ஏப்ரல் 14ல் மோகன் நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் “ஹரா”வின் டீசர்

  பரப்பரப்பான பான் இந்தியா ஆக்ஷன் படமான ‘ஹரா’ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி-யின் சமீபத்திய படைப்பான ‘பவுடர்’ ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படமான ‘ஹரா’-வின் டீசர் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது. பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். டீசரை தொடர்ந்து திரைப்படம் விரைவில் திரையரங்களில் வெளியாகவுள்ளது, அதுவும் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. ‘ஹரா’ திரைப்படத்தின் அதிரடி முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசர்…

Read More

சுயம்பு -வில் நிகிலுடன் இணையும் நபா நடேஷ்

பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் நிகில் நடிப்பில் உருவாகும் ‘சுயம்பு’ படத்தில் நடிகை நபா நடேஷ் இணைந்துள்ளார்!   ’கார்த்திகேயா 2’ படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பிரபலமடைந்த நிகில் தற்போது நடிக்கும் ’சுயம்பு’ திரைப்படம் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகும். பழம்பெரும் வீரராக நடிக்கும் நடிகர் நிகில் படத்தில் தன் கதாபாத்திரத்திற்காக ஆயுதம், தற்காப்பு கலை, குதிரை சவாரி போன்றவற்றில் தீவிர பயிற்சி எடுத்துள்ளார். பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் நடிகர் நிகிலின் இருபதாவது படமாகும். தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் இந்த பான் இந்தியா படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். ’சுயம்பு’ திரைப்படம் உயர்தர தொழில்நுட்ப மற்றும் அதிக தயாரிப்பு மதிப்புகளுடன் உருவாகிறது. இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.…

Read More

கள்வன் குடும்பங்களை கவர்ந்திழுக்கும் பொழுதுபோக்கு திரைப்படம்

தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தரம்மிக்க படைப்புகளைத் தயாரிப்பதன் மூலம் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்திலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் இப்போது வரவிருக்கும் ‘கள்வன்’ படத்தின் மூலம் பார்வையாளர்களை கவர தயாராகி வருகிறது. ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி எப்போதும் பல்வேறு ஜானர் மற்றும் தனித்துவமான கதைக்களங்களைக் கொடுக்க ஆர்வமுடன் உள்ளது என்கிறார் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு. அட்வென்ச்சர் ஜானரில் ஏதாவது புது முயற்சி செய்ய வேண்டும் என காத்திருந்தபோது, ‘கள்வன்’ திரைக்கதை மூலம்…

Read More

‘பிபி 180’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளியான டேனியல் பாலாஜிக்கான அஞ்சலி குறிப்பு!

எங்கள் ‘பிபி 180’ திரைப்படத்தின் வில்லனாக நடித்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி குறிப்பு! அன்புள்ள டேனியல், அதுல் இந்தியா மூவிஸ் ஆழ்ந்த வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் தனித்துவமான நடிகர் மற்றும் ஒரு நல்ல மனிதருக்கு பிரியாவிடை கொடுக்க இந்த அஞ்சலி குறிப்பை எழுதுகிறோம். உங்களது இந்த திடீர் மறைவு சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் திறமை, ஆர்வம் மற்றும் உங்கள் கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் உட்பட பலரது மனதிலும் அழியாத இடத்தை விட்டு சென்றிருக்கிறது. உங்களது கடைசி திரைப்படமான ’பிபி 180’ இன் தயாரிப்பாளர் என்ற முறையில் கதாபாத்திரங்களை ஆழமாகவும், நுணுக்கமாகவும், நம்பகத்தன்மையுடனும் திரையில் கொண்டு வருவதற்காக எந்த அளவுக்கு நீங்கள் இணையற்ற அர்ப்பணிப்பை கொடுக்கிறீர்கள் என்பதை நேரடியாக காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. திரையில் உங்கள் நடிப்பு…

Read More

சூப்பர்குட் சுப்பிரமணி கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரமன்’

இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ‘ஜெய்பீம்’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் சபரிஸே மேற்கொண்டுள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை வேல்முருகன், முகேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனை தமிழ் சினிமாவின்…

Read More

புதுமையான வடிவத்தில் அசத்தும் “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

  ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், D. கருணாநிதி தயாரிப்பில், சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கேன் (can).” புதுமையான வடிவத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களின் மனதில் இடம் பிடித்த ஆடம்ஸ், திரைப்படங்களில் 4 வருடகாலம் உதவி இயக்குநர், இணை இயக்குநராக பணியாற்றிய பிறகு, முதன்முறையாக இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய தலைமுறை இளம்பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி, நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஆடம்ஸ். படத்தின் கதாபாத்திரங்களைக் கலைத்துப் போட்டு, ஒரு புதிய முகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கும், நவீன வடிவிலான ஃபர்ஸ்ட்…

Read More

அல்லு அர்ஜூன் பிறந்தநாளில் “புஷ்பா: தி ரூல்” டீஸர் வெளியீடு

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அட்டகாசமான டீசருடன் சுகுமார் & குழு தயாராக உள்ளது. புஷ்பா ராஜின் மேஜிக்கை மீண்டும் திரையில் காணத் தயாராகுங்கள்! ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது. இயக்குநர் சுகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் பான்-இந்தியா படம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் என உறுதியளிக்கிறது. நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று இப்படத்தின் அசாதாரணமான, அட்டகாசமான மற்றும் பவர்-பேக்ட் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான்-இந்திய படத்தின் சீக்வல் மூலம் வெள்ளித்திரையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த…

Read More

”நான் போட்ட விதை இன்று வளர்ந்து நிற்பது பெருமையாக உள்ளது” – மாஸ்டர் ராகவா லாரன்ஸ்

தனது 20 வருட கனவு தற்போது நினைவாகியுள்ளது நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும் உதவிகள், அவரை ஒரு மிகப்பெரும் நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வரும் உதவிகளுக்கு பலனாக, இன்று அடுத்த தலைமுறை எழுந்து நிற்கிறது. இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுளார். மாஸ்டர் ராகவா லாரன்ஸ், கடந்த 20 ஆண்டுகளாக சமூகத்தில் பல உதவிகளைச் செய்து வருகிறார். உடல் ஊனமுற்ற குழந்தைகள் அவரின் இலவச நடன பள்ளியில் பயின்று பெரிய இடத்தை அடைந்துள்ளனர். பல ஏழைக்குழந்தைகளையும் ஒரு ஹாஸ்டல் மூலம், தங்க இடம் தந்து அவர்களை படிக்கவும் வைத்து, அவர்கள் வாழ்வில்…

Read More

விஜய் ஆண்டனியின் “ரோமியோ” ஒரு ரொமாண்டிக் காமெடித் திரைப்படம்

  விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள மகிழ்ச்சியான ரொமாண்டிக்- காமெடி படம் ‘ரோமியோ’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தப் படம் ஏப்ரல் 11, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் பகிர்ந்து கொண்டதாவது, “ஒவ்வொரு இயக்குநருக்கும் விஜய் ஆண்டனி சாருடன் பணிபுரிய வேண்டும் என்று கனவு இருக்கும். ஏனென்றால் அவர் அனைத்து வயதினருக்கும் பிடித்த ஹீரோ. தனித்துவமான ஜானர் மற்றும் புதிய கதைக்களங்களை முயற்சி செய்ய யாராவது விரும்பினால் அவர்தான் டாப் சாய்ஸாக இருப்பார். நான் ‘ரோமியோ’ படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்ததும் ​​விஜய் ஆண்டனி சார் அதில் நடிக்க வேண்டும் என்று…

Read More

“ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் படமாக ‘சாமானியன்’ இருக்கும்” ; ராமராஜன் பெருமிதம்

  நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார் தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் R.ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடிகின்றனர். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ்…

Read More