைப்படத்திற்கு ஆண்டவன் கட்டளை என்ற பெயரை அவர்தான் சிபாரிசி செய்தாரா..? என்பது தெரியவில்லை. அல்லது அப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன…
Read More‘சபாநாயகன்” – ஒரு நாஸ்டால்ஜியா ட்ரிப் சென்ற அனுபவத்தைக் கொடுக்கும் – அசோக்செல்வன்
அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். Clear water பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், i Cinemas சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும்…
Read Moreசத்யராஜ் நடிக்கும் ‘அங்காரகன்’ படத்தில் இசைமைப்பாளராகும் பாடகர்
திரைப்பட பாடலாசிரியர் கு.கார்த்திக், ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். உதித் நாராயணன் மற்றும் ஜிவி பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்கள் பங்களிப்பை கொடுத்துள்ள இந்த படத்தின் இசை ஆல்பம் வரும் மார்ச் 29ஆம் தேதி ட்ரெண்ட் மியூசிக்கின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்படுகிறார். சத்யராஜின் கதாபாத்திரத்தை சுற்றி வரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீபதி, நியா, ரெய்னா காரத் அங்காடித்தெரு மகேஷ் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் ஸ்ரீபதி, சதீஷ் சரண் இயக்கத்தில், சைமன் கிங் இசையமைப்பில் அசுரன் புகழ் அம்மு அபிராமி மற்றும் கோமல் சர்மா கதாநாயகிகளாக நடித்துள்ள…
Read Moreகபடி கதைக்குள் இணைந்த தாத்தா-பேரன் பாசப்போராட்டமே ‘பட்டத்து அரசன்’
அதர்வா மற்றும் ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் பட்டத்து அரசன். புதுமுகம் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், துரை சுதாகர், ரவி காலே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஏ.சற்குணம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படம் குறித்து நாயகன் அதர்வா பேசுகையில், “சற்குணம் சார் இந்த கதையை என்னிடம் சொன்ன போதே நிச்சயம் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அதே சமயம், முதலில் என்னிடம் கதை சொல்லும் போது இதில் ராஜ்கிரண் சார் இல்லை. ஆனால், ராஜ்கிரண் சார் போன்ற ஒருவர் இந்த வேடத்தில் நடிக்கிறார் என்று தான் இயக்குநர்…
Read Moreகொரோனா நிவாரண நிதிதிரட்டும் இசையமைப்பாளர் ஜிப்ரன்
இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர். பல்வேறு புதுவிதமான இசை முயற்சிகளால், ரசிகர்களின் ஆதரவு இவருக்கு அதிகரித்து வருகிறது தெலுங்கில் பிரபாஸ் நடித்து வெளியானசாஹோபடத்தின் இசையால் இந்திய அளவில் கவனம் பெற்ற ஜிப்ரன் தற்போது அப்படத்தில் இருந்து வெளிவராத ஒரு பின்னணி இசை தொகுப்பினை, இதுவரையிலும் இல்லாத வகையில் NFT(Non Fungible Token) என்னும் முறையில் ஏலத்தில் வெளியிடவுள்ளார். இம்முறையில் மிக உயரிய விலைக்கு இந்த இசைத் தொகுப்பினை எவர் வேண்டுமானாலும் வாங்க முடியும். அந்த வகையில் இதன் மூலம் கிடைக்கும் நிதி, நமது தமிழக முதல்வர் நிவாரண நிதி அமைப்பிற்கும், இக்காலகட்டத்தில் பணியின்றி தவிக்கும் இசைத் துறை சார்ந்தோருக்கும் பிரித்து அளிக்கப்படவுள்ளது. இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, “சாஹோ’ படத்தில் இடம் பெறாத ஹீரோவின் தீம் இசையை,…
Read Moreஇயக்குனர் ஷங்கரை சுற்றி தொடரும் வழக்கு – சர்ச்சை
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே பல தடைகளைச் சந்தித்து வருகிறது. கொரானா பரவல், படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, காவல்துறை வழக்கு எனப் பல தடைகளைச் சந்தித்து இப்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியான அறிவிப்பில், இயக்குநர் ஷங்கர் – நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் புதிய படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது. இதனால் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் தயாாரிப்பான ‘இந்தியன் -2’ படத்தை…
Read More19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது.
19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. (19th PUNE INTERNATIONAL FILM FESTIVEL – 2021) 11th TO 18th MARCH மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும் 19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது, வருடம்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு எனது கட்டில் திரைப்படத்திற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இத்தருணத்தில் புதுமுயற்சியாக “கட்டில் திரைப்பட உருவாக்கம்” என்ற நூலை வெளியிடுகிறேன். சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு…
Read MoreNayanthara’s image created by Qube
Nayanthara’s image created by Qube. Tamilnadu Cube Association proudly presents the mosaic of Actress Nayanthara mam of cini industry as a celebration of Women’s Day special. The TNCA TEAM ( Dr. R. Chandrika, R. Bindu Priyanka, R. Bhuvana, V. Sangeetha, R. Priya) has made mosaic of Actress Nayanthara in 950 cubes as a tribute to lady superstar Nayanthara for her dedication and hard work in Carrier. she had hit and misses she was in a tough face for sometime where she kept battling personal problems. She attained the level…
Read More