மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்!

Shark 9 pictures சார்பில் சிவா கில்லரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓட்டிக்கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர என்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. மனித உணர்வுகளை அழகாகவும் அழுத்தமாகவும் இயக்குனர் பேசி இருப்பதாக ரசிகர்கள் பொது மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே படமாக்கி இருப்பதால் இப்படம் மக்களிடம் சென்றிருக்கிறது. தற்போது போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள்…

Read More

‘தங்கலான்’ படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்!

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தங்கலான்’. சீயான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்து பாராட்டுகிறார்கள். இந்த தருணத்தில் சீயான் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின் வெற்றிக்காக படத்தில் கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள் , அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சீயான் விக்ரம் வரவேற்றார். பின்னர் படத்தில் கடுமையாக உழைத்ததற்காக அங்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் தம்முடைய நன்றியை தெரிவித்தார் சீயான் விக்ரம். இதற்கு முன்…

Read More

100 கோடி வசூலை நோக்கி பயணிக்கும் தங்கலான் !!

சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது. தங்கலான் திரைப்படம், சீயான் விக்ரம் அவர்களுக்கு அவரது திரை வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முதல் நாள் வசூலை கொண்டு வந்தது. ரூபாய் 26 கோடிக்கும் மேல் முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்த இப்படம், தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது வாரம், தமிழ்நாட்டில் பல புதிய திரைப்படங்கள் வெளியாகி இருந்த போதிலும், வசூலில் ஸ்டெடியாக இப்படம் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் மற்றும் தெலங்கானாவில், பெரும் வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் இப்படம் 141 தியேட்டர்கள் அதிகரித்து, தற்போது 391…

Read More

நடிகர் ரஞ்சித், மெகாலி மீனாட்சி விட்டல் ராவ் நடித்துள்ள இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது..!!

 வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இறுதி முயற்சி திரைப்படத்தினை இயக்குனர் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார்.. இறுதி முயற்சி திரைப்படம் இனிதே நிறைவு பெற்றதை கொண்டாட படக்குழுவினர் மனநலம் குன்றிய சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்க்கு சென்று அங்கு படிக்கும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களை சந்தோஷ படுத்தி அந்த மனநலம் குன்றிய சிறுவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்று வந்தனர்… இந்த இறுதி முயற்சி திரைப்படம் சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதை பதைக்க வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இறுதி…

Read More

விடுதலையின் கருத்தை மறுவரையறை செய்யும் விடுதலைப் பாடல்:

விடுதலையைப் புறவெளியில் தேடியலையும் மனிதன் நாள்தோறும் தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்ளும் அகவிடுதலையைப் பற்றி சிந்திக்க வேண்டுமென்ற கருப்பொருளோடு வெளியாகியுள்ளது ‘விடுதலைப் பாடல்’. ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைப்பில், மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலைத் தீபக் புளூ பாடியுள்ளார். தேர்வுகளின் தடைகளில் இருந்து அறிவு தேடும் விடுதலை, தோல் நிறத்தின் மதிப்பீடுகளிலிருந்து மெய்யழகு வேண்டும் விடுதலை, பொய்களின் சுமையிலிருந்து விடுபட விரும்பும் உண்மை, தொடுதிரையிலிருந்து விரல்கள் கோரும் விடுதலை என அன்றாடம் நம்மை நாமே சிறைப்படுத்திக்கொண்டு வாழ்வதைத் தகர்த்தெறிய இப்பாடல் வலியுறுத்துகிறது. இதோடு நம் நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த வீரர்களையும் போற்றுகிறது. விடுதலையின் பொருளை நாம் மறுமதிப்பீடு செய்துகொள்ள வேண்டுமென்ற ஆழமான கண்ணோட்டத்தை வலியுறுத்தும் இந்தப்பாடலை அபிநாத் சந்திரன் தயாரிக்க மதுரை குயின் மிரா பள்ளி வெளியிட்டுள்ளது. இளைஞர்களின் துள்ளளான நடன அசைவுகளோடு உருவாகியுள்ள விடுதலைப்பாடலின் ஒளி வடிவம் பா…

Read More

எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா!!

இந்த பல்கலை கழகத்தில் உலக அளவிலே, இந்திய அளவிலே எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நாடு போற்றுகிற வகையில் இருக்கும். வரலாற்று சிறப்பு மிக்க உலக தமிழர்கள் ஆராய்ச்சி மாநாடு நடத்த வேண்டும். எஸ்.ஆர்.எம் நிறுவனரும், தமிழ்ப்பேராயம் நிறுவனவேந்தருமான டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் பெருமிதம். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலக முழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது தமிழ்ப்பேராயம். தமிழ்ப்பேராயத்தின் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் திட்டம். 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பன்னிரண்டு தலைப்புகளில் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் மற்றும் சீரிய தமிழ்ப் பணியாற்றும் தமிழ் இதழ்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் பயன்பெறும் விதத்தில் விருதுகள் வழங்கப்பட்டு…

Read More

கயாக் ஃபில்ம்ஸ் ஆஷிக் ஜோயல் இயக்கத்தில், EFL குளோபல் தயாரிப்பில், ‘மீண்டும் நம்பிக்கையை கண்டறிதல்: யீன் உதான் மூலம் பயணம்’

விருது பெற்ற அரசு சாரா நிறுவனமான யீன் உதான் பற்றிய இந்த ஆவணப்படம், தமிழ்நாட்டின் பழமையான தோபிகாட், வறுமையின் சங்கிலியிலிருந்து விடுபடும் இளம் மாணவர்களின் போராட்டத்தையும் கனவுகளையும் காட்டுகிறது. இது அவர்களின் குடும்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் தாக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கைவிடப்பட்ட குழந்தைகள், இளைஞர்கள், பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், திருமதி வேதிகா அகர்வால் 2017 இல் யீன் உதான் நிறுவப்பட்டது. யீன் உதானின் ஆவணப்படத்தின் திரையிடல் தி-நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸில் நடைபெற்றது. திருமதி ஆண்டாள் அகோரம், திருமதி அர்ச்சனா கல்பாத்தி, மற்றும் செல்வி ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரால் இந்நிகழ்வு சாத்தியமாகியது. இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் திருமதி அப்சரா ரெட்டி கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முயற்சியைப் பாராட்டினார். கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமூக ஆர்வலராக தனது…

Read More

கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி!!

 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வர் ஆவார் என கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் மற்றும் கொடி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக மக்களால் அறியப்படும் நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் கட்சியின் கொடி. கொடி பாடல் அறிமுக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நடிகர் விஜய் அவர்களுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துள்ளேன். மிகவும்…

Read More

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 21-வது பொதுக்குழு கூட்டம்!!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் மூத்த எழுத்தாளர் திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுக்கு, எழுத்தாளர் சங்கத்தில் இருநூற்றி மூன்று (203) கதைகளை பதிவு செய்து சாதனை படைத்தமைக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் 21வது பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.

Read More

பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் மூன்றாமாண்டு துவக்க விழா!

   *பன்னாட்டு திரை பண்பாடு ஆய்வகத்தின் மூன்றாமாண்டு துவக்க விழாவில் இளங்கலை திரைப்படக் கல்வியும் (B.Sc Film Studies) மற்றும் ஓராண்டு முதுகலை திரைப்பட இயக்க பட்டய படிப்பும் (PG Diploma in Film Direction) சிறப்பு விருந்தினர் விஜய் சேதுபதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டன.* பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் திரைத்துறை கனவுகளை நிஐமாக்கும் நோக்கத்தில் பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் இயக்குநர் திரு.வெற்றிமாறன் அவர்களால் 19-08-2022 அன்று நிறுவப்பட்டது. இந்நிறுவனம் துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாமாண்டு துவக்க விழாவையொட்டி இன்று மேற்கண்ட படிப்புகள் துவங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடன், நிறுவனத் தலைவர் வெற்றிமாறன்,ஆர்த்தி வெற்றிமாறன் மற்றும் பேராசிரியர் ராஜநாயகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் திருமிகு.வளர்மதி…

Read More